நண்பர்களே,
இந்த இரண்டு வசனங்களை கவனமாக வாசியுங்கள்:
[H5303 என்கிற எண்ணுடைய எபிரேயு வார்த்தையின் உச்சரிப்பு நெஃபில். இந்த வார்த்தையிலிருந்தும் நெஃபிலிம் - Nephilim - என்கிற ஆங்கில வார்த்தை உண்டாயிற்று.]
இந்த 2 வசனங்களின் அடிப்படையில் எண்ணற்ற கட்டுக்கதைகள் எழும்பி பொதுமக்கள் இடையில் பரம்பியிருக்கிறது. உண்மை சொன்னாலும் கூட மக்கள் நம்பாதபடிக்கு கட்டுக்கதைகள் பரம்பியுள்ளன.
போலி விஞ்ஞானிகள் நெஃபிலிம்களுக்கு (இராட்சதர்) 72 அடி உயரம் இருந்தது என்றும், இன்னும் சிலர் 450 அடி உயரம் இருந்தது என்றும் கூறுவதுண்டு. அவர்களுடைய எண்ணங்களுக்கு அத்தாட்சியாக எண் 13:33 எடுத்துரைக்கிறார்கள்:
“விழுந்துபோன தூதர்கள்” மனிதப் பெண்களுடன் உடலுறவு கொண்டதினால் நெஃபிலிம்கள் (இராட்சதர்கள்) பிறந்தார்கள் என்று பெரும்பாலும் பேர்கள் நம்புகிறார்கள்.
புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு 1½ அடி உயரம் இருக்கும், அதாவது முழு வயதுவந்தோர்களின் உயரத்தின் ¼ உயரம் ஒரு குழந்தைக்கு இருக்கும். அப்படியானால், 72 அடி உயரமுடைய ஒரு நெஃபிலிம் பிறந்த சமயத்தில் அதற்கு 18 அடி உயரம் இருக்கவேண்டும். 6 அடி மட்டும் உயரமுடைய ஒரு மனிதப் பெண்ணுக்கு 18 அடி உயரமுடைய ஒரு குழந்தயை பெற்றெடுக்கக் கூடுமா? (முழு வயதுவந்த ஒரு நெஃபிலிமுக்கு 450 அடி உயரமிருந்தால் அது பிறந்தபோது அதற்கு 112½ அடி உயரம் இருக்கவேண்டும். கட்டுக்கதைகள் உண்டுபண்ணுகிற போலி விஞ்ஞானிகளுக்கு 6 அடி உயரம் மட்டுமுள்ள மனிதப் பெண்கள் 18 அடி, அல்லது 112½ அடி உயரமுடைய குழந்தைகளை எப்படி பெற்றெடுப்பார் என்கிற கேள்விக்கு பதிலளிக்கமுடியுமா?
ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் இதைப்போன்ற கட்டுக்கதைகளால் ஏமாற்றப்பட்டு நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகள் என்று புகைப்படங்களை முகநூல் (Facebook) போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றுவதுண்டு; ஆனால் ஃபோட்டோஷாப் பண்ணப்பட்ட புகைப்படங்கள் என்றும் “Shadow of the Colossus” போன்ற வீடியோ கேம்களின் விளம்பரங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்றும் தெரியாமல் இருக்கிறார்கள்.
ஜலப்பிரளயத்துக்கு முன்பு பிழைத்திருந்த விலங்குகளுடையும் பறவைகளுடையும் எலும்புக்கூடுகள் காட்சியகங்களில் (Museums) இருக்கின்றன. 72 அடி, அல்லது 450 அடி உயரமுடைய நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகள் மட்டும் ஏன் காட்சியகங்களில் இலலை? புகைப்படங்களை பார்த்த ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள், ஆனால் உண்மையான நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகளை பார்த்தவர்கள் யாரும் இல்லை. 2004 டிசம்பரில் தமிழ் நாட்டில் சுனாமி உண்டானபோது நெஃபிலிம்களின் எலும்புக்கூடு ஒன்று கடற்கரையில் காணப்பட்டதாம், ஆனால் தமிழ் நாட்டில் யாரும் அதை பார்க்கவில்லை, அமெரிக்காவில் யாரோ அதின் புகைப்படம் பார்த்தாராம்!
ஆதியாகமம் 6:4 பொதுவான தமிழ் மொழிபெயர்ப்பில் சரிசயாக வராததால் இன்னும் ஒருசில மொழிபெயர்ப்புகளிலிருந்தும் எடுத்துரைக்கிறேன்:
அதாவது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடின நாட்களிலும், அதற்கு பிறகும் இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள். கவனிக்கவேண்டிய விஷயங்கள்:
ஜலப்பிரளயத்துக்கு அப்புறமும் கூட இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது:
இந்த வார்த்தைகள் யோசுவா, காலேப் என்பவர்களுடன் கானான் நாட்டை வேவுபார்க்கப் போய் வந்தவர்கள் பரம்பச்செய்த துர்ச்செய்திகளுக்கு உட்பட்டவை என்பதை ஒத்துக்கொள்கிறேன்; ஆகிலும், ஏனாக்கின் குமாரர் அங்கே இருந்தார் என்பதற்கும் அவர்கள் இராட்சதர்களாக இருந்தார் என்பதற்கும் ஐயம் இல்லை. [ஏனாக்கின் குமாரர்களைப் பற்றி எண்.13:22,28,33; உபா. 1:28; 2:10,11,21; 9:2; யோசு.11:21,22; 14:12,15; 15:13,14; 21:11; நியா. 1:20 என்கிற வசனங்களில் வாசிக்கவும்.]
இராட்சதர்கள் அனைவரும் ஏனாக்கின் குமாரர்கள் அல்லை, நெஃபிலிம்கள் அனைவரும் ஏனாக்கின் குமாரர்களாக இருந்தார்கள்.
உண்மையாகவே நெஃபிலிம்களுக்கு 72 (அல்லது 450) அடி உயரமிருந்தால் 6 அடிக்கு கீழ்ப்பட்ட உயரமிருந்த காலேபுக்கு தனியாளாக அப்படிப்பட்ட 3 இராட்சதர்களை துரத்த முடியுமா?
எண் 13:33ல் நெஃபிலிம் என்றால் ஏனாக்கின் மக்கள் என்பதாக கூறின பிறகு, உபா 2:11ல் ஏனாக்கின் மக்கள் என்றால் இராட்சதர்கள் (ரெஃபாயிம்) என்பதாக கூறப்பட்டுள்ளது. உபா 3:11ல் இராட்சதரில் ஒருவரான பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனுடைய கட்டிலின் அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:
1 முழம் என்றால் 1½ அடி. 9 முழம் என்றால் 13½ அடி. நமது வீடுகளில் காணப்படுகிற கட்டிலின் நீளம் 6⅔ அடி, ஆனால் நமது உயரம் பொதுவாக 6 அடி இருக்காது. அப்படி பார்த்தால் ஓகின் உயரம் ஏறத்தாழ 12½ அடி இருக்கவேண்டும். 72 அடி, அல்லது 450 அடி உயரமுடைய இராட்சதர்கள் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளில் (1திமோ 4:17) இருக்குமே தவிர, உண்மையில் இல்லை.
எண் 13:33ல் “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்பதாக கூறப்பட்டுள்ளதை சொல்லுக்குச்சொல் புரிந்துகொள்பவர்கள் வேதம் உருவக மொழி (figurative language) எங்கும் பயன்படுத்தியிருக்கிறதை கவனிக்கவில்லையா? இதே நிகழ்வைப் பற்றி மோசே திரும்பவும் கூறினபோது இன்னொரு முறைமையாக கூறினதை கவனித்தீர்களா?
“நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்பதின் விளக்கம் “அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும்” என்பதே அல்லாமல் அவர்களுக்கு 72 அல்லது 450 அடி உயரம் இருந்தது என்பதல்லை!
வேதத்திலிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் சொல்லுக்குச்சொல் புரிந்துகொள்பவர்களிடம் ஒரு கேள்வி: உபா 1:28ல் கூறப்பட்டுள்ளது போல் வானத்தை அளாவும் மதில்கள் கட்டுகிறதற்கான தொழில் நுட்பவியல் (technology) மோசேயின் காலத்தில் இருந்ததா?

ஆதி 6:2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதி 6:4 அந்நாட்களில் இராட்சதர் <H5303> பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
[H5303 என்கிற எண்ணுடைய எபிரேயு வார்த்தையின் உச்சரிப்பு நெஃபில். இந்த வார்த்தையிலிருந்தும் நெஃபிலிம் - Nephilim - என்கிற ஆங்கில வார்த்தை உண்டாயிற்று.]
![]() |
| இது உண்மையான புகைப்படம் அல்லை, இது ஒரு புரளி (Hoax) |
இந்த 2 வசனங்களின் அடிப்படையில் எண்ணற்ற கட்டுக்கதைகள் எழும்பி பொதுமக்கள் இடையில் பரம்பியிருக்கிறது. உண்மை சொன்னாலும் கூட மக்கள் நம்பாதபடிக்கு கட்டுக்கதைகள் பரம்பியுள்ளன.
போலி விஞ்ஞானிகள் நெஃபிலிம்களுக்கு (இராட்சதர்) 72 அடி உயரம் இருந்தது என்றும், இன்னும் சிலர் 450 அடி உயரம் இருந்தது என்றும் கூறுவதுண்டு. அவர்களுடைய எண்ணங்களுக்கு அத்தாட்சியாக எண் 13:33 எடுத்துரைக்கிறார்கள்:
எண் 13:33 அங்கே இராட்சதப்<H5303> பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
கட்டுக்கதையை அம்பலப்படுத்துகிறது:
“விழுந்துபோன தூதர்கள்” மனிதப் பெண்களுடன் உடலுறவு கொண்டதினால் நெஃபிலிம்கள் (இராட்சதர்கள்) பிறந்தார்கள் என்று பெரும்பாலும் பேர்கள் நம்புகிறார்கள்.
புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்கு 1½ அடி உயரம் இருக்கும், அதாவது முழு வயதுவந்தோர்களின் உயரத்தின் ¼ உயரம் ஒரு குழந்தைக்கு இருக்கும். அப்படியானால், 72 அடி உயரமுடைய ஒரு நெஃபிலிம் பிறந்த சமயத்தில் அதற்கு 18 அடி உயரம் இருக்கவேண்டும். 6 அடி மட்டும் உயரமுடைய ஒரு மனிதப் பெண்ணுக்கு 18 அடி உயரமுடைய ஒரு குழந்தயை பெற்றெடுக்கக் கூடுமா? (முழு வயதுவந்த ஒரு நெஃபிலிமுக்கு 450 அடி உயரமிருந்தால் அது பிறந்தபோது அதற்கு 112½ அடி உயரம் இருக்கவேண்டும். கட்டுக்கதைகள் உண்டுபண்ணுகிற போலி விஞ்ஞானிகளுக்கு 6 அடி உயரம் மட்டுமுள்ள மனிதப் பெண்கள் 18 அடி, அல்லது 112½ அடி உயரமுடைய குழந்தைகளை எப்படி பெற்றெடுப்பார் என்கிற கேள்விக்கு பதிலளிக்கமுடியுமா?
ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் இதைப்போன்ற கட்டுக்கதைகளால் ஏமாற்றப்பட்டு நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகள் என்று புகைப்படங்களை முகநூல் (Facebook) போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றுவதுண்டு; ஆனால் ஃபோட்டோஷாப் பண்ணப்பட்ட புகைப்படங்கள் என்றும் “Shadow of the Colossus” போன்ற வீடியோ கேம்களின் விளம்பரங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்றும் தெரியாமல் இருக்கிறார்கள்.
ஜலப்பிரளயத்துக்கு முன்பு பிழைத்திருந்த விலங்குகளுடையும் பறவைகளுடையும் எலும்புக்கூடுகள் காட்சியகங்களில் (Museums) இருக்கின்றன. 72 அடி, அல்லது 450 அடி உயரமுடைய நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகள் மட்டும் ஏன் காட்சியகங்களில் இலலை? புகைப்படங்களை பார்த்த ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள், ஆனால் உண்மையான நெஃபிலிம்களின் எலும்புக்கூடுகளை பார்த்தவர்கள் யாரும் இல்லை. 2004 டிசம்பரில் தமிழ் நாட்டில் சுனாமி உண்டானபோது நெஃபிலிம்களின் எலும்புக்கூடு ஒன்று கடற்கரையில் காணப்பட்டதாம், ஆனால் தமிழ் நாட்டில் யாரும் அதை பார்க்கவில்லை, அமெரிக்காவில் யாரோ அதின் புகைப்படம் பார்த்தாராம்!
அதற்கு அப்புறமும்...
ஆதியாகமம் 6:4 பொதுவான தமிழ் மொழிபெயர்ப்பில் சரிசயாக வராததால் இன்னும் ஒருசில மொழிபெயர்ப்புகளிலிருந்தும் எடுத்துரைக்கிறேன்:
1) தெய்வப்புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர்பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர். (கத்தோலிக்க மொழிபெயர்பு)
2) அப்பெண்களும் பிள்ளைகளைப் பெற்றனர். அந்நாட்களிலும், அதற்குப் பிறகும் இராக்ஷதர்கள் இருந்தார்கள். அவர்கள் பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்ற வீரர்களாகவும் இருந்தனர். (WBTC மொழிபெயர்பு)
KJV Gen 6:4 There were giants (Nephilim) in the earth in those days; and also after that, when the sons of God came in unto the daughters of men, and they bare children to them, the same became mighty men which were of old, men of renown.
ASV Gen 6:4 The Nephilim were in the earth in those days, and also after that, when the sons of God came unto the daughters of men, and they bare children to them: the same were the mighty men that were of old, the men of renown.
ESV Gen 6:4 The Nephilim were on the earth in those days, and also afterward, when the sons of God came in to the daughters of man and they bore children to them. These were the mighty men who were of old, the men of renown.
அதாவது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடின நாட்களிலும், அதற்கு பிறகும் இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள். கவனிக்கவேண்டிய விஷயங்கள்:
- இராக்ஷதர்கள் மனுஷகுமாரத்திகளோடே கூடவில்லை.
- மனுஷகுமாரத்திகள் தேவகுமாரர்களுக்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த காலத்திலும் அதற்கு பிறகும் இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள் என்பதே அல்லாமல், மனுஷகுமாரத்திகள் இராக்ஷதர்களை பெற்றெடுத்தார்கள் என்று வசனம் கூறுபதில்லை. (பரிவுடன் வேறுவேறு வேதாகம மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு பாருங்கள்.)
ஜலப்பிரளயத்துக்கு அப்புறமும் கூட இராக்ஷதர்கள் பூமியில் இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது:
எண் 13:33 அங்கே இராட்சதப் <H5303> பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
இந்த வார்த்தைகள் யோசுவா, காலேப் என்பவர்களுடன் கானான் நாட்டை வேவுபார்க்கப் போய் வந்தவர்கள் பரம்பச்செய்த துர்ச்செய்திகளுக்கு உட்பட்டவை என்பதை ஒத்துக்கொள்கிறேன்; ஆகிலும், ஏனாக்கின் குமாரர் அங்கே இருந்தார் என்பதற்கும் அவர்கள் இராட்சதர்களாக இருந்தார் என்பதற்கும் ஐயம் இல்லை. [ஏனாக்கின் குமாரர்களைப் பற்றி எண்.13:22,28,33; உபா. 1:28; 2:10,11,21; 9:2; யோசு.11:21,22; 14:12,15; 15:13,14; 21:11; நியா. 1:20 என்கிற வசனங்களில் வாசிக்கவும்.]
இராட்சதர்கள் அனைவரும் ஏனாக்கின் குமாரர்கள் அல்லை, நெஃபிலிம்கள் அனைவரும் ஏனாக்கின் குமாரர்களாக இருந்தார்கள்.
உண்மையாகவே நெஃபிலிம்களுக்கு 72 (அல்லது 450) அடி உயரமிருந்தால் 6 அடிக்கு கீழ்ப்பட்ட உயரமிருந்த காலேபுக்கு தனியாளாக அப்படிப்பட்ட 3 இராட்சதர்களை துரத்த முடியுமா?
யோசு 15:14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் 3 குமாரரையும் காலேப் துரத்திவிட்டு...
இராட்சதர்களின் உயரம்
எண் 13:33ல் நெஃபிலிம் என்றால் ஏனாக்கின் மக்கள் என்பதாக கூறின பிறகு, உபா 2:11ல் ஏனாக்கின் மக்கள் என்றால் இராட்சதர்கள் (ரெஃபாயிம்) என்பதாக கூறப்பட்டுள்ளது. உபா 3:11ல் இராட்சதரில் ஒருவரான பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனுடைய கட்டிலின் அளவீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:
உபா 3:11 மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன் மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, 9 முழ நீளமும் 4 முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா?
1 முழம் என்றால் 1½ அடி. 9 முழம் என்றால் 13½ அடி. நமது வீடுகளில் காணப்படுகிற கட்டிலின் நீளம் 6⅔ அடி, ஆனால் நமது உயரம் பொதுவாக 6 அடி இருக்காது. அப்படி பார்த்தால் ஓகின் உயரம் ஏறத்தாழ 12½ அடி இருக்கவேண்டும். 72 அடி, அல்லது 450 அடி உயரமுடைய இராட்சதர்கள் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளில் (1திமோ 4:17) இருக்குமே தவிர, உண்மையில் இல்லை.
எண் 13:33ல் “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்பதாக கூறப்பட்டுள்ளதை சொல்லுக்குச்சொல் புரிந்துகொள்பவர்கள் வேதம் உருவக மொழி (figurative language) எங்கும் பயன்படுத்தியிருக்கிறதை கவனிக்கவில்லையா? இதே நிகழ்வைப் பற்றி மோசே திரும்பவும் கூறினபோது இன்னொரு முறைமையாக கூறினதை கவனித்தீர்களா?
உபா 1:28 நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம்...
“நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்பதின் விளக்கம் “அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும்” என்பதே அல்லாமல் அவர்களுக்கு 72 அல்லது 450 அடி உயரம் இருந்தது என்பதல்லை!
வேதத்திலிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும் சொல்லுக்குச்சொல் புரிந்துகொள்பவர்களிடம் ஒரு கேள்வி: உபா 1:28ல் கூறப்பட்டுள்ளது போல் வானத்தை அளாவும் மதில்கள் கட்டுகிறதற்கான தொழில் நுட்பவியல் (technology) மோசேயின் காலத்தில் இருந்ததா?
தொடரும்,...
கிறிஸ்துவுக்குள்.
டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக