வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

உண்மையாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டாரா? (பகுதி #2)

நண்பர்களே,

இந்த பதிவை வாசிக்கும்முன் இதின் முதல் பகுதியை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

சாத்தானை பற்றிய முன்னெண்ணங்கள்.


சாத்தான் அல்லது பிசாசு என்று கேட்டவுடன் பெரும்பாலானோருக்கு கொம்பும், வாலும் உடைய திரிசூலம் பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு உருவம்தான் மனதில் வருகிறது.

இயேசு தனக்கு ஏற்படவேண்டிய பாடுகளைப் பற்றி சீடர்களிடம் கூறினபோது பேதுரு என்ன சொன்னார் என்பதையும் அதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதையும் கவனியுங்கள்:
  • மத் 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
  • மத் 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
இங்கே இயேசு பேதுருவை சாத்தானே என்று கூப்பிட்டபோது பேதுருவுக்கு கொம்பு முளைத்ததா? வால் வளர்ந்ததா? அப்படியெல்லாம் நடக்கவில்லையே? இயேசு இங்கே கூறினது பேதுரு சாத்தான் ஆகிவிட்டார் என்று அர்த்தம் அல்ல, மாறாக பேதுருவின் எண்ணங்கள் தேவனுக்கு ஏற்றவைகளாக இராமல், மனிதனுக்கு ஏற்றவைகளாக இருக்கிறது என்பதே.

அதே போல, சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான் என்று கூறப்பட்டதின் விளக்கம் கொம்பும் வாலும் உடைய ஒரு நபர் யூதாசின் உடம்பிலுள்ள ஏதோவொரு பிளவு வழியாக உட்புகுந்தார் என்பதா?
  • லுக் 22:3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
இல்லை, அவனுக்கு தேவனுக்கு ஏற்ற எண்ணங்கள் இல்லாமல், மனிதனுக்கடுத்த எண்ணங்கள் உண்டாயிற்று என்பதே அதின் விளக்கம்.

வேறு வகையில் கூறினால்: சாத்தான் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டதினால் மட்டும் ஒருவர் சாத்தான் அல்லது பிசாசாக மாறப்போவது இல்லை.
தொடரும்...

டோம்சான் கட்டக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக