நண்பர்களே,
இந்த பதிவை வாசிக்கும்முன் இந்த தொடரின் #1, #2 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.
மனிதர்களை குறைத்து எடைபோடாதீர்கள், அவர்கள் தேவனையே சோதித்தவர்கள்.
- எபி 3:8 வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
- எபி 3:9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, 40 வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
இஸ்ரவேல் மக்கள் சர்வவல்லமையுள்ள தேவனை சோதித்ததும் பரீட்சைபார்த்தது ஒருவிசை அல்லை, இரண்டுவிசை அல்ல, எகிப்திலிருந்தும் புறப்பட்ட கொஞ்சம் காலத்துக்குள் 10 விசை சோதித்தார்கள்::
- எண் 14:22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே 10 முறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும்,
இந்த வசனம் எழுதப்பட்ட பிறகு எத்தனை விசை தேவனை சோதித்தார்கள் என்பதற்கு கணக்கு இல்லை.. குடிக்கத் தண்ணீர் இல்லாவிட்டால் தேவனை சோதிப்பார்கள், சாப்பாடு இல்லாவிட்டால் தேவனை சோதிப்பார்கள், சாப்பாடு கிடைத்தால், கிடைத்த உணவுக்கு சுவையில்லை என்று தேவனை சோதிப்பார்கள்...
ஆவிக்குரிய நிலைமையில், கண்ணுக்கெட்டாதவராக இருக்கிற தேவனை சோதிப்பதற்கு மனிதர்களாலே கூடுமானால், பூமியில் நம்மைப் போல் சதையும் எலும்புமாக பிறந்த அவருடைய குமாரனாகிய இயேசுவை சோதிக்கிறதற்கு வேறொருவர் தேவைப்படுவாரா? யோசித்துபாருங்கள்..
உணவுபொருளை பற்றிய் சோதனை (மத் 4:3)
எங்கள் சபையில் மாதத்துக்கு ஒருமுறை மாநாடு நடக்கும். காலையுணவு சாப்பிட்டுவிட்டு போதகர்கள் சொல்வதைக் கவனமாக கேட்டுகொண்டே இருப்பார்கள் சபையார் அனைவருக்கும். ஏறத்தாழ 12 மணியாகும்போது அருகில் உள்ள கொட்டகையிலிருந்து பிரியாணியின் நறுமணம் வரத்தொடங்கும், அப்பொழுது அனைவருடை கவனமும் போதகர் சொல்லும் வார்த்தைகளில் இராமல், பிரியாணி கொதித்துகொண்டிருக்கும் கொப்பரைக்குள் அமிழ்ந்திருக்கும். இங்கே அவர்களை சோதிக்க சாத்தான் வருவாரா? இல்லை, வருகிறது பிரியாணியின் நறுமணம் மட்டும்தான். பசியெடுக்கத் தொடங்கின வேளையில் சாப்பாட்டின் நறுமணம் அவர்களை அடிமைப்படுத்துகிறது. உடலின் பலவீனம்!!
காலையுணவு சாப்பிட்ட மனிதர்களுக்கே இவ்வளவு பலவீனமிருந்தால், உபவாசமாக இருக்கிறவர்களுக்கு எவ்வளவு பலவீனம் இருக்கும்? அதுவும் அப்படி உபவாசமாக இருக்கிறவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்பதை மறவாதீர்கள். தான் என்னத்தைச் செய்ய நினைத்தாலும் அது நடக்கும் என்று அவருக்கு தெரியாதா? அவர் மரித்தவர்களை உயிரோடே எழுப்பினவர், 5 அப்பங்களை 5000 ஆக்கினவர். கற்களை அப்பமாக மாற்றுகிறது அவருக்கு எளிது.
நீங்கள் ஒரு பெரிய பதவியில் இருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது. உங்கள் அலுவலகத்திலிருந்தும் தேவையான பணம் எடுத்துக்கொண்டாலும் யாருக்கும் தெரியாது. அப்படி எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் உங்களுக்கு எவ்வளவு மனவுறுதி தேவையாக இருக்கும்?
இயேசுக்கு அவர் என்ன நினைத்தாலும் அது நடக்கும் என்கிற விழிப்புணர்வு இருந்திருக்காதா? கண்டிப்பாகவே இருந்திருக்கும். தனக்கு இருக்கும் வல்லமையை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கிறதை விட பெரிய சோதனை எதுவும் இல்லை. அதனாலே தான் வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்களில் ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு மிகப்பெரிய வெகுமதி அளிக்கப்படும் என்று 7 முறை கூறப்பட்டுள்ளது. (வெளி 2:7, 11, 17, 26; 3:5, 12, 3:21 காணவும்)
உணவுபொருளின் விஷயத்தில் இயேசுவை சோதித்தது சாத்தான் மட்டுமல்லை!
ஒருவிசை கப்பர்நகூம் மனிதர்கள் இயேசுவிடம்:
- யோவா 6:30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?
- யோவா 6:31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.
சோதனைக்காரன்:
- மத் 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
இத்தகைய இன்னொரு வசனம்:
- மத் 27:40 தேவாலயத்தை இடித்து, 3 நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
மத் 4:3ல் சோதனைக்காரன் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை peirazō (ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G3985). இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனம்:
- யாகோ 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (G3985).
பட்டினியிருக்கிறவனுக்கு இச்சை சாப்பாட்டின் மேல் இருக்கும், அவனை சோதிக்க வேறே யாரும் தேவையில்லை.
இப்பகுதியின் முடிவுரை:
- உணவின் விஷயத்தில் ஒருவரை சோதிக்க மனிதர்கள் போதும், சாத்தான் தேவையில்லை.
- மனிதர்களுக்கு சர்வவல்லமையுள்ள தேவனையே சோதிக்ககூடும் என்றால், அவருடைய குமரனை சோதிப்பது மிகவும் எளிது.
- உணவுபொருட்களின் விஷயத்தில் இயேசுவுக்கு பலமுறை சோதனைகள் ஏற்பட்டிருக்கலாம், அப்பொழுதெல்லாம் சாத்தான் அவர் முன் வந்து நின்றிருக்க வாய்ப்பில்லை.
தொடரும்...
டோம்சான் கட்டக்கல்
