வெள்ளி, 15 மே, 2015

சாத்தான் கட்டுக்கதை: தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும் - பகுதி #3

நண்பர்களே,

[இது “தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும்” என்கிற  தொகுதியின் மூன்றாம் பகுதி. இதை வாசிக்கும்முன் #1, #2 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.]

தேவகுமாரர் என்றால் தேவனை பின்பற்றுகிற, தேவனை தொழுகிற மக்கள் என்பதை இரண்டாம் பகுதியில் பார்த்தோம். அப்படியானால்,


நோவாவின் காலத்தில் உண்மையான தேவகுமாரர்கள் இருந்தாரா?



ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்பதற்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் என்று வசனம் கூறுகிறது. [அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள ஸ்ட்ராங்ஸ் எண்களை கவனிக்கவும்]

ஆதி 12:8 .... கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய[H3068] நாமத்தைத்[H8034] தொழுதுகொண்டான்[H7121]. 
ஆதி 13:4 ... ஆபிராம் கர்த்தருடைய[H3068] நாமத்தைத்[H8034] தொழுதுகொண்டான்[H7121].
ஆதி 21:33 ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய[H3068] நாமத்தை[H8034] அவ்விடத்தில் தொழுதுகொண்டான்[H7121]. 

(ஆதி 26:25, 1ராஜா 18:24; 2ராஜா 5:11; 1நாளா 16:8; சங் 99:6, 105:1, 116:4, 13, 17; ஏசா 12:4, புலம் 3:55, யோவே 2:32, செப் 3:9 போன்ற வசனங்களும் கூட காணவும்)

வேதத்தில் “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டார்கள்” என்கிற சொற்றொடர் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது ஆதியாகமம் 4ம் அதிகாரத்திலே என்பதை பெரும்பாலும் கிறித்தவர்கள் கவனிக்கவில்லை.

ஆதி 4:26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.  
வேதத்தின் அடிப்படையில் தேவனை / கர்த்தரை தொழுதுகொள்பவர்களே தேவகுமாரர்கள். அப்படி பார்க்கும்போது, நோவாவின் காலத்துக்கு முன்னமே தேவகுமாரர்கள் இருந்தார்கள்.


மனித குமாரர்களும் குமாரத்திகளும்.



ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் இரண்டு வகையான மனிதர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளதை பெரும்பாலும் கிறித்தவர்கள் கவனிக்கிறதில்லை.  காயீன் ஆபேலை கொலைபண்ணினதைப் பற்றி விவரித்த பிறகு கயீனுடைய பிள்ளைகளைப் பற்றி விவரிக்கிற பகுதியின் கருத்தை பெரும்பாலும் பேர்கள் உணர்ந்துகொள்வதில்லை அல்லது கவனிக்கவில்லை.

ஒரு பக்கத்தில் சேத்தின் பிள்ளைகள் கர்த்தரை பின்பற்றி, தொழுதுகொண்டிருக்கும்போது, மறு பக்கத்தில் காயீனுடைய பிள்ளைகள் அப்படியிருக்கவில்லை. முதலாவதாக, கயீனைப் பற்றி வேதம் “பொல்லாங்கனால் உண்டானவன்” என்று கூறுகிறதை கவனிப்போம்:

1யோவா 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போல் இருக்கவேண்டாம்;...

(மத் 13:38; எபே 6:16; 1யோவா 2:13, 14; 3:12; 5:18 போன்ற வசனங்களையும் கவனிக்கவும்)

கயீனுடைய பிள்ளைகளின் பொல்லாங்குகள்:



ஆதாமிலிருந்தும் ஏழாந்தலைமுறையான லாமேக்கைப் பற்றி வாசிக்கும்போது அவனுடைய பொல்லாங்கு பன்மனைமணம் (பலமுறை திருமணம் பண்ணுகிறது) என்பதை நாம் கவனிக்கிறதில்லை:

ஆதி 4:19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர். 

மீண்டும் தூபால்காயீனைப் பற்றி வாசிக்கும்போது அவன் ஒரு கொல்லராக இருந்தார் என்பதையும் கவனிக்கமாட்டோம்.

ஆதி 4:22 சில்லாளும் தூபால்காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்;...

ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் தொடர்ந்துவருகிறது லாமேக்கய யாரையோ கொன்றதைப் பற்றிய விவரணை:

ஆதி 4:23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்

தன் மக்களில் ஒருவன் ஆயுதத்தை உண்டாக்கினார், தந்தை ஒருவரை கொலைசெய்தார். கயீனுடைய குடும்பத்தின் செயல்பாட்டு வரலாறு எப்படியிருக்கிறது?

இன்னும் முடியவில்லை! “யூபால் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்” (ஆதி 4:21) என்று வாசிக்கும்போது, “பார், கின்னரம், நாகசுரம் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி வேதம் கூறுகிறதே” என்பதாக ஆச்சரியப்படுகிறதைத் தவிர, அந்த இசைக்கருவிகள் வேறு தேவர்களை போற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதாக யோசிக்கமாட்டோம். வேதத்தில் இந்த இசைக்கருவிகள் கர்த்தரை அல்லது வேறு தேவர்களை (அந்நியதேவர்களை) போற்றுவதற்கு பயன்படுத்துகிறதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதுவும் அல்லாமல், துன்மார்க்கர் இசைக்கருவிகளை துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதுண்டு. யோபு இதைப்பற்றி மறைமுகமாக பேசுகிறார்:

யோபு 21:7 துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
யோபு 21:12 அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் காயீனின் பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் இவைகளே:


  • பன்மனைமணம் (பலமுறை திருமணம் பண்ணுகிறது) 
  • கொலை, யுத்தம்.
  • துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம்.
  • அந்நியதேவர்களை தொழுதுகொள்வது.


தேவகுமாரர்களிலிருந்தும் இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மாம்சத்தின் பிள்ளைகள் என்பதாக பவுல் கூறுகிறார்:

ரோம 9:8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். 

மாம்சத்தின் பிள்ளைகள் தேவகுமாரர்கள் அல்லை! “சந்ததி” என்கிற வார்த்தை ஆதி 3:15க்கு தொடர்புள்ளது என்பதை கவனிக்கவும்.

பகுதி #4ல் முடிவுபெறும்...
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்

சாத்தான் கட்டுக்கதை: தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும் - பகுதி #4

நண்பர்களே,

[இது “தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும்” என்கிற  தொகுதியின் நான்காம் பகுதி. இதை வாசிக்கும்முன் #1#2, #3 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.]

தேவகுமாரர்களும் மனிதகுமாரத்திகளும், அந்நிய நுகத்திலே பிணைக்கப்படுகிறதும்.


பிரதர், நீங்கள் சொல்வது உண்மையானால், தேவகுமாரர்கள் வெறும் மனிதர்கள் தானே, அவர்கள் மனிதகுமாரத்திகளை திருமணம் பண்ணுவது தப்பா? என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்பும், இல்லையா? முதலாவதாக தேவகுமாரர்கள் என்ன பண்ணினார்கள் என்று வேதம் கூறுகறதை கவனிப்போம்:

ஆதி 6:2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்கு உள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

பொதுவான தமிழ்பெயர்ப்பில் எபிரேயு வேதத்திலிருக்கும் ஒருசில வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதினால், கத்தோலிக்க மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்தும் குறிப்பிடுகிறேன்.

Gen 6:2 That the sons of God saw the daughters of men that they were fair; and they took[H3947] them wives[H802] of ALL[H3605] which they chose.

ஆதி 6:2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்துகொண்டவர்களை “எல்லாம்” மனைவியர் ஆக்கிக்கொண்டனர். (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)

கவனமாக வாசியுங்கள்: அவர்கள் தேர்ந்துகொண்டவர்களை திருமணம் பண்ணினாரகள் என்பதாக எழுதப்படாமல், தேர்ந்துகொண்டவர்களை “எல்லாம்” திருமணம் பண்ணினாரகள் என்பதாக எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள். அதாவது, தேவகுமாரர்கள் கயீனுடைய பிள்ளைகளைப்போல் பல (ஒன்றுக்கு மேற்பட்ட) பெண்களை திருமணம் பண்ணினார்கள்.


கொலையிலிருந்தும் அக்கிரமத்துக்கு முன்னேற்றம்!



ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் காயீனும் பிள்ளைகளும் கொலை செய்தார்கள். 6ம் அதிகாரத்துக்கு வரும்போது கொலையிலிருந்தும் அக்கிரமத்துக்கும் வன்முறைக்கும் வளர்ந்தது.

ஆதி 6:5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, 
ஆதி 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. 
ஆதி 6:7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். 

[நெஃபிலிம்கள் நிமித்தம் தேவனுடைய மனதுக்கு வருத்தமாயிற்று என்றோ, நெஃபிலிம்களை அழிப்பார் என்றோ தேவன் கூறவில்லை என்பதை கவனியுங்கள்.]

தேவனுடைய பிள்ளைகளும் திருமணவும்:


தேவனுடைய பிள்ளைகள் அந்நியதேவர்களின் பிள்ளைகளையும், விக்கிரகங்களுக்கு வழிபடுகிறவர்களையும் திருமணம் பண்ணுகிறதை பழைய ஏற்பாடு விலக்குகிறது.

உபா 7:1 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
உபா 7:2  உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
உபா 7:3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
உபா 7:4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.

இஸ்ரவேல் மக்கள் சுற்றிலுமுள்ள ஜாதிகளிலிருந்தும் பெண்களை கொண்டதை கேள்விப்பட்ட எஸ்றா தன் வஸ்திரத்தையும், சால்வையையும் கிழித்துகொண்டு,  தலையிலும் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டு சொன்னது: (எஸ்றா 9ம் அதிகாரம் முழுவதும் வாசியுங்கள்.)

எஸ்றா 9:6 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. 

கர்த்தர் மோசே வழியாக எச்சரிப்புகளை நினைப்பூட்டிக்கொண்டு அவர் சொன்னதை கவனியுங்கள்:

எஸ்றா 9:14  நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ?
எஸ்றா 9:15  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன். 

தேவனுடைய குமாரர்கள் அந்நியஜாதிகளுடன் கலப்பு திருமணம் செய்கிறது கர்த்தருடைத பார்வையில் அருவருப்பான விஷயம்; அப்படி பண்ணுவவர்களை கர்த்தர் அழிப்பார், அதுதான், ஆதியாகமம் 6ல் நடந்தது.

கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்

ஞாயிறு, 10 மே, 2015

சாத்தான் கட்டுக்கதை: தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும் - பகுதி #2

நண்பர்களே,

[இந்த பதிவை வாசிக்கும் முன் இதன் முதல் பகுதியை வாசிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]



பெரும்பாலும் கிறித்தவர்களிடம் ஆதி 6:2ல் குறிப்பிட்டுள்ள “தேவகுமாரர்கள்” யார் என்று கேட்டால் “தேவதூதர்கள்” என்று பதிலளிப்பார்கள். ஆதாரம் என்ன என்று கேட்டால் யோப் 1:6; 2:1 என்று பதிலளிப்பார்கள்.

யோப் 1:6 ஒருநாள் தேவ<H430> புத்திரர்<H1121>  கர்த்தருடைய<H3068> சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். 
யோப் 2:1 பின்னொருநாளிலே தேவ<H430> புத்திரர்<H1121>  கர்த்தருடைய<H3068> சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான். 

இல்லை, யோப் 1:6; 2:1 வசனங்களில் தேவபுத்திரர் (தேவகுமாரர்) என்றால் தேவதூதர்கள் என்று கூறப்படவில்லை.

யோப் 1:6; 2:1ல் குறிப்பிட்டுள்ள தேவபுத்திரர் யார் என்று கேட்டாலும் தேவதூதர்கள் என்பார்கள். ஆதாரம் என்ன என்று கேட்டால் ஆதி 6:2 என்பார்கள்.

நண்பர்களே, தேவபுத்திரர் அல்லது தேவகுமாரர் என்றால் தேவதூதர்கள் என்று கூறுகிற ஒரு வசனம் கூட வேதத்தில் இல்லை! (ஒருவேளை யோப் 38:7ல் தேவபுத்திரர் என்பதாக குறிப்பிட்டுள்ளது தேவதூதர்களைப் பற்றியே என்று வாதிக்கலாம்.)

வேதத்தில் எங்கும் தேவபுத்திரர்கள், தேவகுமாரர்கள் அல்லது தேவனுடைய மக்கள் என்கிற பயன்பாடுகளுக்கு தேவனை நம்புகிற தேவனை வணங்குகிற மனிதர்கள் என்பதே விளக்கம் (அர்த்தம்). தமிழில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது முக்கியமல்லை, எபிரேயு மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளே முக்கியம்.

பிள்ளை(கள்), குமாரன்/குமாரர்கள், புத்திரன்/புத்திரர் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேயு வார்த்தை 'பென்' (bane, ஸ்ட்ராங்ஸ் அகராதியில் H1121)
தேவன் - ஏலோஹீம் (el-o-heem' H430)
யெகோவா, கர்த்தர் - (yeh-ho-vaw' H3068)

பழைய ஏற்பாடில் இஸ்ரவேல் மக்களைப் பற்றி தேவனுடைய மக்கள் அல்லது புத்திரர்கள் என்பதாக கூறுகிற ஒருசில வசனங்கள்:

உபா 14:1 நீங்கள் உங்கள் தேவனாகிய<H430> கர்த்தரின்<H3068> பிள்ளைகள்<H1121>; ...
சங் 82:6 நீங்கள் தேவர்கள்<H430> என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள்<H1121> என்றும் நான் சொல்லியிருந்தேன்.
ஓசி 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை<H1121> வரவழைத்தேன். 
யாத் 4:22  ... இஸ்ரவேல் என்னுடைய குமாரன்<H1121>, என் சேஷ்டபுத்திரன். 
ஏசா 43:6 ... தூரத்திலிருந்து என் குமாரரையும்<H1121>, பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,...

புதிய ஏற்பாடில் தேவனுடைய குமாரர்கள் யார் என்பதற்கு தெளிவான வரையறை (விளக்கம்) அளிக்கப்பட்டுள்ளது. யோவான் 11:51-52ல் காய்பா இஸ்ரவேல் மக்களை தேவனுடைய பிள்ளைகள் என்று குறிப்பிட்டதை கவனிக்கவும்:
யோவா 11:51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், 
யோவா 11:52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதைப் பற்றி யோவான்:

யோவா 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 

தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதற்கு பவுல் கூறுகிற விளக்கம்:

ரோம 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்

வேதாகமத்தில் எங்கும் தேவகுமாரர், தேவபுத்திரர், அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்பதின் விளக்கம் (அர்த்தம்) தேவனை பின்பற்றுகிறவர்கள், அல்லது தேவனை தொழுதுகொள்பவர்கள் என்பதே.

தொடரும்...
கிறிஸ்துவுக்குள்.
டோம்ஸான் கட்டய்க்கல்

சனி, 9 மே, 2015

சாத்தான் கட்டுக்கதை: தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும் - பகுதி #1

நண்பர்களே,

இந்த இரண்டு வசனங்களை கவனமாக வாசியுங்கள்:

ஆதி 6:2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதி 6:4 அந்நாட்களில் இராட்சதர் <H5303> பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

[H5303 என்கிற எண்ணுடைய எபிரேயு வார்த்தையின் உச்சரிப்பு நெஃபில். இந்த வார்த்தையிலிருந்தும் நெஃபிலிம் - Nephilim - என்கிற ஆங்கில வார்த்தை உண்டாயிற்று.]

இது உண்மையான புகைப்படம் அல்லை, இது ஒரு புரளி (Hoax)


இந்த 2 வசனங்களின் அடிப்படையில் எண்ணற்ற கட்டுக்கதைகள் எழும்பி பொதுமக்கள் இடையில் பரம்பியிருக்கிறது. உண்மை சொன்னாலும் கூட மக்கள் நம்பாதபடிக்கு கட்டுக்கதைகள் பரம்பியுள்ளன.

போலி விஞ்ஞானிகள் நெஃபிலிம்களுக்கு (இராட்சதர்) 72 அடி உயரம் இருந்தது என்றும், இன்னும் சிலர் 450  அடி உயரம் இருந்தது என்றும் கூறுவதுண்டு. அவர்களுடைய எண்ணங்களுக்கு அத்தாட்சியாக எண் 13:33 எடுத்துரைக்கிறார்கள்:

எண் 13:33 அங்கே இராட்சதப்<H5303> பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். 

கட்டுக்கதையை அம்பலப்படுத்துகிறது:


“விழுந்துபோன தூதர்கள்” மனிதப் பெண்களுடன் உடலுறவு கொண்டதினால் நெஃபிலிம்கள் (இராட்சதர்கள்) பிறந்தார்கள் என்று பெரும்பாலும் பேர்கள் நம்புகிறார்கள்.

புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு 1½ அடி உயரம் இருக்கும், அதாவது முழு வயதுவந்தோர்களின் உயரத்தின் ¼  உயரம் ஒரு குழந்தைக்கு இருக்கும். அப்படியானால், 72 அடி உயரமுடைய ஒரு நெஃபிலிம் பிறந்த சமயத்தில் அதற்கு 18 அடி உயரம் இருக்கவேண்டும். 6 அடி மட்டும் உயரமுடைய ஒரு மனிதப் பெண்ணுக்கு 18 அடி உயரமுடைய ஒரு குழந்தயை பெற்றெடுக்கக் கூடுமா? (முழு வயதுவந்த ஒரு நெஃபிலிமுக்கு 450 அடி உயரமிருந்தால் அது பிறந்தபோது அதற்கு 112½ அடி உயரம் இருக்கவேண்டும். கட்டுக்கதைகள் உண்டுபண்ணுகிற போலி விஞ்ஞானிகளுக்கு 6 அடி உயரம் மட்டுமுள்ள மனிதப் பெண்கள் 18 அடி, அல்லது 112½ அடி உயரமுடைய குழந்தைகளை எப்படி பெற்றெடுப்பார் என்கிற கேள்விக்கு பதிலளிக்கமுடியுமா?

ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் இதைப்போன்ற கட்டுக்கதைகளால் ஏமாற்றப்பட்டு நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகள் என்று புகைப்படங்களை முகநூல் (Facebook) போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றுவதுண்டு; ஆனால் ஃபோட்டோஷாப் பண்ணப்பட்ட புகைப்படங்கள் என்றும் “Shadow of the Colossus” போன்ற வீடியோ கேம்களின் விளம்பரங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்றும் தெரியாமல் இருக்கிறார்கள்.

ஜலப்பிரளயத்துக்கு முன்பு பிழைத்திருந்த விலங்குகளுடையும் பறவைகளுடையும் எலும்புக்கூடுகள் காட்சியகங்களில் (Museums) இருக்கின்றன. 72 அடி, அல்லது 450 அடி உயரமுடைய நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகள் மட்டும் ஏன் காட்சியகங்களில் இலலை? புகைப்படங்களை பார்த்த ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள், ஆனால் உண்மையான நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகளை பார்த்தவர்கள் யாரும் இல்லை. 2004 டிசம்பரில் தமிழ் நாட்டில் சுனாமி உண்டானபோது நெஃபிலிம்களின் எலும்புக்கூடு ஒன்று கடற்கரையில் காணப்பட்டதாம், ஆனால் தமிழ் நாட்டில் யாரும் அதை பார்க்கவில்லை, அமெரிக்காவில் யாரோ அதின் புகைப்படம் பார்த்தாராம்!

அதற்கு அப்புறமும்...


ஆதியாகமம் 6:4 பொதுவான தமிழ் மொழிபெயர்ப்பில் சரிசயாக வராததால் இன்னும் ஒருசில மொழிபெயர்ப்புகளிலிருந்தும் எடுத்துரைக்கிறேன்:

1) தெய்வப்புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர்பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர். (கத்தோலிக்க மொழிபெயர்பு)
2) அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராக்ஷதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர். (WBTC மொழிபெயர்பு)
KJV Gen 6:4 There were giants (Nephilim) in the earth in those daysand also after that, when the sons of God came in unto the daughters of men, and they bare children to them, the same became mighty men which were of old, men of renown. 
ASV Gen 6:4 The Nephilim were in the earth in those daysand also after that, when the sons of God came unto the daughters of men, and they bare children to them: the same were the mighty men that were of old, the men of renown. 
ESV Gen 6:4 The Nephilim were on the earth in those daysand also afterward, when the sons of God came in to the daughters of man and they bore children to them. These were the mighty men who were of old, the men of renown. 


அதாவது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடின நாட்களிலும், அதற்கு பிறகும் இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள். கவனிக்கவேண்டிய விஷயங்கள்:


  1. இராக்ஷதர்கள் மனுஷகுமாரத்திகளோடே கூடவில்லை.
  2. மனுஷகுமாரத்திகள் தேவகுமாரர்களுக்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த காலத்திலும் அதற்கு பிறகும் இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள் என்பதே அல்லாமல், மனுஷகுமாரத்திகள் இராக்ஷதர்களை பெற்றெடுத்தார்கள் என்று வசனம் கூறுபதில்லை. (பரிவுடன் வேறுவேறு வேதாகம மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு பாருங்கள்.)


ஜலப்பிரளயத்துக்கு அப்புறமும் கூட இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது:

எண் 13:33 அங்கே இராட்சதப் <H5303> பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

இந்த வார்த்தைகள் யோசுவா, காலேப் என்பவர்களுடன் கானான் நாட்டை வேவுபார்க்கப் போய் வந்தவர்கள் பரம்பச்செய்த துர்ச்செய்திகளுக்கு உட்பட்டவை என்பதை ஒத்துக்கொள்கிறேன்; ஆகிலும், ஏனாக்கின் குமாரர் அங்கே இருந்தார் என்பதற்கும் அவர்கள் இராட்சதர்களாக இருந்தார் என்பதற்கும் ஐயம் இல்லை. [ஏனாக்கின் குமாரர்களைப் பற்றி எண்.13:22,28,33; உபா. 1:28; 2:10,11,21; 9:2; யோசு.11:21,22; 14:12,15; 15:13,14; 21:11; நியா. 1:20 என்கிற வசனங்களில் வாசிக்கவும்.]

இராட்சதர்கள் அனைவரும் ஏனாக்கின் குமாரர்கள் அல்லை, நெஃபிலிம்கள் அனைவரும் ஏனாக்கின் குமாரர்களாக இருந்தார்கள்.

உண்மையாகவே நெஃபிலிம்களுக்கு 72 (அல்லது 450) அடி உயரமிருந்தால் 6 அடிக்கு கீழ்ப்பட்ட உயரமிருந்த காலேபுக்கு தனியாளாக அப்படிப்பட்ட 3 இராட்சதர்களை துரத்த முடியுமா?

யோசு 15:14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் 3 குமாரரையும் காலேப் துரத்திவிட்டு...

இராட்சதர்களின் உயரம்



எண் 13:33ல் நெஃபிலிம் என்றால் ஏனாக்கின் மக்கள் என்பதாக கூறின பிறகு, உபா 2:11ல் ஏனாக்கின் மக்கள் என்றால் இராட்சதர்கள் (ரெஃபாயிம்) என்பதாக கூறப்பட்டுள்ளது. உபா 3:11ல் இராட்சதரில் ஒருவரான பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனுடைய கட்டிலின் அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:

உபா 3:11 மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, 9 முழ நீளமும் 4 முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?

1 முழம் என்றால் 1½ அடி. 9 முழம் என்றால் 13½ அடி. நமது வீடுகளில் காணப்படுகிற கட்டிலின் நீளம் 6⅔ அடி, ஆனால் நமது உயரம் பொதுவாக 6 அடி இருக்காது. அப்படி பார்த்தால் ஓகின் உயரம் ஏறத்தாழ 12½ அடி இருக்கவேண்டும். 72 அடி, அல்லது 450 அடி உயரமுடைய இராட்சதர்கள் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளில் (1திமோ 4:17) இருக்குமே தவிர, உண்மையில் இல்லை.

எண் 13:33ல் “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்பதாக கூறப்பட்டுள்ளதை சொல்லுக்குச்சொல் புரிந்துகொள்பவர்கள் வேதம் உருவக மொழி (figurative language) எங்கும் பயன்படுத்தியிருக்கிறதை கவனிக்கவில்லையா? இதே நிகழ்வைப் பற்றி மோசே திரும்பவும் கூறினபோது இன்னொரு முறைமையாக கூறினதை கவனித்தீர்களா?

உபா 1:28  நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம்...

“நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்பதின் விளக்கம் “அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும்” என்பதே அல்லாமல் அவர்களுக்கு 72 அல்லது 450 அடி உயரம் இருந்தது என்பதல்லை!

வேதத்திலிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் சொல்லுக்குச்சொல் புரிந்துகொள்பவர்களிடம் ஒரு கேள்வி: உபா 1:28ல் கூறப்பட்டுள்ளது போல் வானத்தை அளாவும் மதில்கள் கட்டுகிறதற்கான தொழில் நுட்பவியல் (technology) மோசேயின் காலத்தில் இருந்ததா?

தொடரும்,...
கிறிஸ்துவுக்குள்.
டோம்ஸான் கட்டய்க்கல்

ஞாயிறு, 3 மே, 2015

யோபும் சாத்தானும் - பகுதி #003 - பரீட்சைகளைப் பற்றிய யோபின் கருத்து மற்றும் தீமையின் தோற்றுவாய்.

நண்பர்களே,

[என் தாய்மொழி தமிழ் கிடையாது. இந்த பதிவு ஆங்கிலத்தில் எழுதி, தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்குள் எதாவது தவறுகள் இருந்தால் தயவுசெய்து கருத்துக்கள் பிரிவின் (Comments Section) வழியாக எனக்கு தெரிவிக்க வேண்டும்]




ஏறத்தாழ யோபின் புத்தகம் முழுவதும் அந்த புத்தகத்தின் கதாநாயகனாகிய யோபினால் எழுதப்பட்டுள்ளது என்று பொதுவாக எண்ணப்படுகிறது. எல்லா பரீட்சைகளும் ஏற்பட்டது யோபுக்குதான், அவரே புத்தகம் எழுதினார், ஆதலால், அவருக்கு ஏற்பட்ட தீமை எங்கே நின்றும் உண்டானது என்பதைப்பற்றி நம்மை விட, அறிஞர்களை விட, இறையியலாளார்களை விட அவருக்குதான் தெரிஞ்சிருக்க வேண்டும். பரீட்சைகளை பற்றிய அவருடைய கருத்துகள் தான் மற்றெல்லா கருத்துகளை விட விலையேறப்பெற்றது. அவருக்கு ஏற்பட்ட விபத்துகளைப் பற்றிய அவருடைய கருத்துகளை கவனிப்போம்.

யோபுக்கு முதல்முறை ஏற்பட்ட விபத்துகளுக்கு அப்புறம் யோபு சொன்னது:

யோபு 1:21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
யோபு 1:22 இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

கர்த்தர் கொடுத்தார், சாத்தான் எடுத்தார் என்பதாகி யோபு சொல்லவில்லை: மாறாக, அவர் சொன்னது: கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் என்றே. அப்படிச் சொன்னதில் அவர் பாவஞ்செய்யவில்லை. இன்னொரு முறைமையாகச் சொன்னால்: கர்த்தர் கொடுத்தார், சாத்தான் எடுத்தார் என்று சொல்வது பாவம்.


யோபுக்கு இரண்டாம் முறை ஏற்பட்ட விபத்துக்கு அப்புறம் யோபு சொன்னது:

யோப் 2:10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. 

தேவன் கையிலே நன்மையைப் பெற்றுக்கொண்டது போல்  தேவன் கையிலே தீமையையும் பெற்றுக்கொள்வதைப் பற்றியே யோபு பேசுகிறது என்பதற்கு சந்தேகம் இல்லை. தேவன் கையிலே தீமையை பெற்றுக்கொண்டான் என்று சொன்னதில் அவர் பாவம் செய்யவில்லை என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும். இன்னொரு முறைமையாகச் சொன்னால், இன்னொருவரிடத்திலிருந்தும் தீமையை பெற்றுக்கொண்டார் என்று சொல்வது பாவம்.

யோபின் புத்தகத்தின் முடிவில் யோபுக்கு ஏற்பட்ட விபத்துகள் கர்த்தரிடத்திலிருந்தும் உண்டானவை என்பதற்கு அத்தாட்சி கிடைக்கிறது.

யோப் 42:11 ... கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கின் நிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, ....

யோபின் வார்த்தைகளின் படி அல்லது யோபின் கருத்தின் படி அவருக்கு ஏற்ப்பட்ட விபத்துகள் அனைத்தும் கர்த்தரிடத்திலிருந்துமே அல்லாமல் வேறொருவரிடத்திலிருந்தும் உண்டாகவில்லை.

கர்த்தருக்கு சாத்தானுடைய உதவி தேவைப்படுமா?


யோபின் உடம்புக்கு ஏற்ப்பட்ட அதே நோய்தான் இன்னும் சாவுக்குரியதாக எசேக்கியாவுக்கு ஏற்ப்பட்டது.

யோபு 2:7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால்[H7822] அவனை வாதித்தான்.
2ராஜா 20:7 பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்[H7822, பிளவை என்பது பொருந்தாத மொழிபெயர்ப்பு] மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். (ஏசா 38:21 காணவும்)

எசேக்கியாவுக்கு ஏற்ப்பட்ட நோய்யைப் பற்றி வேதத்தில் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது, ஆனால், அந்த நோய் சாத்தானால் உண்டானது என்பதாக எழுதப்படவில்லை.

எண்ணாகமம் 12ம் அதிகாரத்தில் மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாக பேசினப்போது மிரியாம் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டாள். அந்த நிகழ்சி சாத்தானால் ஆனது என்று கூறப்படவில்லை. (ஒருவேளை உடன்பிறப்புகளுள் மூத்தவளாக இருந்ததால் மிரியாம் மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கலாம்)

எலிசா நாகமானின் குஷ்டரோகத்தை கேயாசிக்கு என்றைக்குமாக கொடுத்தபோதும் (2ராஜா 5:27) சாத்தானுடைய தலையிடைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

கர்த்தர் அசரியாவை குஷ்டரோகத்தால் வாதித்ததைப்பற்றி 2ராஜா 15:5ல் வாசிக்கிறோம். அங்கேயும் சாத்தானுடைய தலையிடைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

வலிப்பு நோய் பிடித்த வாலிபனுடைய விஷயத்திலும் 18 வருஷம் கூனியாக இருந்த ஸ்திரீயின் விஷயத்திலும் அவைகள் சாத்தானுடைய அல்லது பிசாசினுடைய வேலையல்லை என்பதை பார்த்தோம். அந்த பதிவுவகளை வாசிக்கவில்லையென்றால் இப்பொழுதே வாசிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். வேறு யாருக்கும் நோய் ஏற்ப்பட்டதற்கு சாத்தான் பொறுப்பாளி என்று எழுதப்படவில்லை.

காரண காரியத் தொடர்புடைய விடைக்காக கெஞ்சுகிற கேள்வி என்னவென்றால்: மேற்சொன்ன அத்தனை பேர்களையும் பாதிக்கிறதற்கு கர்த்தரால் அல்லது தேவனுடைய மனிதர்களால் முடிந்தது; அப்படியிருக்க, யோப் ஒருவரை மட்டும் பாதிக்க சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சாத்தானுடைய உதவி ஏன் தேவைப்பட்டது?


ஒருவேளை யோபுக்கு ஏற்ப்பட்ட விபத்துகள் மனிதர்களால் உண்டானதாகக் கூடாதா?


இயற்கை சக்திகள் அனைத்தும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது என்றும் அவைகளை  அடக்குகிறது தேவனுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் அடுத்தது என்றும் இந்த தொடரின் முதல் பதிவில் பார்த்தோம். தேவன் நேரடியாகவோ அல்லது தனது உண்மையுள்ள ஊழியக்காரர் வழியாகவோ மனிதர்களை பாதிப்பார் என்பதையும் பார்த்தோம்.

யோபுக்கான விபத்துகளில் ஒன்றில் யோபின் நண்பர்களுள் ஒருவருடைய தலையிடைப் பகுத்தறியக் கூடும்.

யோப் 1:14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், 
யோப் 1:15 சபேயர்[H7614] அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 

6ம் அதிகாரத்தில் யோப் சபேயரைப் பற்றி குறிப்பிடுகிறார். 6ம் அதிகாரத்திலிருந்தும் ஒருசில வசனங்களை கவனிப்போம்.

யோப் 6:15 என் சகோதரர் காட்டாறு போல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப் போலக் கடந்துபோகிறார்கள்.
யோப் 6:19 தேமாவின்[H8485] பயணக்காரர் தேடி, சேபாவின்[H7614] பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 

உற்ற நண்பர்கள் (சகோதரர்) மோசம்பண்ணுகிறதைப் பற்றி பிதற்றுகிறார் யோபு. இடையில் அவர் தேமாவையும் சேபாவையும் இணைக்கிறார். ஒருவேளை, யோபு யாரையும் பெயர் சொல்லி பழிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது.

யோபின் நண்பர்களில் ஒருவருடைய பெயர் தேமானியனான[H8489] எலிப்பாச் என்பதை கவனித்தீர்களா? (ஸ்ட்ராங்ஸ் அகராதி இந்த வார்த்தையின் விஷயத்தில் உதவுவதில்லை). யோபின் புத்தகத்தின் முடிவில், யோபுக்கு மறுமொழி அளித்த பிறகு கர்த்தர் தேமானியனான எலிப்பாசை பெயர் சொல்லி அழைத்து தமது மனக்குறைவை அவனிடம் பகிர்ந்துகொண்டது தற்செயலாக உண்டானதல்லை.

யோப் 42:7 ... கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினது போல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

32ம் அதிகாரத்தில் மட்டும் பேசத்தொடங்கின பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூ பூசின் குலத்துக்கு உட்பட்டவன். தேமாவும், பூசும் கர்த்தருடைய கோபத்துக்கு இலக்குகளாக இருக்கிறார் என்கிறார் எரேமியா (எரே 25:23).

பூசியனாகிய எலிகூ ஒரு “தேவனுடைய மனிதனாக” இருந்தாரா?



நாம் வேத மாநாடுகளில் கலந்துக்கொள்ளும்போது அங்கே போதிக்கிறவர்களின் ஒருசில தந்திரங்களை கவனித்திருக்கலாம். பொதுவாக, பெயர்பெற்ற, உயர் கல்வி கற்ற போதகர்கள் முதல்முதலாக போதிப்பார்கள். அதுக்கப்புறம் அவ்வளவு பெயரோ, கல்வியோ இல்லாத ஒருவர் பிரசங்க மேடைக்கு வருவார். முதலிலே போதகம் பண்ணின போதகர்களின் ஒருசில கருத்துகள் இவருக்கு பிடிக்கவில்லை. ஆகிலும் தான் பெயர்பெறாதவனும், உயர் கல்வி இல்லாதவனுமாக இருக்கிறதால் சிறுமையடைந்துகொண்டான். தன் சிறுமையை ஒப்புக்கொண்டும், தனக்கு முன் போதகம் பண்ணினவர்களை விட தான் எதற்கும் உதவாதவன் என்று தெரிவித்தும் போதகம் பண்ணத்தொடங்குவான். இதே தந்திரம் எலிகூ பயன்படுத்தியிருக்கிறதை பார்க்கலாம்:

யோப் 32:6 ... நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன். 
யோப் 32:7 முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். 

இப்படிப்பட்ட போதகர்களுடை அடுத்த தந்திரம் என்னவென்றால்: மெய்யான அறிவும், விவேகமும் கல்லூரிகளிலிருந்தும், விருதுகளிலிருந்தும் வரமாட்டாது, அது தேவனிடத்திலிருந்தும் பரிசுத்த ஆவியினால் வருகிறது என்று சொல்வது. இதைப்போன்ற தந்திரம் எலிகூ பயன்படுத்துகிறதை கவனியுங்கள்.

யோப் 32:8 ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். 
யோப் 32:9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.

எலிகூ இன்னும் ஒரு படி முன்சென்று, யோபுடன் வாதாடுவதில் அவர் தேவனுடைய பேச்சாளராக இருக்கிறார் என்று உரிமை பாராட்டுகிறார்.

Job 33:6 Behold, I am according to thy wish in God's stead: ... [யோப் 33:6 தமிழில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை: சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பு இப்படி: “உன் விருப்பத்தின் (வாயின், வார்த்தையின்) படிக்கு நான் தேவனுக்காக நிற்கிறேன்...”]

இந்த பதிவு இன்னும் பெரியதாகாமல் இருக்கும்படிக்கு, எலீகுவின் வீம்புகள் அனைத்தையும் இங்கே விபரிக்க மாட்டேன். ஆகிலும், ஒரு சராசரி “தேவனுடைய மனிதனுடைய” தந்திரங்கள் அனைத்தும் அவரிடமிருந்தது என்பதே என் கருத்து.

யோபும் அவருடைய வேறு மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கயில் கர்த்தர் பதிலளிக்கவும் இல்லை, எதுவும் பேசவும் இல்லை என்பதை கவனியுங்கள். ஆனால், எலிகூ பேசிமுடிக்கும் முன்னமே கர்த்தர் பெருங்காற்றிலிருந்து மறுமொழி கூறினார்.

யோப் 38:1 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: 
யோப் 38:2 அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? 

தன்னுடைய அறிவும் விவேகமும் தேவனிடத்திலிருந்தும் பரிசுத்த ஆவியினிடத்திலிருந்தும் உண்டானது என்கிற கூற்றை கர்த்தர் தவறு என்று நிரூபித்தார்.

[பழைய ஏற்பாடு இப்போதும் கூட  நடைமுறையில் இருந்தால், நமது போதகர்கள் பேசி முடித்த உடனே கர்த்தர் பெருங்காற்றிலிருந்து இதைப்போன்ற மறுமொழிகள் கூறுவார்.]

என் கருத்து: எலிகூ ஒரு “தேவனுடைய மனிதன்”; ஒருவேளை அவரைப்போல் வேறு எத்தனையோ “தேவனுடைய மனிதர்கள்” யோபின் காலத்தில் இருந்திருக்கலாம்? யோபுக்கான விபத்துகளும் நோய்களும் அவர்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதே.

முடிவுரை:



  • தனக்கு ஏற்பட்ட விபத்துகள் தேவனிடத்திலிருந்தும் உண்டானது என்று பரீட்சைகளால் பாதிக்கப்பட்ட, யோபின் புத்தகத்தை எழுதின யோபுக்கு உறுதி இருந்தது. அறிஞர்களுக்காவது இறையியலாளார்களுக்காவது யோபுக்கு என்ன எற்பட்டது என்று யோபை விட கூடுதலாக  தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.


  • இயற்கை சக்திகள் அனைத்தும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது. அவைகளை  அடக்குகிறது தேவனுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் அடுத்தது.


  • யோபுக்கு ஏற்பட்ட விபத்துகளில் அவருடைய நண்பர்களுக்கு தலையீடு இருந்தது என்பதற்கு யோபின் புத்தகத்தில் அத்தாட்சி இருக்கிறது.
  • ஒருவரை நோய்களால் அல்லது விபத்துகளால் பாதிக்கிறதற்கு ஒரு தேவனுடைய மனிதன் தேவையாக இருந்தால் யோபின் காலத்தில் தேவனுடைய மனிதர்கள் இருந்தார்கள் என்பதை பார்த்தோம்.


தொடரும்...

கர்த்தருக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல்