நண்பர்களே,
[இது “தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும்” என்கிற தொகுதியின் மூன்றாம் பகுதி. இதை வாசிக்கும்முன் #1, #2 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.]
தேவகுமாரர் என்றால் தேவனை பின்பற்றுகிற, தேவனை தொழுகிற மக்கள் என்பதை இரண்டாம் பகுதியில் பார்த்தோம். அப்படியானால்,
ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்பதற்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் என்று வசனம் கூறுகிறது. [அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள ஸ்ட்ராங்ஸ் எண்களை கவனிக்கவும்]
(ஆதி 26:25, 1ராஜா 18:24; 2ராஜா 5:11; 1நாளா 16:8; சங் 99:6, 105:1, 116:4, 13, 17; ஏசா 12:4, புலம் 3:55, யோவே 2:32, செப் 3:9 போன்ற வசனங்களும் கூட காணவும்)
வேதத்தில் “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டார்கள்” என்கிற சொற்றொடர் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது ஆதியாகமம் 4ம் அதிகாரத்திலே என்பதை பெரும்பாலும் கிறித்தவர்கள் கவனிக்கவில்லை.
ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் இரண்டு வகையான மனிதர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளதை பெரும்பாலும் கிறித்தவர்கள் கவனிக்கிறதில்லை. காயீன் ஆபேலை கொலைபண்ணினதைப் பற்றி விவரித்த பிறகு கயீனுடைய பிள்ளைகளைப் பற்றி விவரிக்கிற பகுதியின் கருத்தை பெரும்பாலும் பேர்கள் உணர்ந்துகொள்வதில்லை அல்லது கவனிக்கவில்லை.
ஒரு பக்கத்தில் சேத்தின் பிள்ளைகள் கர்த்தரை பின்பற்றி, தொழுதுகொண்டிருக்கும்போது, மறு பக்கத்தில் காயீனுடைய பிள்ளைகள் அப்படியிருக்கவில்லை. முதலாவதாக, கயீனைப் பற்றி வேதம் “பொல்லாங்கனால் உண்டானவன்” என்று கூறுகிறதை கவனிப்போம்:
(மத் 13:38; எபே 6:16; 1யோவா 2:13, 14; 3:12; 5:18 போன்ற வசனங்களையும் கவனிக்கவும்)
ஆதாமிலிருந்தும் ஏழாந்தலைமுறையான லாமேக்கைப் பற்றி வாசிக்கும்போது அவனுடைய பொல்லாங்கு பன்மனைமணம் (பலமுறை திருமணம் பண்ணுகிறது) என்பதை நாம் கவனிக்கிறதில்லை:
மீண்டும் தூபால்காயீனைப் பற்றி வாசிக்கும்போது அவன் ஒரு கொல்லராக இருந்தார் என்பதையும் கவனிக்கமாட்டோம்.
ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் தொடர்ந்துவருகிறது லாமேக்கய யாரையோ கொன்றதைப் பற்றிய விவரணை:
தன் மக்களில் ஒருவன் ஆயுதத்தை உண்டாக்கினார், தந்தை ஒருவரை கொலைசெய்தார். கயீனுடைய குடும்பத்தின் செயல்பாட்டு வரலாறு எப்படியிருக்கிறது?
இன்னும் முடியவில்லை! “யூபால் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்” (ஆதி 4:21) என்று வாசிக்கும்போது, “பார், கின்னரம், நாகசுரம் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி வேதம் கூறுகிறதே” என்பதாக ஆச்சரியப்படுகிறதைத் தவிர, அந்த இசைக்கருவிகள் வேறு தேவர்களை போற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதாக யோசிக்கமாட்டோம். வேதத்தில் இந்த இசைக்கருவிகள் கர்த்தரை அல்லது வேறு தேவர்களை (அந்நியதேவர்களை) போற்றுவதற்கு பயன்படுத்துகிறதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதுவும் அல்லாமல், துன்மார்க்கர் இசைக்கருவிகளை துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதுண்டு. யோபு இதைப்பற்றி மறைமுகமாக பேசுகிறார்:
சுருக்கமாகச் சொன்னால் காயீனின் பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் இவைகளே:
தேவகுமாரர்களிலிருந்தும் இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மாம்சத்தின் பிள்ளைகள் என்பதாக பவுல் கூறுகிறார்:
மாம்சத்தின் பிள்ளைகள் தேவகுமாரர்கள் அல்லை! “சந்ததி” என்கிற வார்த்தை ஆதி 3:15க்கு தொடர்புள்ளது என்பதை கவனிக்கவும்.

நோவாவின் காலத்தில் உண்மையான தேவகுமாரர்கள் இருந்தாரா?
ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்பதற்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான் என்று வசனம் கூறுகிறது. [அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள ஸ்ட்ராங்ஸ் எண்களை கவனிக்கவும்]
ஆதி 12:8 .... கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய[H3068] நாமத்தைத்[H8034] தொழுதுகொண்டான்[H7121].
ஆதி 13:4 ... ஆபிராம் கர்த்தருடைய[H3068] நாமத்தைத்[H8034] தொழுதுகொண்டான்[H7121].
ஆதி 21:33 ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய[H3068] நாமத்தை[H8034] அவ்விடத்தில் தொழுதுகொண்டான்[H7121].
(ஆதி 26:25, 1ராஜா 18:24; 2ராஜா 5:11; 1நாளா 16:8; சங் 99:6, 105:1, 116:4, 13, 17; ஏசா 12:4, புலம் 3:55, யோவே 2:32, செப் 3:9 போன்ற வசனங்களும் கூட காணவும்)
வேதத்தில் “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டார்கள்” என்கிற சொற்றொடர் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது ஆதியாகமம் 4ம் அதிகாரத்திலே என்பதை பெரும்பாலும் கிறித்தவர்கள் கவனிக்கவில்லை.
ஆதி 4:26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.வேதத்தின் அடிப்படையில் தேவனை / கர்த்தரை தொழுதுகொள்பவர்களே தேவகுமாரர்கள். அப்படி பார்க்கும்போது, நோவாவின் காலத்துக்கு முன்னமே தேவகுமாரர்கள் இருந்தார்கள்.
மனித குமாரர்களும் குமாரத்திகளும்.
ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் இரண்டு வகையான மனிதர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளதை பெரும்பாலும் கிறித்தவர்கள் கவனிக்கிறதில்லை. காயீன் ஆபேலை கொலைபண்ணினதைப் பற்றி விவரித்த பிறகு கயீனுடைய பிள்ளைகளைப் பற்றி விவரிக்கிற பகுதியின் கருத்தை பெரும்பாலும் பேர்கள் உணர்ந்துகொள்வதில்லை அல்லது கவனிக்கவில்லை.
ஒரு பக்கத்தில் சேத்தின் பிள்ளைகள் கர்த்தரை பின்பற்றி, தொழுதுகொண்டிருக்கும்போது, மறு பக்கத்தில் காயீனுடைய பிள்ளைகள் அப்படியிருக்கவில்லை. முதலாவதாக, கயீனைப் பற்றி வேதம் “பொல்லாங்கனால் உண்டானவன்” என்று கூறுகிறதை கவனிப்போம்:
1யோவா 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போல் இருக்கவேண்டாம்;...
(மத் 13:38; எபே 6:16; 1யோவா 2:13, 14; 3:12; 5:18 போன்ற வசனங்களையும் கவனிக்கவும்)
கயீனுடைய பிள்ளைகளின் பொல்லாங்குகள்:
ஆதாமிலிருந்தும் ஏழாந்தலைமுறையான லாமேக்கைப் பற்றி வாசிக்கும்போது அவனுடைய பொல்லாங்கு பன்மனைமணம் (பலமுறை திருமணம் பண்ணுகிறது) என்பதை நாம் கவனிக்கிறதில்லை:
ஆதி 4:19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
மீண்டும் தூபால்காயீனைப் பற்றி வாசிக்கும்போது அவன் ஒரு கொல்லராக இருந்தார் என்பதையும் கவனிக்கமாட்டோம்.
ஆதி 4:22 சில்லாளும் தூபால்காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்;...
ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் தொடர்ந்துவருகிறது லாமேக்கய யாரையோ கொன்றதைப் பற்றிய விவரணை:
ஆதி 4:23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;
தன் மக்களில் ஒருவன் ஆயுதத்தை உண்டாக்கினார், தந்தை ஒருவரை கொலைசெய்தார். கயீனுடைய குடும்பத்தின் செயல்பாட்டு வரலாறு எப்படியிருக்கிறது?
இன்னும் முடியவில்லை! “யூபால் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்” (ஆதி 4:21) என்று வாசிக்கும்போது, “பார், கின்னரம், நாகசுரம் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி வேதம் கூறுகிறதே” என்பதாக ஆச்சரியப்படுகிறதைத் தவிர, அந்த இசைக்கருவிகள் வேறு தேவர்களை போற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதாக யோசிக்கமாட்டோம். வேதத்தில் இந்த இசைக்கருவிகள் கர்த்தரை அல்லது வேறு தேவர்களை (அந்நியதேவர்களை) போற்றுவதற்கு பயன்படுத்துகிறதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. அதுவும் அல்லாமல், துன்மார்க்கர் இசைக்கருவிகளை துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதுண்டு. யோபு இதைப்பற்றி மறைமுகமாக பேசுகிறார்:
யோபு 21:7 துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
யோபு 21:12 அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் காயீனின் பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் இவைகளே:
- பன்மனைமணம் (பலமுறை திருமணம் பண்ணுகிறது)
- கொலை, யுத்தம்.
- துள்ளல்மகிழ்ச்சி, குதியாட்டம்.
- அந்நியதேவர்களை தொழுதுகொள்வது.
தேவகுமாரர்களிலிருந்தும் இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி மாம்சத்தின் பிள்ளைகள் என்பதாக பவுல் கூறுகிறார்:
ரோம 9:8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
மாம்சத்தின் பிள்ளைகள் தேவகுமாரர்கள் அல்லை! “சந்ததி” என்கிற வார்த்தை ஆதி 3:15க்கு தொடர்புள்ளது என்பதை கவனிக்கவும்.
பகுதி #4ல் முடிவுபெறும்...
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக