நண்பர்களே,
[தமிழ் என் தாய்மொழி அல்லை, என் பதிவுகளில் எதாவது இலக்கணப்பிழை அல்லது எழுத்துப்பிழை கண்டுவந்தால் பரிவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள்.]
இந்த பதிவை வாசிக்கும்முன் "சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதினாலே கொடிய பாவியின் ஆவியை இரட்சிக்கமுடியுமா?" என்கிற பதிவை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் மத்தியில் சகோதரர்களுக்குள் எதோ ஒரு பிரச்சினை உண்டானால் என்ன பண்ணவேண்டும் என்று இயேசு சொன்னார் என்பதை முதலாவதாக பார்ப்போம். மத்தேயு 18:15-20 கவனமாக வாசியுங்கள். அங்கே கூறப்பட்டுள்ள விஷயம் இரண்டு சகோதரர்கள் மத்தியில் உண்டாகும் பிரச்சினைகள். ஒரு பிரச்சினை உண்டானால் என்ன பண்ணவேண்டும் என்பதைப்பற்றி இயேசு:
[தமிழ் என் தாய்மொழி அல்லை, என் பதிவுகளில் எதாவது இலக்கணப்பிழை அல்லது எழுத்துப்பிழை கண்டுவந்தால் பரிவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள்.]
இந்த பதிவை வாசிக்கும்முன் "சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதினாலே கொடிய பாவியின் ஆவியை இரட்சிக்கமுடியுமா?" என்கிற பதிவை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.
சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது என்பதின் விளக்கம் என்ன?
சாத்தனுக்கு ஒப்புக்கொடுக்கிரதற்கேற்ற மந்திரங்களோ, ஜெபங்களோ இல்லை என்பதை பார்த்தோம். அப்படியானால், ஒரு கொடிய பாவியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது எப்படி?உங்கள் மத்தியில் சகோதரர்களுக்குள் எதோ ஒரு பிரச்சினை உண்டானால் என்ன பண்ணவேண்டும் என்று இயேசு சொன்னார் என்பதை முதலாவதாக பார்ப்போம். மத்தேயு 18:15-20 கவனமாக வாசியுங்கள். அங்கே கூறப்பட்டுள்ள விஷயம் இரண்டு சகோதரர்கள் மத்தியில் உண்டாகும் பிரச்சினைகள். ஒரு பிரச்சினை உண்டானால் என்ன பண்ணவேண்டும் என்பதைப்பற்றி இயேசு:
- அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். (மத் 18:15)
- அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத் 18:16)
- அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் (heathen man - KJV, புறஜாதியான்) ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக. (மத்18:17)
சபைக்கு செவிகொடதவன் புறஜாதியான் அல்லது ஆயக்காரன் போல கணிக்கப்படவேண்டும் என்றால் அவனை சபையிலிருந்தும் வெளியேற்றவேண்டும் என்று விளக்கம். அப்பொழுதான் அவன் உனக்குபுறஜாதியான் அல்லது ஆயக்காரன் போல இருப்பான். ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறது முடியுமளவுக்கு தவிர்க்கவேண்டும். ஆதலாலேயே முதலாவதாக அவனிடம் நேரடியாக பேசவேண்டும் என்று இயேசு கூறினார். அவனிடம் நேரடியாக பேசும்போது அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய் என்பதின் விளக்கம் அவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிற சூழ்நிலையைத் தவிர்க்கலாம் என்பதே.
ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறதைப் பற்றி கூறின பிறகு இயேசு இப்படி சொன்னார்:
- பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத் 18:18)
அதாவது, சபையின் தீர்மானம் மாற்றமில்லாத, கடைசி தீர்மானமாக விளங்கும்.
- மத் 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
- மத் 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
இந்த சூழமைவு ஜெபம் பண்ணுகிறதைப் பற்றி அல்லை, இங்கே விபரிக்கப்படுகிற விஷயம் ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறதைப் பற்றியே. சபையில் உள்ளவர்கள் ஒருமனப்பட்டு கைக்கொள்ளும் தீர்மான்கள் யாவும் தேவனால் ஒப்புக்கொள்ளப்படும், ஏனெனில், இப்படிப்பட்ட முடிவெடுக்க சபையாக கூடிவரும்போது அந்த கூட்டத்தின் நடுவில் ஆவிக்குரிய நிலைமையில் கிறிஸ்து இருப்பார். (கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார், நீங்கள் அவருடைய நாமத்தில் கூடிவரும்போது கிறிஸ்து உங்களோடே இருப்பார், ஏனெனில் நீங்கள் ஒரே ஆவியை உடையவர்கள்).
மத் 18:15-20ன் முக்கிய கருத்துக்கள் எவைகள் என்றால்:
மத்தேயு 18:15-20ல் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் 1 கோரி 5ல் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது பெரும்பாலும் கிறித்தவர்களுக்கும் தெரியாது. மத்தேயு 18 சபையில் பிரச்சினை உண்டாக்குகிறவனைப் பற்றி கூறும்போது, 1 கோரி 5 கொடும்பாவியை எப்படி கையாளவேண்டும் என்று கூறுகிறது.
இந்த வசனங்களை ஒப்பிட்டு பாருங்கள்:
ஆதலால், பவுல் செய்கிற தீர்ப்பு என்னவென்றால்:
மத் 18:15-20ன் முக்கிய கருத்துக்கள் எவைகள் என்றால்:
- சபைக்குள் பிரச்சினைக்கு காரணமான ஒருவனை வெளியேற்றுகிறது.
- அப்படிப்பட்ட தீர்மானம் கைக்கொள்ளும்போது இயேசு ஆவிக்குரிய நிலைமையில் அங்கே இருப்பார் என்பது.
- சபையின் தீர்மானம் மாற்றமில்லாததும், தேவனால் ஒப்புக்கொள்ள தக்கதுமாக இருக்கிறது.
1 கோரி 5 கொடும்பாவியான ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறதைப் பற்றியே!
இந்த வசனங்களை ஒப்பிட்டு பாருங்கள்:
- மத் 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
- 1கோரி 5:4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (நாமத்தில் - In the name of our Lord Jesus Christ - KJV) அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
1 கொரி 5ன் சூழமைவு:
கொரிந்த சபையில் ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருந்தான்.- 1கொரி 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் (புரஜாதியாருக்குள்ளும் - among the Gentiles) சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
யூதர்கள் பொதுவாக முறைகேடான பாலீடுபாடு (incestuous relationship) கொள்வதில்லை, ஏனெனில் நியாயப்பிரமாணம் அப்படிப்பட்ட ஈடுபாடுகளை மறுக்கிறது (லேவி 18:8). பவுல் கூறுகிறது என்னவென்றால், புரஜாதியாருக்கும் கூட அப்படிப்பட்ட ஈடுபாடுகள் கேவலமாக இருக்கிறது என்பதே.
- 1கொரி 5:2 இப்படிப்பட்ட காரியம் செய்தவனை நீங்கள் உங்களை விட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
பவுல் கூறுகிறது என்னவென்றால் இப்படிப்பட்ட முறைகேடான பாலீடுபாடு கொண்டவனை சொரிந்த சபையாளர் அவர்களை விட்டு நீக்கவேண்டியிருந்தது அல்லது வெளியேற்றவேண்டியிருந்தது, அனால் அவர்கள் அதை செய்யவில்லை.
ஆதலால், பவுல் செய்கிற தீர்ப்பு என்னவென்றால்:
- 1கொரி 5:3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறது போல,
- 1கொரி 5:4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
- 1கொரி 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புச்செய்கிறேன்.
கொரிந்த சபையாளர்கள் பண்ணாமலிருந்ததை பவுல் அவர்களுக்கு கட்டளையிட்டதைத் தவிர, நீங்கள் இந்த சிறு தண்டனை அவனுக்கு அளிக்கவில்லை, ஆதலால் நானே அவனுக்கு பெரிய தண்டனையை கொடுப்பேன் என்று பவுல் எண்ணியிருப்பாரா? வாய்பில்லை! அவர்கள் பண்ணாமலிருந்ததை (சபையிலிருந்தும் விட்டுநீக்குவது) பண்ணவைப்பார், அவ்வளவுதான்.
அதாவது, சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பது என்பதின் விளக்கம் சபையிலிருந்தும் வெளியேற்றுவது. (1கொரி 5:2, 1கொரி 5:5).
அப்படியானால், சபையிலிருந்தும் வெளியேற்றுவதால் கொடும்பாவியின் மாம்சத்த்துக்கு அழிவுண்டாகுமா?
1 கொரிந்தியர் என்கிற நிருபத்தை பவுல் எழுதினது முதல் நூற்றாண்டில் பிழைத்திருந்த கொரிந்த சபையாளர்களுக்கே அல்லாமல், 21ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ பிழைத்திருப்பவ்ர்களுக்கு அல்லை. பழைய காலத்தில் முறைகேடான பாலீடுபாடு கொள்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுவந்தது. பெரும்பாலும், அப்படிப்பட்டவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். நாம் பிழைத்திருக்கும் 21ம் நூற்றாண்டில் அப்படிப்பட்ட தண்டனைக்கு வாய்பு குறைவுதான். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த தண்டனை சிறைத்தண்டனைதான்.
கொரிந்த சபையில் இருந்த கொடும்பாவி, சபையலர்களின் பாதுகாப்பிலும், ஆதரவிலும் இருந்தான். அவன் வெளியேற்றப்படும்பொது அவன் அவனுடைய இனத்தார் இடத்துக்கு போவான். அவர்கள் அவனுக்கு தண்டனை அளிப்பார். அப்படி அவனுடைய மாம்சத்த்துக்கு அழிவுண்டாகும்.
இந்த 21ம் நூட்ட்றாண்டில், உங்கள் சபையிலிருந்தும் ஒருவனை வெளியேற்றினால் அவனுக்கு நாட்டுச் சட்டத்தின்படி தண்டனை கிடைக்கும். அவன் சாகும்போது அவனுடைய மாம்சத்த்துக்கு அழிவுண்டாகும்.
அப்படியானால், கொடும்பாவிக்கும் நமக்கும் மாறுபாடு என்ன?
இந்த பதிவுக்கு முன் தேவனுடைய இராஜ்யம் என்கிற தொடர் வெளியீடை வாசித்திருந்தால் நீங்களே தேவனுடைய இராஜ்யம் என்றும், தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது என்றும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். உங்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை:
- ரோம 8:1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
உங்களுக்கு சாவில்லை:
- யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
- எபே 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
அனால், கொடிய பாவிகளின் நிலைமை அப்படியல்லை, ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குண்டாகும் ஆக்கினைத்தீர்ப்பு உடம்பின் சாவு (ரோம 5:16, 18; 8:1 போன்ற வசனங்களை ஒப்பிட்டு பார்க்கவும்), ஆனால், அவர்களுடைய ஆவி கர்த்தருடைய நாளில் மீட்கப்படும்.
- அப்படியானால், நரகம் இல்லையா? இரண்டாம் மரணம் இல்லையா? போன்ற கேள்விகள் எழும்பும். உண்மையான நரகம் என்பதைப்பற்றி, கர்த்தர் வாய்ப்பு கொடுத்தால் அப்புறம் எழுதுவேன்.
- ஆவிக்கு சாவு இருக்கிறது என்று கூறுகிற வசனங்கள் எதுவும் இல்லை. (தமிழ் வேதாகமத்தில் ஆவி, ஆத்துமா என்று மாறிமாறி மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் அல்லை, எபிரேய மொழியில் rûach -H7307 & H7308 மற்றும் கிரேக்க மொழியில் pneuma -G4151 என்கிற வார்த்தைகள்).
தற்பொழுது உங்கள் சபையில் கொடும்பாவிகள் இருந்தால் என்ன பண்ணவேண்டும்?
பிரச்சினை பண்ணுகிற ஒருவன் உங்கள் மத்தியில் இருந்தால் அவனிடம் நேரடியாக பேசவேண்டும். அவன் சபைக்கு செவிகொடாமல் போனால் அவனை சபையிலிருந்தும் வெளியேற்றவேண்டும். சபையாக கூடிவரும்போது கொடும்பாவியை சபையிலிருந்தும் வெளியேற்றவேண்டும். அவனுக்கு தகுந்த தண்டனையை நாட்டின் சட்டம் வழங்கும். நீங்கள் ஜெபம் பண்ணுவதாலோ, சபையார் அனைவரும் அவனுடைய தலையின்மேல் கைவைத்து கிறிஸ்த்துவின் நாமத்தில் உன்னை சாத்தனுக்கு ஒப்பளிக்கிறோம் என்று கூறுவதாலோ, எதுவும் நடக்காது.
தேவனை தூஷிக்கிறவர்களுக்கும் (1 திமோ 1:19) சபையிலிருந்தும் வெளியேற்றப்படுவதே தகுந்த தண்டனை.
தொடரும்...
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,
டோம்சான் கட்டக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக