நண்பர்களே,
[இந்த பதிவை வாசிக்கும் முன் இதன் முதல் பகுதியை வாசிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]
பெரும்பாலும் கிறித்தவர்களிடம் ஆதி 6:2ல் குறிப்பிட்டுள்ள “தேவகுமாரர்கள்” யார் என்று கேட்டால் “தேவதூதர்கள்” என்று பதிலளிப்பார்கள். ஆதாரம் என்ன என்று கேட்டால் யோப் 1:6; 2:1 என்று பதிலளிப்பார்கள்.
இல்லை, யோப் 1:6; 2:1 வசனங்களில் தேவபுத்திரர் (தேவகுமாரர்) என்றால் தேவதூதர்கள் என்று கூறப்படவில்லை.
யோப் 1:6; 2:1ல் குறிப்பிட்டுள்ள தேவபுத்திரர் யார் என்று கேட்டாலும் தேவதூதர்கள் என்பார்கள். ஆதாரம் என்ன என்று கேட்டால் ஆதி 6:2 என்பார்கள்.
நண்பர்களே, தேவபுத்திரர் அல்லது தேவகுமாரர் என்றால் தேவதூதர்கள் என்று கூறுகிற ஒரு வசனம் கூட வேதத்தில் இல்லை! (ஒருவேளை யோப் 38:7ல் தேவபுத்திரர் என்பதாக குறிப்பிட்டுள்ளது தேவதூதர்களைப் பற்றியே என்று வாதிக்கலாம்.)
வேதத்தில் எங்கும் தேவபுத்திரர்கள், தேவகுமாரர்கள் அல்லது தேவனுடைய மக்கள் என்கிற பயன்பாடுகளுக்கு தேவனை நம்புகிற தேவனை வணங்குகிற மனிதர்கள் என்பதே விளக்கம் (அர்த்தம்). தமிழில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது முக்கியமல்லை, எபிரேயு மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளே முக்கியம்.
பழைய ஏற்பாடில் இஸ்ரவேல் மக்களைப் பற்றி தேவனுடைய மக்கள் அல்லது புத்திரர்கள் என்பதாக கூறுகிற ஒருசில வசனங்கள்:
புதிய ஏற்பாடில் தேவனுடைய குமாரர்கள் யார் என்பதற்கு தெளிவான வரையறை (விளக்கம்) அளிக்கப்பட்டுள்ளது. யோவான் 11:51-52ல் காய்பா இஸ்ரவேல் மக்களை தேவனுடைய பிள்ளைகள் என்று குறிப்பிட்டதை கவனிக்கவும்:
தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதைப் பற்றி யோவான்:
தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதற்கு பவுல் கூறுகிற விளக்கம்:
வேதாகமத்தில் எங்கும் தேவகுமாரர், தேவபுத்திரர், அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்பதின் விளக்கம் (அர்த்தம்) தேவனை பின்பற்றுகிறவர்கள், அல்லது தேவனை தொழுதுகொள்பவர்கள் என்பதே.

யோப் 1:6 ஒருநாள் தேவ<H430> புத்திரர்<H1121> கர்த்தருடைய<H3068> சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
யோப் 2:1 பின்னொருநாளிலே தேவ<H430> புத்திரர்<H1121> கர்த்தருடைய<H3068> சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
இல்லை, யோப் 1:6; 2:1 வசனங்களில் தேவபுத்திரர் (தேவகுமாரர்) என்றால் தேவதூதர்கள் என்று கூறப்படவில்லை.
யோப் 1:6; 2:1ல் குறிப்பிட்டுள்ள தேவபுத்திரர் யார் என்று கேட்டாலும் தேவதூதர்கள் என்பார்கள். ஆதாரம் என்ன என்று கேட்டால் ஆதி 6:2 என்பார்கள்.
நண்பர்களே, தேவபுத்திரர் அல்லது தேவகுமாரர் என்றால் தேவதூதர்கள் என்று கூறுகிற ஒரு வசனம் கூட வேதத்தில் இல்லை! (ஒருவேளை யோப் 38:7ல் தேவபுத்திரர் என்பதாக குறிப்பிட்டுள்ளது தேவதூதர்களைப் பற்றியே என்று வாதிக்கலாம்.)
வேதத்தில் எங்கும் தேவபுத்திரர்கள், தேவகுமாரர்கள் அல்லது தேவனுடைய மக்கள் என்கிற பயன்பாடுகளுக்கு தேவனை நம்புகிற தேவனை வணங்குகிற மனிதர்கள் என்பதே விளக்கம் (அர்த்தம்). தமிழில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது முக்கியமல்லை, எபிரேயு மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளே முக்கியம்.
பிள்ளை(கள்), குமாரன்/குமாரர்கள், புத்திரன்/புத்திரர் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேயு வார்த்தை 'பென்' (bane, ஸ்ட்ராங்ஸ் அகராதியில் H1121)
தேவன் - ஏலோஹீம் (el-o-heem' H430)
யெகோவா, கர்த்தர் - (yeh-ho-vaw' H3068)
பழைய ஏற்பாடில் இஸ்ரவேல் மக்களைப் பற்றி தேவனுடைய மக்கள் அல்லது புத்திரர்கள் என்பதாக கூறுகிற ஒருசில வசனங்கள்:
உபா 14:1 நீங்கள் உங்கள் தேவனாகிய<H430> கர்த்தரின்<H3068> பிள்ளைகள்<H1121>; ...
சங் 82:6 நீங்கள் தேவர்கள்<H430> என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள்<H1121> என்றும் நான் சொல்லியிருந்தேன்.
ஓசி 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை<H1121> வரவழைத்தேன்.
யாத் 4:22 ... இஸ்ரவேல் என்னுடைய குமாரன்<H1121>, என் சேஷ்டபுத்திரன்.
ஏசா 43:6 ... தூரத்திலிருந்து என் குமாரரையும்<H1121>, பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,...
புதிய ஏற்பாடில் தேவனுடைய குமாரர்கள் யார் என்பதற்கு தெளிவான வரையறை (விளக்கம்) அளிக்கப்பட்டுள்ளது. யோவான் 11:51-52ல் காய்பா இஸ்ரவேல் மக்களை தேவனுடைய பிள்ளைகள் என்று குறிப்பிட்டதை கவனிக்கவும்:
யோவா 11:51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
யோவா 11:52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதைப் பற்றி யோவான்:
யோவா 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
தேவனுடைய பிள்ளைகள் யார் என்பதற்கு பவுல் கூறுகிற விளக்கம்:
ரோம 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
வேதாகமத்தில் எங்கும் தேவகுமாரர், தேவபுத்திரர், அல்லது தேவனுடைய பிள்ளைகள் என்பதின் விளக்கம் (அர்த்தம்) தேவனை பின்பற்றுகிறவர்கள், அல்லது தேவனை தொழுதுகொள்பவர்கள் என்பதே.
தொடரும்...
கிறிஸ்துவுக்குள்.
டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக