திங்கள், 29 செப்டம்பர், 2014

வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்திலை நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் நடந்தேற வேண்டியதா?

வெளிப்படுத்தல் 19, 20, 22 அதிகாரங்களைப்பற்றிய பெரும்பாலும் கிறித்தவர்களின் புரிந்துகொள்ளுதல் ஏறத்தாழ இப்படியே:

  • நிச்சயமற்ற எதிர்காலத்தில் எப்பொழுதோ:
  • இயேசுக் கிறிஸ்து மேகங்கள் மேல் வருவார்,
  • பிசாசை கட்டிப்போடுவார்,
  • 1000 வருடம் அரசாளுவார்,
  • பிசாசை நாசம் பண்ணுவார்.
  • அதின் பிறகு மரித்தோரெல்லாம் உயிர்ப்பிக்கப்பட்டு நியாயத்தீர்ப்படைவார்கள்,
  • பாவிகள் நாசமடைவார்கள்,
  • பரிசுத்தவான்கள் பரலோகத்துக்கு சேர்க்கப்படுவார்கள்,
  • அப்பொழுது புதிய எருசலேம் பரத்திலிருந்தும் இறங்கிவரும்,
  • ஆட்டுக்குட்டியாரவருக்கும் அவருடைய மணவாட்டிக்கும் கலியாணம் நடக்கும், 
  • அதற்கு மேலெ கண்ணீரும், மரணமும், துக்கமும்,  அலறுதலும், வருத்தமும் இராது,
  • பூமி அமைதிப்பூங்கா ஆயிடும்!


இந்த அமைதிப்பூங்கா என்கிற கருத்தை பலப்படுத்த ஏசாயாவின் ஆகமத்திலிருந்தும் அழகான காட்சிகளைக்கூட இணைக்கிறார்கள் போதகர்கள். இவைகளையெல்லாம் சந்தேகமில்லாமல், கேள்வி கேட்காமல் நம்புகிறார் கிறித்தவர்கள்.


இப்படி பூமியெல்லாம் அமைதிப்பூங்கா ஆன பிறகுதானா வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடந்தேற வேண்டியது?


வெளிப்படுத்தல் 22:1-5 வசனங்களை வாசிப்போம்:

வெளி 22:1 பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளி 22:2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
வெளி 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 
வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள் மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்

(இந்த அதிகாரத்தில் “நகரம்” என்பது புதிய எருசலேம். வெளி 21:23, 22:5 மற்றும் வெளி 21:4 22:3 போன்ற வசனங்களை ஒப்பிட்டு பார்க்கவும்.)

அந்த விருட்சத்தின் இலைகள் “ஜனங்கள்” ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

இங்கெ “ஜனங்கள்” என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கு வார்த்தை G1484 ἔθνος (ethnos). இந்த வார்த்தையின் விளக்கம் “புறஜாதியார்” - மத் 10:5, 18; 12:18, 21; 20:19, 25 போன்ற வசனங்களை பார்க்கவும். (இந்த வார்த்தை தமிழ் வேதாகமத்தில் ஒருசில வசனங்களில் “ஜனங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தவறு.)

நோயாளிகளாகிய, குணமடையாத “ஜனங்கள்” அல்லது “புறஜாதியார்” இருக்கிறதினாலே தானே அவர்களை குணப்படுத்தக்கூடிய “விருட்சத்தின் இலைகள்” தேவையாயிருக்கிறது?

உலகமெல்லாம் அமைதிப்பூங்கா ஆன பிறகு, சாபம் இராத நிலைமையில், நோயாளிகளாகிய, குணமடையாத “ஜனங்கள்” எங்கே இருந்து வந்தார்கள்?

வெளி 20:11-15ல் பொது நியாயத்தீர்பு முடிந்து, பாவிகளாகிய அவிசுவாசிகள் அனைவரும் அக்கினிக்கடலிலே போடப்பட்டார்களல்லவா, அப்படியிருக்க, இந்த குணமடையாத ஜனங்கள் எங்கே இருந்து வந்தார்கள்?

நகரத்தின் வெளியில் யாரார் இருக்கிறார்கள்?


“அமைதிப்பூங்கா” ஆகிய பூமியில் இருக்கும் புது எருசலேமின் வெளியில் யாரார் இருக்கிறார்கள் என்பதை வெளி 22:14-15ல் பார்க்கிறோம்:

வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

பாவிகள் (சூனியக்காரர், விபசாரக்காரர், கொலைபாதகர், விக்கிரகாராதனைக்காரர், பொய்யர்கள்) அனைவரும் நியாயத்தீர்ப்படைந்து (வெளி 20:11-15) அக்கினிக்கடலில் போடப்பட்டார்களல்லவா? இப்படியிருக்க புது எருசலேமின் வெளியில் இவர் எப்படி வந்தார்கள்?

ஒருவேளை, அப்படியல்லை, பாவிகள் அக்கினிக்கடலில் தான் இருப்பார்கள் என்று நீங்கள் அடம்பிடித்தால், அக்கினிக்கடலுக்கும் புதிய எருசலேமுக்கும் நடுவில் வாசல்கள் இருக்குமா? என்று கேட்கிறேன். ஏனென்றால்:

வெளி 22:14 ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

புது எருசலேமுக்கு 12 வாசல்கள் இருக்கிறது என்று வெளி 21:12 கூறுகிறது.

வெளி 22:14 திரும்பவும் வாசியுங்கள், வாசல்களுக்கு வெளியே இருப்பவர்கள் அவருடைய கற்பனைகளின்படி செய்தால் வாசல்கள் வழியாக உள்ளே பிரவேசிக்கக்கூடும் அல்லவா? ஏற்கனவே அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் நகரத்துக்குள் இருப்பார்களல்லவா? அவர்களுக்கு உள்ளே பிரவேசிக்கும்படிக்கு வாசல்கள் தேவையில்லையே?

அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். 

வெளி 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 
வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள் மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

வெளிப்படுத்தல் 20ம் அதிகாரத்தில் 20ம் அதிகாரத்தில் பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெற்று இயேசுவோடெ கூட 1000 வருடம் அரசாளுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கே அவருடைய ஊழியக்காரர் “சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அரசாளுவது 1000 வருடமாக இருந்தாலும் சரி, சதாகாலமாக இருந்தாலும் சரி யார் மேல் அரசாளுவார்கள்? பரிசுத்தவான்கள் ஒருவர் மேல் ஒருவர் அரசாளுவாரா? குடிமக்கள் (பிரஜைகள், citizens) இல்லாமல் அரசாளுகிற அரசர்கள் உண்டா?

எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டா?

நான் என் பதிவுகளை வாசிப்பவர்களை விட அறிவாளியல்லை, ஆனால் தேவன் மிக அறிவாளியும் அவருடைய வார்த்தை அறிவின் பெருங்கடலுமாக இருக்கிறது. அந்த பெருங்கடலில் ஆய்ந்து தோண்டினால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடையாமற்ப் போவதில்லை. இது நான் ஒருவர் என்னுடைய அறிவை உங்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் படி எழுதுகிற பதிவு அல்லை, இது ஒரு கூட்டான முயற்சி. நீங்கள் பார்த்திருக்கிறதும், ஆனால் கவனியாமல் போனதுமான எத்தனையோ வசனங்கள் இருக்கலாம்? உங்கள் மனதில் உருவானதும், ஆனால் கேட்காமற் போனதுமான எத்தனையோ கேள்விகள் இருககலாம். ஒரு கூட்டான முயற்சியினால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி.

யோவா 7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

________________________________________
வெளி 22:1ல்  river[G4215] of water[G5204] of life[G2222] என்பதில் G2222 என்கிற வார்த்தை
யோவா 7:38ல் rivers[G4215] of living[G2198] water[G5204] என்பதில் பயன்படுத்தியிருக்கும் G2198 என்கிற வார்தையிலிருந்தும் உண்டானது.

G2222
ζωή (zōē, dzo-ay')
From G2198; life (literally or figuratively): - life (-time).
________________________________________

இயேசவை நம்புகிறவர்களின் உள்ளத்திலிருந்தும் ஜீவத்தண்ணீருள்ள நதி புறப்படும் என்று யோவான் 7:38

அதே யோவான் வெளிப்படுத்தலில் “ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறது” என்று கூறுகிறார்.

இந்த இரண்டு வசனங்களும் உண்மையாயிருந்தால் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் இயேசுவை நம்புகிறவர்களின் உள்ளத்தில் இருக்கவேண்டும்.

தேவனுடைய சிங்காசனம் இயேசுவை நம்புகிறவர்களின் உள்ளத்தில் இருக்கிறது என்பதாகி கூறுகிற வசனம் இருக்குமா என்று எனக்கு தற்பொழுது தெரியாது, ஆனால், நீங்களே தேவனுடைய ஆலயம் என்று கூறுகிற வசனம் எனக்கு தெரியும்:

1கொரி 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 

அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.




“அரசாளுவார்கள்” என்று கேட்டவுடன் பெரும்பாலும் கிறித்தவர்கள் திரைப்படங்களில் (23ம் புலிகேசி) அரசர்கள் அரசாளுவதுபோல் அவர்களும் அரசாளுவார் என்று கனவு காண்கிறார்கள்.

முதல் நூற்றாண்டில் வெளிப்படுத்தலின் ஆகமம் யாருக்கு எழுதப்பட்டுள்ளதோ அந்த ஏழு சபைகளுக்கு (வெளி 1:4) யோவான்:

வெளி 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின (And hath made us kings and priests unto God ) என்று கூறும்போது அது இறந்தகாலம் (past tense) ஆயிற்று. (இந்த வசனம் எல்லா மொழிபெயர்ப்புகளிலும் இறந்தகாலமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நடந்தேறவேண்டிய நிகழ்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகள் இல்லை.)

அதாவது, முதல் நூற்றாண்டில் ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கு சார்ந்தவர்கள் அல்லது அந்தச் சபைகளின் மூப்பர்கள் தேவனுக்கு ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள். அவர்கள் 23ம் புலிகேசியைப் போல் கிரீடமும் செங்கோலும் அணிந்து சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்க வாய்ப்பு கிடையாது.

இதே கருத்தை பேதுரு உறுதிப்படுத்துகிறார்.

கீழே குறிப்பிடப்பட்ட வசனத்தில் ராஜாக்கள் என்று விளக்கம் வருகிற கிரேக்கு வார்த்தை - G934 - ராஜரீகமான என்று மொழிபெயர்க்கப்பட்டதைத் தவிர, பேதுரு கூறுகிற கருத்து மேற்ச்சொன்னது தான்.

1பேத் 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்


G934 (βασίλειος, basileios, bas-il'-i-os)
From G935; kingly (in nature): - royal.
G934 (basileios) என்கிற வார்த்தை G935லிருந்தும் உண்டானது. 

G935 (βασιλεύς, basileus, bas-il-yooce')
Probably from G939 (through the notion of a foundation of power); a sovereign (abstractly, relatively or figuratively): - king.
G935 (basileus) என்கிற வார்த்தைக்கு ராஜா, அரசன் என்று பொருள். 


பேதுரு “நீங்கள் எதிர்காலத்தில் எப்பொழுதோ ராஜரிகமான ஆசாரியக்கூட்டமாவீர்கள்” என்று கூறாமல், “நீங்கள் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாக ... இருக்கிறீர்கள்” என்று கூறினப்போது அவர் என்ன கூறுகிறது என்பது அவருக்கே தெரியாதா?

இதே தலைப்புக்கு தொடர்புள்ள இன்னும் ஒருசில கருத்துக்களை நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன், நீங்கள்? என்கிற பதிவில் வாசிக்கவும்.

இது ஓர் தொடக்கம், இன்னும் சார்பற்ற, காரண காரியத் தொடர்புடைய (logical) ஏராளமான கேள்விகளும் அவைகளுக்கு எனக்கு தெரிஞ்ச பதில்களும் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்

டோம்ஸான் கட்டய்க்கல்

நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்ந்திருக்கிறேன், நீங்கள்?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

நான் இங்கே பெங்ளூருவில் ஒரு சிறு வீட்டில் தங்கியிருக்கிறேன். ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் ஓர் பிளாத்திக்கு இருக்கை (plastic chair) வாங்க முடிஞ்சது. இந்த சிறு வீட்டில் என் பிளாத்திக்கு இருக்கையிலிருந்து உறுதியாக கூறுகிறேன்: “நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன்”.

பூமியில் பிழைத்திருக்கிற நான் (டோம்ஸான்) பரத்தில் கிறிஸ்துவுடனேகூட உட்கார்நிருக்கிறேன் என்று சொல்லும்போது இந்த மனிதனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த பதிவை வாசித்து முடிக்கும்போது ஒருவேளை நீங்களும் என்னுடனே, “நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன்” என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.


நான் மரித்தவன்


நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோது கிறித்தவம் என்கிற மதத்தில் சேரும்படிக்கோ, கிறித்தவத்தின் ஏதோ ஒரு வகுப்பில் சேரும்படிக்கோ ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவில்லை.

என்னுடைய ஞானஸ்நானம் ஒரு நிகழ்வாக இராமால் மாற்றத்தின் ஒரு செயல்முறையாக இருந்தது என்று எண்ணுகிறேன். (process of transformation)

ரோம 6:3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
ரோம 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோம 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோம 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோம 6:7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.

நான் பாவத்துக்கு மரித்தேன், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டேன், இப்பொழுதோ எனக்கும் மற்று சீடர்களுக்கும் வித்தியாசமே கிடையாது.

கலா 3:27: ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
கலா 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கிறது என்பது நிறைவேறினது நான் ஞானஸ்நானம் மூலமாக பாவத்துக்கு மரித்து உயிர்ப்பிக்கப்பட்டப்பொழுதே.


இனிமேல் நான் மரிக்கமாட்டேன், இதை இதை விசுவாசிக்கிறாயா?


யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா? என்றார்.


நான் இப்பொழுது நித்தியஜீவனை பெற்றுக்கொண்டிருக்கிறேன்.


(இந்த ஓர் கருத்தை தமிழில் விளக்குவது எளிதல்லை)

யோவா 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

ஒருவனுக்கு தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் நம்புகிற அனைவருக்கும் எதிர்காலத்தில் எப்பொழுதோ நித்தியஜீவன் கிடைக்கப்போகிறது என்று கூறாமல், அறிவதே நித்தியஜீவன் என்பதாகி கூறப்பட்டுள்ளதை கவனிக்கவும்.


மிக முக்கியமான கருத்து.



ஒருவேளை இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்கிற எண்ணம் உங்கள் மனதில் எழும்பினாலும்கூட கொஞ்சம் பொறுமையுடன் வாசியுங்கள்.

நான் கிறிஸ்துவுடன் மரித்தேன், கிறிஸ்துவுடன் உயிர்ப்பிக்கப்பட்டேன், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டேன், இப்பொழுது:

எபே 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
எபே 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
எபே 2:6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
எபே 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.


  • இங்கெ “உன்னதங்களிலே” என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை ἐπουράνιος (G2032). இந்த வார்த்தையின் விளக்கம் “பரம” அல்லது “பரலோகம்” (Heavenly). இதே வார்த்தை பயன்படுத்தியுள்ள மற்று வசனங்கள்:

    மத் 18:35 ... என் பரம பிதாவும் ...
    யோவா 3:12 ...பரம காரியங்களை...
    எபி 6:4 ... பரம ஈவை ...
    எபி 8:5 ... பரலோகத்திலுள்ளவைகளின் ...
    எபி 9:23 ... பரலோகத்திலுள்ளவைகளோ...

    ஒருசில வசனங்களில் இந்த வார்த்தை வானம் என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனங்களை வாசிக்கும்போது அங்கெயெல்லாம் பரம அல்லது பரலோகம் என்கிற விளக்கம் வருகிறதைப் பார்க்கலாம்.
  • “உன்னதங்களில்” என்பது பரலோகம் என்கிற விளக்கம் கொடுக்கும் இன்னொரு வசனம்:

    எபே 1:21 அவரை (இயேசுவை) உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
  • எபே 2:6, 7 வசனங்களை யாரும் எதிர்காலத்தில் நடக்கவேணடிய நிகழ்ச்சி போல யாரும் மொழிபெயர்க்கவில்லை என்பதை கவனிக்கவும்.

பெரும்பாலும் கிறித்தவர்கள் இந்த வசனங்களை கவனிக்கவே இல்லை, அவர்கள் இப்பொழுதும் கூட அவர்கள் ஜெபங்களில் “நாங்கள் மண்ணும் தூளுமாயிருக்கிறோம்” என்று கதறுகிறார்கள். ஒருவேளை அவர்கள் கவனித்தாலும் அது இறந்தகாலத்தில் (past tense) எழுதப்பட்ட்து என்பதைக் கவனிக்கமாட்டார்கள்.

இல்லை, அப்படியல்லை, அந்த வசனம் கூறுகிறது “நம்மை உன்னதங்களிலே ... உட்காரவும் செய்தார்” என்றல்ல “நம்மை உன்னதங்களிலே ... உட்காரவும் செய்வார்” (அதாவது, வருங்காலத்தில் எப்போழுதோ நிகழும்) என்று வாதாடினால், அந்த வசனத்திலிருக்கும் மற்று உட்பிரிவுகளும் வருங்காலத்தில் நிகழவேண்டுமல்லவா? ஒரு வசனத்தில் இருக்கும் இறந்தகால நிகழ்ச்சிகளில் ஓன்று மற்றும் வருங்காலத்தில் நிகழும் என்று சொல்வது கீழ்த்தரமான விளக்க உரை (exegesis).

ஒரு உட்பிரிவு வருங்காலத்தில் நிகழவேண்டும் என்பாயாகில், எல்லா உட்பிரிவுகளும் வருங்காலத்தில் நிகழவேண்டும். அப்படியானால்:


  • அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பிக்கப்படவில்லை! வருங்காலத்தில் எப்பொழுதோ உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.
  • நீங்கள் கிருபையினாலே இரட்சிக்கப்படவில்லை வருங்காலத்தில் எப்பொழுதோ இரட்சிக்கப்படுவீர்கள்.
இறந்தகால நிகழ்ச்சிகளை வருங்கால நிகழ்ச்சிகளாக விளக்கினால் மட்டுமே பெரும்பாலும் கிறித்தவர்களின் கோட்பாடுகளும் இறையியலும் இறுதியியலும் சரியாய் வரும்.


அன்புடன்

டோம்ஸான் கட்டய்க்கல்

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

புதிய எருசலேம் அல்லது பரம எருசலேம்.

பசியோடிருந்த பேதுருவுக்கான ஞானதிருஷ்டியிலே (அப்பொஸ்தலர் 10:10-12) எல்லா விதமான மிருகங்களும், பிராணிகளும், பறவைகளும் உடைய நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டி தரையிலே இறங்குகிறதை பார்த்தது போல, புது எருசலேம் பரலோகத்தில் நின்றும் இறங்கி வரும் என்பதே வெளிப்படுத்தல் 21ம் அதிகாரத்தைப்  படிக்கும் ஏராளமான பேர்களுடைய எண்ணம். இந்த புது எருசலேம் பழைய எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்றும் எண்ணுகிறார்கள்.

“வெளிப்படுத்தலின் ஆகமம் உங்களுக்கு விளங்காது” என்கிற எண்ணத்தை யாரோ கிறித்தவர்களின் மூளைகளில் பதித்துள்ளனர். அது உண்மை என்று எண்ணி கிறித்தவர்கள் அந்த ஆகமத்தை புரிந்துகொள்ள முயிர்ச்சி பண்ணுவதே விட்டுவிட்டார்கள்.

வெளிப்படுத்தல் வாசிக்கும்போது தங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக்கொண்டவைகளையெல்லாம் மறந்துவிடுவார்கள் கிறித்தவர்கள்.

உதாரணமாக புது யெருசலேமின் உயரம் 12,000 ஸ்தாதி, அகலம் 12,000 ஸ்தாதி, நீளம் 12,000 ஸ்தாதி என்கிற முறையில் ஆயிருந்தது (வெளி 21:16) என்று கூறப்பட்டிருக்கும்போது 12,000 ஸ்தாதி என்றால் என்ன, அது எவ்வளவு கிலோ மீட்டர் வரும் என்று யோசிக்கமாட்டார்கள்.

ஒரு ஸ்தாதி (பர்லாங்) என்பது 0.201168 கி. மி. அதாவது 2414 கி. மி X 2414 கி. மி X 2414 கி. மி உடைய  சதுரங்கக்கட்டை போன்ற புது எருசலேம் பழைய எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்று எண்ணுகிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால்: இந்த புது எருசலேமின் அடிமட்டம் (base) 58,27,396 சது. கி. மி (2414 கி. மி X 2414 கி. மி) என்பதே. நமது இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சது. கி. மி.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, நேப்பாள், பூட்டான், மையன்மார், அப்கானிஸ்தான் என்னும் நாடுகளின் ஆக பரப்பளவு 58,06,191 சது. கி. மி மட்டுமே. 




இப்படிப்பட்ட புது எருசலேம் 125 சது. கி. மி பரப்பளவுடைய தற்பொழுதிருக்கும் எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்கிற எண்ணத்தைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்? இப்பொழுது பலஸ்தீன் நாட்டில் இருக்கும் இஸ்ரவேல் நாட்டின் பரப்பளவு 20,770 சது. கி. மி மட்டுமே. 


12,000 ஸ்தாதி நீளமும் 12,000 ஸ்தாதி உயரம் 12,000 ஸ்தாதி அகலமும் உடைய புது எருசலேம் பூமியின் மேல் உட்கார்ந்தால் எப்படியிருக்கும் என்பதை காண்பிக்கும் வரைப்படம்.
பூமிக்கு மேல் பிராணவாயு (oxygen) கிடைக்கும்   அடி வளிமண்டலத்தின் (troposphere) உயரமனது 12 கி.மி மட்டுமே. 9 கி.மி மட்டும் உயரமிருக்கும் எவரெஸ்ட் கொடுமுடியின் மேல் ஏறுபவர்களுக்கு மூச்சு வாங்குவது கஷ்டம். அப்படியிருக்க 2414 கி.மி உயரமிருக்கும் புதிய எருசலேம் என்கிற சதுரங்கக்கட்டையின் 12 கி.மிக்கு மேற்ப்பட்ட 2402 கி.மி.வருகிற பங்கு பயனற்றதாக இருக்கும். 

[ஒருவேளை தேவன் புதிய வானத்தை உண்டுபண்ணும்போது இந்த 12 கி.மிக்கு மேல் இரக்கும் பங்குக்கு உபயோகம் இருக்கும் என்று வாதாடலமாம், ஆனால், வேதத்தில் வானம் பூமி என்பவைகளின் குறியீடுகள் (symbolism) என்ன என்று விளங்கும்போது வாதாட்டத்துக்கு முடிவு வரும்.]

ஆதாம் பாவம் பண்ணினதினாலெ பூமியதிர்ச்சி உண்டாகத்தொடங்கிற்று என்று வேதம் கூறுகிறதில்லை. பூமியின் ஆரம் (radius) கிட்டத்தட்ட 6370 கி. மி. பூமி அதின் அச்சில் (axis) சுற்றுகிற வேகம் ஒரு மணி நேரத்தில் 107208 கி.மி. ஒரு வருடம் ஏனத்தாழ 499 பூமியதிர்ச்சிகள் ஏற்படுகிறது. இந்த நிலைமை நிலைநிற்கும்போது பூமியின் மீது இன்னும் 2417 கி.மி. உயரமுடைய புதிய எருசலேம் என்கிற சதுரங்கக்கட்டை கூட உட்காரும்போது பூமி அதின் சுற்றுப்பாதையிலிருந்தும் (orbit) விலகிப்போயிடும்.

சுருக்கமாக சொன்றால்: புது எருசலேம் என்பது ஒரு அடையாளம் என்பதைத் தவிர மெய்யாகவே பரலோகத்திலிருந்தும் இறங்கிவரவேண்டிய சதுரங்கக்கட்டை அல்லை.


புது எருசலேம் முதல் நூற்றாண்டிலே இங்கே இருந்தது!


பரலோகத்தில் நின்றும் இறங்கி வருகிற புது எருசலேம் (வெளி 21:2) தான் பரம எருசலேம் என்று நம்புவீங்களா?

Rev 21:2 ... new Jerusalem [G2419] , coming down from God out of heaven [G3772] ...

Heb 12:22 ... the heavenly [G2032] Jerusalem [G2419],...

G3722 = “ouranos” வானம், பரலோகம்
G2032 = “epouranios” இது G3722ல் நின்றும் உருவானது. (derived.) "வானம்" என்கிற வார்த்தையில் நின்றும் வானத்தின், வானத்தை போன்ற வார்த்தை உருவானது போல. (dative case and nominative cases in grammar).

இந்த G2032 தான் மத்தேயு 18:35ல் "பரம" பிதா (heavenly father) யோவான் 3:12ல் "பரம" காரியங்கள் (heavenly things)

எபிரேயர் 12:22-24ல் பவுல் சொல்லுகிறது என்னவென்றால்:

எபிரேயர் 12:22-24 நீங்களோ சீயோன் மலையின் இடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் இடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களின் இடத்திற்கும், .... வந்து சேர்ந்தீர்கள்.

இங்கே "நீங்கள்" என்றால் "முதலாம் நூற்றாண்டில் இருந்த பவுலுடைய நிருபத்தை வாசிக்கிறவர்கள்" (நாம் மட்டும் அல்லை).

முதல் நூற்றாண்டில் இருந்த கிறித்தவர்கள் "ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் இடத்திற்கு" (வசனம் 22) "வந்து சேர்ந்தார்கள்". (இறந்தகால வினைச்சொல்லை - past tense - கவனிக்கவும்).

முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் "பரம எருசலேமின் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்" என்றால் பரம எருசலேம் இராவிட்டால் அவர்கள் எப்படி வந்துசேருவார்கள்?

நண்பர்களே, பரம எருசலேம் பூமிக்குரியது அல்லை! பூமிக்குரிய எருசலேம் அடிமைத்தனத்தின் அடையாளம், நாமோ விடுதலை பெற்றவர்கள்!

கலாத்தியர் 4:25 ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய் மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடே கூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
கலாத்தியர் 4:26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.

நாமோ, நண்பர்களே, சுயாதீனமுள்ளவளின் பிள்ளைகள், பூமிக்குரிய எருசலேமை விரும்புகிறது அடிமைத்தனத்தை விரும்புகிறதுக்கு ஒப்பானது!

அன்புடன்

டோம்ஸான் கட்டய்க்கல்