நண்பர்களே,
[இது “தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும்” என்கிற தொகுதியின் நான்காம் பகுதி. இதை வாசிக்கும்முன் #1, #2, #3 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.]
பிரதர், நீங்கள் சொல்வது உண்மையானால், தேவகுமாரர்கள் வெறும் மனிதர்கள் தானே, அவர்கள் மனிதகுமாரத்திகளை திருமணம் பண்ணுவது தப்பா? என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்பும், இல்லையா? முதலாவதாக தேவகுமாரர்கள் என்ன பண்ணினார்கள் என்று வேதம் கூறுகறதை கவனிப்போம்:
பொதுவான தமிழ்பெயர்ப்பில் எபிரேயு வேதத்திலிருக்கும் ஒருசில வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதினால், கத்தோலிக்க மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்தும் குறிப்பிடுகிறேன்.
கவனமாக வாசியுங்கள்: அவர்கள் தேர்ந்துகொண்டவர்களை திருமணம் பண்ணினாரகள் என்பதாக எழுதப்படாமல், தேர்ந்துகொண்டவர்களை “எல்லாம்” திருமணம் பண்ணினாரகள் என்பதாக எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள். அதாவது, தேவகுமாரர்கள் கயீனுடைய பிள்ளைகளைப்போல் பல (ஒன்றுக்கு மேற்பட்ட) பெண்களை திருமணம் பண்ணினார்கள்.
ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் காயீனும் பிள்ளைகளும் கொலை செய்தார்கள். 6ம் அதிகாரத்துக்கு வரும்போது கொலையிலிருந்தும் அக்கிரமத்துக்கும் வன்முறைக்கும் வளர்ந்தது.
[நெஃபிலிம்கள் நிமித்தம் தேவனுடைய மனதுக்கு வருத்தமாயிற்று என்றோ, நெஃபிலிம்களை அழிப்பார் என்றோ தேவன் கூறவில்லை என்பதை கவனியுங்கள்.]
தேவனுடைய பிள்ளைகள் அந்நியதேவர்களின் பிள்ளைகளையும், விக்கிரகங்களுக்கு வழிபடுகிறவர்களையும் திருமணம் பண்ணுகிறதை பழைய ஏற்பாடு விலக்குகிறது.
இஸ்ரவேல் மக்கள் சுற்றிலுமுள்ள ஜாதிகளிலிருந்தும் பெண்களை கொண்டதை கேள்விப்பட்ட எஸ்றா தன் வஸ்திரத்தையும், சால்வையையும் கிழித்துகொண்டு, தலையிலும் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டு சொன்னது: (எஸ்றா 9ம் அதிகாரம் முழுவதும் வாசியுங்கள்.)
கர்த்தர் மோசே வழியாக எச்சரிப்புகளை நினைப்பூட்டிக்கொண்டு அவர் சொன்னதை கவனியுங்கள்:
தேவனுடைய குமாரர்கள் அந்நியஜாதிகளுடன் கலப்பு திருமணம் செய்கிறது கர்த்தருடைத பார்வையில் அருவருப்பான விஷயம்; அப்படி பண்ணுவவர்களை கர்த்தர் அழிப்பார், அதுதான், ஆதியாகமம் 6ல் நடந்தது.
[இது “தேவகுமாரர்களும் மனுஷகுமாரத்திகளும்” என்கிற தொகுதியின் நான்காம் பகுதி. இதை வாசிக்கும்முன் #1, #2, #3 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.]
தேவகுமாரர்களும் மனிதகுமாரத்திகளும், அந்நிய நுகத்திலே பிணைக்கப்படுகிறதும்.
பிரதர், நீங்கள் சொல்வது உண்மையானால், தேவகுமாரர்கள் வெறும் மனிதர்கள் தானே, அவர்கள் மனிதகுமாரத்திகளை திருமணம் பண்ணுவது தப்பா? என்கிற கேள்வி உங்களுக்குள் எழும்பும், இல்லையா? முதலாவதாக தேவகுமாரர்கள் என்ன பண்ணினார்கள் என்று வேதம் கூறுகறதை கவனிப்போம்:
ஆதி 6:2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்கு உள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
பொதுவான தமிழ்பெயர்ப்பில் எபிரேயு வேதத்திலிருக்கும் ஒருசில வார்த்தைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதினால், கத்தோலிக்க மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்தும் குறிப்பிடுகிறேன்.
Gen 6:2 That the sons of God saw the daughters of men that they were fair; and they took[H3947] them wives[H802] of ALL[H3605] which they chose.
ஆதி 6:2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்துகொண்டவர்களை “எல்லாம்” மனைவியர் ஆக்கிக்கொண்டனர். (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)
கவனமாக வாசியுங்கள்: அவர்கள் தேர்ந்துகொண்டவர்களை திருமணம் பண்ணினாரகள் என்பதாக எழுதப்படாமல், தேர்ந்துகொண்டவர்களை “எல்லாம்” திருமணம் பண்ணினாரகள் என்பதாக எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள். அதாவது, தேவகுமாரர்கள் கயீனுடைய பிள்ளைகளைப்போல் பல (ஒன்றுக்கு மேற்பட்ட) பெண்களை திருமணம் பண்ணினார்கள்.
கொலையிலிருந்தும் அக்கிரமத்துக்கு முன்னேற்றம்!
ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் காயீனும் பிள்ளைகளும் கொலை செய்தார்கள். 6ம் அதிகாரத்துக்கு வரும்போது கொலையிலிருந்தும் அக்கிரமத்துக்கும் வன்முறைக்கும் வளர்ந்தது.
ஆதி 6:5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
ஆதி 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
ஆதி 6:7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
[நெஃபிலிம்கள் நிமித்தம் தேவனுடைய மனதுக்கு வருத்தமாயிற்று என்றோ, நெஃபிலிம்களை அழிப்பார் என்றோ தேவன் கூறவில்லை என்பதை கவனியுங்கள்.]
தேவனுடைய பிள்ளைகளும் திருமணவும்:
தேவனுடைய பிள்ளைகள் அந்நியதேவர்களின் பிள்ளைகளையும், விக்கிரகங்களுக்கு வழிபடுகிறவர்களையும் திருமணம் பண்ணுகிறதை பழைய ஏற்பாடு விலக்குகிறது.
உபா 7:1 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி,
உபா 7:2 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம்.
உபா 7:3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.
உபா 7:4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.
இஸ்ரவேல் மக்கள் சுற்றிலுமுள்ள ஜாதிகளிலிருந்தும் பெண்களை கொண்டதை கேள்விப்பட்ட எஸ்றா தன் வஸ்திரத்தையும், சால்வையையும் கிழித்துகொண்டு, தலையிலும் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டு சொன்னது: (எஸ்றா 9ம் அதிகாரம் முழுவதும் வாசியுங்கள்.)
எஸ்றா 9:6 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.
கர்த்தர் மோசே வழியாக எச்சரிப்புகளை நினைப்பூட்டிக்கொண்டு அவர் சொன்னதை கவனியுங்கள்:
எஸ்றா 9:14 நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ?
எஸ்றா 9:15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.
தேவனுடைய குமாரர்கள் அந்நியஜாதிகளுடன் கலப்பு திருமணம் செய்கிறது கர்த்தருடைத பார்வையில் அருவருப்பான விஷயம்; அப்படி பண்ணுவவர்களை கர்த்தர் அழிப்பார், அதுதான், ஆதியாகமம் 6ல் நடந்தது.
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக