வெள்ளி, 30 ஜனவரி, 2015

சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதினாலே கொடிய பாவியின் ஆவியை இரட்சிக்கமுடியுமா?

நண்பர்களே,

இந்த பதிவில் நான் இரண்டு வசனங்களை எடுத்துக்காட்டுகிறேன். படியுங்கள், கவனமாக படியுங்கள்.

(தாங்கள் ஒருபோதும் கவனிக்காமற்போன வசனங்களை எடுத்துரைக்கும்போது ஒருசிலர்: “இந்த ஆள் வசனத்தை புரட்டுகிறார்” என்றும் “இந்த ஆள் கிறித்தவர்களை குழப்புகிறார்” என்றும் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.)

சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதினாலே கொடிய பாவியின் ஆவியை இரட்சிக்கமுடியுமா?


1 கொரி 5ம் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறேன். இந்த அதிகாரத்தில் மாற்றாந்தாய்யை (தகப்பனுடைய மனைவி - step mother) வைத்துக்கொண்டிருக்கிற ஒருவரைப்பற்றி பவுல் கொரிந்த சபைக்கு எழுதுகிறார்.
1கொரி 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் (புறஜாதியார்) சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.

இந்த விபசாரியை கொரிந்த சபைசிலுள்ளவர்கள் அவர்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறதைப்பற்றியே இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. (வசனம் 2).

இந்த சூழ்நிலைக்கு பவுல் கூறுகிற தீர்ப்பு என்னவென்றால்:

1கொரி 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புச்செய்கிறேன்.

கவனமாக வாசியுங்கள்: இந்த கொடிய பாவியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறதின் நோக்கம் என்னவென்றால்:

  • அவனுடைய மாம்சத்தின் அழிவு.
  • அவனுடைய ஆவி கர்த்தருடைய நாளில் இரட்சிக்கப்படுவது.

பெருபாலும் கிறித்தவப் போதகர்கள் இந்த வசனத்துக்கு கொடுக்கிற விளக்கம் என்னவென்றால்: ஒருவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தால் அவனுடைய உடம்பில் நோய்கள் ஏற்ப்படும் என்றும் அந்த நோய்களாலே வருத்தப்பட்டு அவன் கர்த்தரிடம் திரும்புவதால் கர்த்தருடைய நாளில் இரட்சிக்கப்படுவான் என்றுமே.

ஒருவனுக்கு உடம்பில் நோய்கள் ஏற்பட்டால் அவன் கர்த்தரிடம் திரும்புவான் என்கிற எண்ணத்துக்கு வேதத்தில் அத்தாட்சி இருக்கிறதா? முற்றும் மாறாக, நோய்களினாலே தண்டிக்கப்படுகிற பாவிகள் தேவனுடைய நாமத்தை இன்னும் அதிகமாக தூஷிப்பார் என்று வேதம் கூறுகிறது.
வெளி 16:9 அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.

பத்து முறை நோய்களால் வாதிக்கப்பட்டும் பார்வோனும் அவனுடைய ஆட்களும் மனந்திரும்பாமல் அழிந்தார்கள் என்பதை யாத்திராகமத்தில் பார்க்கிறோம்.

நோய்களினால் தண்டிக்கப்படுகிறவர்கள் மனம்திரும்பி இரட்சிக்கப்படும் என்கிற எண்ணம் உண்மையாயிருந்தால் தேவனுடைய ஒரே பேறான குமாரன் பாவிகளை மீட்கும்படியாக மனிதனாய் பிறந்து, சிலுவையில் பாடுபட்டு மரிக்க அவசியமே இல்லை, பாவிகள் அனைவரையும் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுடைய ஆவி இரட்சிக்கப்படுமல்லவா? எவ்வளவு சிம்பிள்?!

உங்கள் சபையில் விபசாரக்காரனாகிய ஒரு கொடிய பாவி இருந்தால் அவனை சாத்தானுக்கு எப்படி ஒப்புக்கொடுப்பீர்கள்?


சபையின் மூப்பர்களும், போதகர்களும் அந்த பாவியின் தலையின் மேல் கைபோட்டு: “உன்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்” என்று சொன்னால் உடனே சாத்தான் அவனை ஏற்றுக்கொள்வாரா? அல்லாவிட்டால், அப்படிப்பட்டவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கும்படிக்கு எதாவது மந்திரம் உங்களிடம் இருக்கிறதா?

ஒரு கொடிய பாவியை உங்கள் சபை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தும் அவனுக்கு நோய்கள் ஏற்ப்படாமற் போனால் அதின் விளக்கம் என்ன?

ஒருவேளை உங்கள் சபையாருக்கு கொடிய பாவிகளை சாத்தானுக்கு நேரடியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமானால் சாத்தானுடைய முகவரி (address) வேதத்திலிருந்தும்:
வெளி 2:12: பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
வெளி 2:13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்,...

அதாவது, சாத்தானுடைய சிங்காசனம் பெர்கமுவில் இருக்கிறது. பெர்கமு (தற்பொழுது அதின் பெயர்: Bergama) துருக்கி நாட்டில் இஸ்மிர் (Izmir) மாநிலத்தில் இருக்கிறது. உங்கள் சபையிலிருக்கும் பாவிகளை அங்கே போய் சாத்தானிடம் ஒப்புக்கொடுங்கள்!

தேவதூஷகர்கள் தேவதூஷணம் பண்ணாதபடிக்கு கற்றுக்கொள்ளும்படிக்கு சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது!


பொதுவாக, சாத்தான் என்பவர் தேவதூஷகன், தூஷிக்கிறவன் என்று எண்ணப்படுகிறது. ஆனால், தேவதூஷணம் பண்ணுகிறவர்களை அப்படி பண்ணாதபடிக்கு கற்றுக்கொள்ளும்படிக்கு சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்:

1திமோ 1:19 இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 
1திமோ 1:20 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

(that they may learn not to blaspheme - KJV -

இம்னேயும், அலெக்சாண்டரும் இத்தகு 2 உதாரணங்கள். தேவனுக்கு எதிராக பேசக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன் - WBTC)

உங்கள் சபையில் தேவதூஷணம் பண்ணுகிறவர்களிருந்தால் அவர்களை (முன்சொன்ன முகவரியில்) சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள், அவர்கள் தேவதூஷணம் பண்ணாதபடிக்கு சாத்தான் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்!

கிறித்தவர்களின் பொதுவான எண்ணத்தின்படி சாத்தான் மனிதர்களை பாவம் பண்ணுவதற்கு ஏவுகிறவன்; மனிதர்களை பாவத்துக்கு இழுத்துக் கொண்டுபோகிறவன், மனிதனுடைய நாசத்திற்கு காரணமானவன். ஆனால், இந்த இரண்டு வசனங்களில் சாத்தான்:


  • கொடிய பாவியின் ஆவியை கர்த்தருடைய நாளில் இரட்சிக்க உதவுகிறவன்.
  • தேவதூஷணம் பண்ணுகிறவரை சீர்திருத்த உதவுகிறவன்!


மெய்யாகவே, சகோதரா, சகோதரீ, சாத்தானயப்பற்றிய புரிந்துகொள்ளுதலில் எங்கேயோ பெரிய தவறு ஏற்பட்டுள்ளது.

சிந்தியுங்கள்!

டோம்ஸான் கட்டய்க்கல்

புதன், 28 ஜனவரி, 2015

தேவனுடைய இராஜ்யம் எங்கே?

நண்பர்களே,

[Tamil is not my native tongue, if you find any spelling or grammar mistake, please let me know.]

தேவனுடைய இராஜ்யம் எங்கே? இந்த கேள்விக்கு வேறுவேறு கிறித்தவ வகுப்பினர்களுக்கு வேறுவேறு விடைகள் இருக்கும். ஆனால், இயேசு அளித்த விடையை விட அவர்களுடைய விடைகளுக்கு விலை உண்டா? இயேசு சொன்ன விடையை கவனிப்போம்:
லூக் 17:20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
லூக் 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
இயேசுவின் வார்த்தைகளின்படி தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது. இங்கே 'உங்களுக்குள்' என்பதில் 'உள்' என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G1787 (ἐντός, entos). இந்த வார்த்தை இன்னொரு தடவை மற்றும் தான் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது:
மத் 23:26 குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
அதாவது, லூக் 17:21 வெளிப்படையாக தேவனுடைய இராஜ்யம் உங்களுக்கு உள்ளே இருக்கிறது என்று கூறுகிறது. ஒருசிலர் 'உங்களுக்குள்' என்பதற்கு 'உங்கள் மத்தியில்' அல்லது 'உங்கள் இடையில்' என்று விளக்குகிறார்கள். அப்படியிருந்தால் மத் 23:26ல் போஜனபானபாத்திரங்களின் 'மத்தியில்' அல்லது 'இடையில்' சுத்தமாக்குகிறதைப் பற்றியா கூறப்பட்டுள்ளது?

'தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது', என்றார் இயேசு.


இங்கே பிரத்தியட்சமாய் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (G3907 παρατήρησις paratērēsis) வேறு எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. அதின் மூல வார்த்தையாகிய G3906 (παρατηρέω, paratēreō) மார்கு 3:2; லூக் 6:7; 14:1-2; 20:20; அப் 9:24; கலா 4:10 போன்ற வசனங்களில் 'நோக்கமாயிரு', 'பார்த்து', 'காத்துக்கொண்டிரு' என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை பார்க்கிறோம். அதாவது 'பிரத்தியட்சமாய்' என்பதற்கு 'காணக்கூடிய' அல்லது 'கண்ணுக்கெட்டுகிற' என்று விளக்கம்.

தேவனுடைய இராஜ்யம் 'பிரத்தியட்சமாய் வராது' என்றால் அது கண்ணுக்கு எட்டுகிறபடிக்கு வராது. அது இடமாயிருந்தால் அது பார்க்கக்கூடிய நிலைமையில் இருக்கவேண்டும்.

"பிரத்தியட்சமாய் வராது" என்று கூறின பிறகு "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" என்று சொன்னதின் விளக்கம் அது கண்ணுக்கெட்டாத, ஆவிக்குரிய ஒரு இராஜ்யம் என்பதல்லவா?

தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மீண்டும் இயேசு பிலாத்திடம்:

யோவா 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
யோவா 18:37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜா தான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.


ஆம், இயேசு ராஜா தான், ஆனால் அவருடைய இராஜ்யம் இந்த உலகத்திற்கு உரியதல்ல. நீங்கள் பரலோக ஜபம் பண்ணிக்கொண்டே இருந்தாலும்கூட அவருடைய இராஜ்யம் பூமியில் ஒரு இராஜ்யமாக நிலைநாட்டப்படுவதே இல்லை.

தேவனுடைய இராஜ்யம் கட்டம் #1, கட்டம் #2 ...?!


தேவனுடைய இராஜ்யம் மற்றும் பரலோக இராஜ்யம் என்கிற சொற்றொடர்களுக்கு மாறுபாடு எதுவும் இல்லை என்பதை பார்த்தோம்.


ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்கு இரண்டு கட்டம் (phase) இருக்கிறது என்பதாக போதிக்கிறதுண்டு, எங்கள் பெங்களூருவில் ஒருசில காலனிகளுக்கு ஜயநகர் ஒன்றாம் கட்டம், ஜயநகர் இரண்டாம் கட்டம் போன்ற பெயர்கள் இருக்கின்றன. அதே போல தேவனுடைய இராஜ்யம் ஒன்றாம் கட்டம் பூமியிலும் பலலோக இராஜ்யம் என்னும் இரண்டாம் கட்டம் பரலோகத்திலும் இருக்கும் என்று போதிக்கிறார்கள்.. அனால் இது வேதத்தை மீறுகிற போதனை. ஏனெனில் இயேசு சொன்னதை கவனியுங்கள்:

...தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்...(மத் 12:25)
தேவனுடைய இராஜ்யம் ஒன்றாம் கட்டம், தேவனுடைய இராஜ்யம் இரண்டாம் கட்டம் போன்றவைகளுக்கு வாய்பே கிடையாது.


தேவனுடைய இராஜ்யம் ஏன் பரலோகத்தில் இருக்ககூடாது?


மத் 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
மத் 13:48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
நல்லவைகளுடன் ஆகாதவைகளையும் பரலோகத்துக்கு சேர்த்த பிறகு ஆகாதவைகளை எறிந்துபோடுகிறதாகில், ஆகாதவர்களும் பரலோகத்துக்கு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும், அல்லவா? அப்படி ஆகாதவைகள் தேவனுடைய முன்னிலைக்கு எடுக்கப்படும் என்று நம்புகிறீர்களா? அதாவது ஆகாதவைகளுக்கு ஓசியில் ஒரு பரலோக பயணம்!


நண்பர்களே, இயேசு கிறிஸ்துவை நம்புகிற நீங்களே தேவனுடைய இராஜ்யம்; தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது. ஆகிலும், ஆகாதவர்கள் நமது மத்தியில் இருக்கிறார்கள். அறுவடையின் காலத்தில் ஆகாதவைகள் எறிந்துபோடப்படுவார்களே அல்லாமல் அவைகள் பரலோகத்துக்கு எடுக்கப்படுவதில்லை. தொடர்ந்துவரும் வசனங்களை வாசியுங்கள்:
மத் 13:49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
மத் 13:50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

பரலோகத்தில் அக்கினிச்சூளை இருக்கிறதற்கு வாய்ப்பில்லை.


யூதர்களிடமிருந்தும் நீக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யம் தான் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது, இயேசு ஆசாரியர்கள் இடம்:

மத் 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து (யூதர்கள்)  நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
தேவனுடைய இராஜ்யம் பரலோகத்தில் இருக்கவேண்டும் என்றால், உங்களுக்கு அளிக்கப்படும் முன்பு அதை வைத்திருந்த யூதர்கள் பரலோகத்தில் இருந்தார்களா?

தேவனுடைய இராஜ்யத்தில் 'பிரவேசிப்பது'


தேவனுடைய இராஜ்யம் ஒரு இடம் என்பதற்கு அத்தாட்சியாக ஏராளமான பேர்கள் 'தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கிறதைப்' பற்றி கூறுகிற வசனங்கள் சூட்டிக்காட்டுகிறார்கள். இந்த வாதம் சரியாக இருந்தால் 'இளைப்பாறுதல்' என்பதும் ஒரு இடமாக இருக்கவேண்டும்:
எபி 3:11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லை என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

எபி 3:18 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?

(எபி 3:11, 18, 19; 4:3, 5, 6, 11 காணவும்)

தேவனுடைய இராஜ்யத்தை 'சுதந்தரித்துக்கொள்வது'


நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்கும் முன் அது யாரிடம் இருந்தது என்று தெரியுமா? இயேசு பிரதான ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் சொன்னதை கவனியுங்கள்:
மத் 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
நீங்கள் சுதந்தரித்துக்கொண்ட தேவனுடைய இராஜ்யம் யூதர்களிடமிருந்தும் எடுத்து, உங்களுக்கு கொடுக்கப்பட்டது. உங்களுக்கு கொடுக்கப்படும் முன் யூதர்களுக்கு இவ்வுலகத்துக்குரிய இராஜ்யம் இருந்ததா? இல்லையே, அவர்கள் ரோமா இராஜ்யத்துக்கு கீழ்ப்பட்டிருந்தார்கள். இதின் விளக்கம் என்னவென்றால் நீங்கள் சுதந்தரித்துக்கொள்கிற இராஜ்யம் இவ்வுலகத்துக்குரியது கிடையாது.


சுதந்தரித்துக்கொள்வது (inherit என்று ஆங்கிலம்) என்பது எப்பொழுதும் இடத்தை அல்லது ஒரு பொருளை ஆகவேண்டும் என்று தேவையில்லை, உதாரணமாக:
மத் 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

எபி 12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.

1பெத் 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
பிரவேசிப்பதற்கும், சுதந்தரித்துகொள்வதற்கும் தேவனுடைய இராஜ்யம் ஒரு இடம் அல்லது பொருள் கிடையாது. எப்படி இளைப்பாறுதல் ஐம்புலன்களையும் கடந்த ஒன்றாக இருக்கிறதோ அப்படியே தேவனுடைய இராஜ்யமும் இருக்கிறது. அதினாலே தான் இயேசு இப்படி சொன்னார்:
லூக் 17:20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
லூக் 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

பாவிகள் தேவனுடைய இராஜ்யத்த்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்பதற்கு மிகவும் எளிதான விளக்கம் என்னவென்றால்: அவர்களுக்கு நிம்மதி அல்லது இளைப்பு இராது.

முடிவுரை:

தேவனுடைய இராஜ்யம் ஒரு இடம் கிடையாது, அது பூமிக்குரிய ஒரு இராஜ்யமாக நிலைநாட்டப்படமாட்டது. அது கண்ணுக்கெட்டுகிறபடிக்கு வரமாட்டது. தேவனுடைய இராஜ்யத்துக்கு இஸ்ரவேலில் அல்லது எருசலேமில் அல்லது அமெரிக்காவில் தொடக்கமாயிடும் போன்ற போதனைகளுக்கு வேதத்தில் ஆதாரமில்லை. தேவனுடைய இராஜ்யம் பலன் கொடாத யூதர்களில் நின்றும் எடுத்து, பலன் கொடுக்கும் இன்னொரு ஜாதிக்கு கொடுக்கப்படும் என்பதே அல்லாமல் அது திரும்பவும் யூதர்களுக்கு கொடுக்கப்படும் என்று வேதம் கூருகிறதில்லை.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
டோம்சான் கட்டக்கல்


செவ்வாய், 27 ஜனவரி, 2015

தேவனுடைய இராஜ்யம், பரலோக இராஜ்யம், நித்திய ஜீவன்

நண்பர்களே,

[Tamil is not my native tongue, if you find any spelling or grammar mistake, please let me know.]

ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் தேவனுடைய இராஜ்யம் வேறு பரலோக இராஜ்யம் வேறு என்று போதிக்கிறார்கள். இப்படிப்பட்ட மாறுபாடு வேதம் போதிக்கிறதுண்டா? இப்படிப்பட்ட போதனைக்கு வேதத்தில் ஆதாரம் உண்டா என்பதை பார்ப்போம்.

'பரலோக இராஜ்யம்' (Kingdom of heaven) என்கிற சொற்றொடர் மத்தேயுவின் சுவிசேஷத்தில் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில வேதநிபுணர்கள் மத்தேயுவின் சுவிசேஷம் யூதர்களுக்காக எழுதப்பட்டது என்றும், யூதர்கள் தேவனுடைய பெயர் உச்சரிக்கமாட்டார்கள் என்பதினால் தேவன் உட்கார்ந்திருக்கும் இடமாகிய 'பரலோகம்' என்று எழுதப்பட்டுள்ளது என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்த வாதம் பொய் மற்றும் தவறு. யூதர்களுக்கு தேவன் என்கிற வாக்கோடு இவ்வளவு ஒவ்வாமை (அலர்ஜி) இருந்தால் ஏன் தேவன் என்கிற வார்த்தை 53 தடவை மத்தேயுவின் சுவிசேஷத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? அதுவும் அல்லாமல் 'தேவனுடைய இராஜ்யம்' என்று 5 தடவை (மத் 6:33; 12:28; 19:24; 21:31; 21:43) மத்தேயுவின் சுவிசேஷத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

தேவனுடைய இராஜ்யமும் பரலோக இராஜ்யமும் ஒன்றுதான் என்று உணர்ந்துகொள்ள மிகவும் எளிதான முறை என்னவென்றால்: மத்தேயு, லூக்கா என்பவர்களுடைய சுவிசேஷங்களில் உள்ள இராஜ்யத்தைப் பற்றிய உவமைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது.

உவமைமத்தேயுலூக்கா
கடுகு விதையின் உவமைமத் 13:31 ...பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.லூக் 18-9 ...தேவனுடைய ராஜ்யம் ...
19) அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது;
புளித்தமாவின் உவமைமத் 13:33 ... பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது;லூக் 13:20 ... தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21) அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது...

தேவனுடைய இராஜ்யமும் பரலோக இராஜ்யமும் ஒன்றுதான் என்பதற்கு அத்தாட்சியளிக்கும் ஒரு பத்தியை மத்தேயுவின் சுவிஷேத்திலிருந்தும் வாசிப்போம். ஐசுவரியவானாகிய வாலிபன் ஒருவன் இயேசுவிடம் கேட்ட கேள்வியும் அதற்க்கு இயேசு அளித்த விடையும் நம்மெல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆதலால் நமக்கு தேவையான வசனங்களை மற்றும் பார்ப்போம்.

கேள்வி நித்திய ஜீவனைப்பற்றி:
மத் 19:16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
அந்த வாலிபன் போன பிறகு இயேசு சீடர்களிடம் சொன்ன விளக்கம்:
மத் 19:23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத் 19:24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கவனமாக வாசியுங்கள், மேலே எடுத்துரைக்கப்பட்டுள்ள இரண்டு வசனங்களும் ஐசுவரியவானைப் பற்றியே. 'முதலாவது ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது' என்று சொன்ன பிறகு இயேசு அதற்க்கான ஒரு உவமானத்தைக் கூறினார்: அந்த உவமானம் தான் ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவதைப்பற்றிய உவமானம். விளக்கத்தில் 'பரலோகராஜ்யம்' என்று கூறின இயேசு உவமானத்தில் தேவனுடைய ராஜ்யம் என்று சொன்னதை கவனியுங்கள்.

கேள்வி நித்திய ஜீவனைப் பற்றி, விளக்கம் பரலோகராஜ்யத்தைப் பற்றி, உவமானம் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி. இன்னொரு முறையாகச் சொன்னால், இவையெல்லாம் ஒன்றுதான். இவைகளுக்குள் மாறுபாடு எதுவும் இயேசு பார்க்கவில்லை. மாறுபாடு உண்டுபண்ணினது வேதநிபுணர்கள். (வேதநிபுணர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் )

நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்லையா பிரதர்?


நித்திய ஜீவன் பரலோகத்தில் மட்டுமே என்று கூறுகிற வசனம் எதுவும் இல்லையே! மாறாக வேதம் என்ன கூறுகிறது என்றால்:
யோவா 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
நீங்கள் மரித்து, பரலோகத்துக்கு போன பிறகு தானா தேவனையும் இயேசுவையும் அறிகிறது? உங்களுக்கு தற்பொழுது தேவனையும் இயேசுவையும் தெரியாதா? உங்களுக்கு தேவனையும் இயேசுவையும் அறிந்திருந்தால் உங்களுக்குள் நித்திய ஜீவன் இல்லையா?

இந்த வசனத்தை கவனமாக வாசியுங்கள்:
1யோவா 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகன், அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது. அப்படியானால், தன் சகோதரனைப் பகைக்காதவனுள் நித்தியஜீவன் நிலைத்திருக்கவேண்டும், அல்லவா? நாம் இறந்த பிறகு நடக்கவேண்டிய நிகழ்வுகளைப்பற்றி யோவான் கூறவில்லை, மாறாக, நாம் இந்த பூமியில் உயிரோடிருக்கும்பொது நடக்கவேண்டியவைகளைப் பற்றியே இங்கே கூறப்பட்டுள்ளது.

இன்னொரு வசனம்:
1யோவா 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு (you have eternal life) என்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டாகப்போகிறது என்றோ, உங்களுக்காக நித்தியஜீவன் வைத்துவைக்கப்பட்டுள்ளது என்றோ கூறாமல், உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு என்று கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள். உங்களுக்கு நித்தியஜீவன் இப்பொழுதே உண்டு.

இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவனும் இயேசுவும் தான் நித்தியஜீவன்.
1யோவா 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
1யோவா 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார்" என்பதே அல்லாமல் தரப்போகிறார் என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

அப்படியானால், நாம் இறந்த பிறகு என்னவாயிடும், பிரதர்?

யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா? என்றார்.
இந்த வார்த்தைகளை சொல்லும்போது நீங்கள் விகிவாசிக்கமாட்டார்கள் என்பதை நன்றாக தெரிந்துகொண்டுதான் இயேசு 'இதை விசுவாசிக்கிறாயா?' என்று கேட்டார். நீங்கள் இறந்துபோகிறதைப் பற்றி யோசிக்கிறீர்கள், ஆனால் இயேசு பேசினது இறந்துபோகாமல் இருப்பதைப் பற்றியே. (உடம்பின் சாவைப்பற்றி இயேசு கூறவில்லை.)

முடிவுரை:

இயேசுவை நம்புகிற நீங்கள்தான் தேவனுடைய இராஜ்யம், கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார். நித்தியஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மீந்திருக்கிறது என்ன? இந்த உடம்பு அழித்துப்போய் அவரிடம் சேரவேண்டும் என்பதே. விசுவாசத்துட்னும் தைரித்துட்னும் முன்செல்லுங்கள்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
டோம்ஸான் கட்டக்கல்

சனி, 24 ஜனவரி, 2015

தேவனுடைய இராஜ்யம் - எப்பொழுது?

நண்பர்களே,

தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றி வேதத்தில் முதல்முறையாக எழுதப்பட்டிருக்கிறது மத்தேயுவின் சுவிஷேசத்தில் அல்லை, தானியேலின் தீர்க்கதரிசனத்தில்.
தானி 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.

இந்த வசனத்தில் அந்த ராஜாக்களின் என்று கூறப்பட்டுள்ளது நான்காவது இராஜ்யத்தைப் பற்றியே - தானி 2:40-43. நேபுகாத்நேச்சாருக்கான கனவின் விளக்கத்தைச் சொன்ன தானியேல், நான்கு இராஜ்யங்களைப் பற்றி கூறுகிறார். இந்த 4 இராஜ்யங்களில்:

  • முதலாவது பாபேல் (பாபிலோன்) - பொன் - என்று தானியேல் கூறினார் (தானி 2:38).
  • பாபேலுக்கு அப்புறம் வந்த இராஜ்யம் - வெள்ளி - மேதோ-பெர்சிய.
  • மூன்றாம் இராஜ்யம் - வெண்கலம் - இது கிரேக்க இராஜ்யம் என்பது உறுதி, ஏனென்றால், வசனம் கூறுகிறது போல அப்பொழுதிருந்த மக்களுக்கு தெரிந்திருந்த உலகத்தை எல்லாம் அது ஆண்டுக்கொண்டது.
  • நான்காவது இராஜ்யம் - இரும்பு - ரோமா இராஜ்யம். இதுவும் ரோமா தான் என்பதும் உறுதி. ஏனெனில், புகழ்பெற்ற 'Pax Romana' (பாக்ஸ் ரோமானா - ரோமன் அமைதி) என்பது அடைந்ததே வேதம் கூறுகிறது போல மற்று இராஜ்யங்கள் மீது படையெடுத்தும் குடிமக்களை ஒடுக்கியுமே. (இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பை போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும். தானி 2:40)

நான்காம் இராஜ்யமாகிய ரோமா இராஜ்யத்தின் துவக்கம் கி. மு. 29ல். அதினுடைய முதல் அரசனாக எண்ணப்படுகிறது அகஸ்து ராயன். (ஜூலியஸ் இராயனுடைய காலத்திலிருந்து எண்ணினால் கி. மு. 49ல்). ரோமா இராஜ்யம் பிரிந்து கிழக்கும் மேற்கும் ரோமா இராஜ்யங்களாயிற்று. திரும்பவும் பிரிந்து, பிரிந்து கி. பி 1453ல் அந்த இராஜ்யம் இல்லாமல் போயிற்று.

(ரோமா இராஜ்யம் தற்பொழுதும் கூட இருக்கிறது, அது ரோமன் கத்தோலிக்க சப்பை வழியாக ஆட்சி பண்ணுகிறது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய இராஜ்யம் என்ன என்று தெரியாததினால் அவர்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றி தெரிவிக்கிறதை விட, அவர்களிடம் வாதாடுவது என் வேலை கிடையாது. ஷேர்ஷா சூரி அல்லது பாபர் இப்பொழுதும் கூட நமது பிரதமர் வழியாக அரசாளுகிறார் என்று சொல்வது போல தான் அவர்கள் எண்ணமும்.)

தானி 2:44ன் படி, தேவனுடைய இராஜ்யம் கி. மு 29க்கும் கி. பி 1453க்கும் இடையில் தொடங்க வேண்டியிருந்தது.

தேவனுடைய இராஜ்யம் வந்தாச்சு என்றார் இயேசு, வரவில்லை என்கிறார்கள் கிறித்தவர்கள்!


பெரும்பாலும் கிறித்தவர்கள் தேவனுடைய இராஜ்யம் வரவேண்டும் என்று ஆதுரத்துடன் பரலோக ஜெபம் பண்ணுகிறார்கள். ஒரு சிலர் தேவனுடைய இராஜ்யம் எருசலேமிலிருந்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு வேத நிபுணர் இயேசு இரண்டாம் வருகையில் அமெரிக்காவுக்கு வருவார் , தேவனுடைய இராஜ்யம் அங்கே தொடங்கிடும் என்றெண்ணி அமெரிக்காவில் ஒரு கட்டிடம் நிறைய மது குவித்து வைத்தான். இதைப்போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் இன்னும் இருக்கிறது.

எதிர்காலத்தில் எப்பொழுதோ தேவனுடைய இராஜ்யம் பரலோகத்திலிருந்தும் இறங்கி வரும் என்று எதிர்ப்பர்த்துகொண்டிருபவர்களுக்கு இயேசு அளிக்கும் பதில்:
மத் 12:28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

Mat 12:28 But if I cast out devils by the Spirit of God, then the kingdom of God is come unto you. (KJV)
Mat 12:28 But if it is by the Spirit of God that I cast out demons, then the kingdom of God has come upon you. (ESV)

என் தாய்மொழி தமிழ் அல்லை, ஆகிலும் "வந்திருக்கிறதே" என்பதற்கும் "வரப்போகிறது" என்பதற்கும் இருக்கும் மாறுபாடு புரிந்துகொள்ள எனக்கிருக்கும் மழலைப் பேச்சை போன்ற தமிழ் போதும்.

இருக்காத மல்லனிடம் மற்போரிடகூடுமா?


தேவனுடைய இராஜ்யம் எதிர்காலத்தில் எப்பொழுதோ வரவேண்டும் என்கிறார்கள் இயேசுவை பின்பற்றுகிறோம் என்று உரிமை பாராட்டுகிற கிறித்தவர்கள். ஆனால், முதல் நூற்றண்டிலேயே, இயேசுவின் காலத்திலேயே தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது என்றார் இயேசு.

மத் 11:12 யோவான் ஸ்நானன் காலம் முதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

என்னாப்பா, இயேசு இப்படியெல்லாம் சொன்னிட்டாரே? சபையின் போதனைக்கு விரோதமாக பேசினரே இயேசு?

"யோவான் ஸ்நானன் காலம் முதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது" - இதை இயேசு சொன்னது 21ம் நூற்றாண்டில் அல்லை! ஏறத்தாழ கி. பி. 30ல் சொன்ன வார்த்தைகள். இருக்காத பரலோக இராஜ்யத்தின் மேல் யாரால் பலவந்தம் பண்ணமுடியும்?


இது தற்செயலாக நடந்தேறினதா?

  • தானி 2:44ன் படி, தேவனுடைய இராஜ்யம் கி. மு 29க்கும் கி. பி 1453க்கும் இடையில் தொடங்க வேண்டியிருந்தது.
  • இயேசு "தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே" என்று கூறினது ஏறத்தாழ கி.பி. 30ல்.
கி. மு.  29க்கும் கி. பி 1453க்கும் இடையில் வருகிற கி.பி. 30ஐ விட தேவனுடைய இராஜ்யத்தின் துவக்கத்துக்கு வேதத்தின் படி ஒத்துவருகிற ஒரு தேதியை காண்பிக்க முடியுமா?

தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவு இருக்குமா?


நான்காவது இராஜ்யத்தின் நாட்களில் தேவனுடைய இராஜ்யத்துக்கு துவக்கம் ஆகவேண்டும் என்பதை தானி 2:44ல் பார்த்தோம். ஏறத்தாழ கி. பி. 30ல் தேவனுடைய இராஜ்யத்துக்கு துவக்கமாயிற்று என்றார் இயேசு. இன்னும் பார்க்கவேண்டிய விஷயம் தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவு இருக்குமா என்பதே.

திரும்பவும் தானி 2:44 வாசிப்போம்:
தானி 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
"என்றென்றைக்கும் நிற்கும்" என்பதற்கு எனக்கு தெரிஞ்ச தமிழ் மொழியில் கொஞ்சம் காலத்துக்கு அப்புறம் அழிக்கப்பட்டும் என்கிற விளக்கம் இல்லை.
லுக் 1:33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
இந்த வசனம் இரண்டாம் வருகையைப் பற்றி அல்லை, இது இயேசுவின் பிறப்புக்கு முன் காபிரியேல் தேவதூதன் மரியாளிடம் சொன்ன வார்த்தைகள்.

இயேசுவின் பிறப்பைப் பற்றியான இன்னொரு தீர்க்கதரிசனம்:
ஏசா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் (government) அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்.
ஏசா 9:7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் (government) பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
இது இயேசுவின் பிறப்பைப் பற்றியான இன்னொரு தீர்க்கதரிசனம், இரண்டாம் வருகையைப் பற்றி அல்லை.

தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவில்லை என்று வேதம் திரும்பவும், திரும்பவும் சொன்னாலும் கூட, அது அப்படியல்லை, முடிவு இருக்கும் என்று கூறுபவர்களும் வேதத்தை சொல்லுக்கு சொல் பின்பற்றுகிறோம் என்று உரிமை பாராட்டுகிறார்கள்.

தொடரும்...
உங்கள் சகோதரன்
டோம்சான் கட்டக்கல்

தேவனுடைய இராஜ்யம் - அது என்ன? அதின் வரையறை.

நண்பர்களே,

தேவனுடைய இராஜ்யத்தின் வருகை என்பதற்கு இயேசு அளித்த வரையறை கிறித்தவ சபைகளின் சிற்றின்ப நாட்டத்துக்கு ஒத்துவராது. மத் 12:28 வாசிப்போம்:
மத் 12:28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
Mat 12:28 But if I cast out devils by the Spirit of God, then the kingdom of God is come unto you
இயேசு தேவனுடைய இராஜ்யத்தின் வருகை என்பதற்கு அளிக்கும் விளக்கமானது: தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறது. இயேசு அளித்த வரையறையின் மிகவும் முக்கிய விஷயம் தேவனுடைய ஆவி. பவுல் தேவனுடைய இராஜ்யம் என்ன என்று விளக்கியதிலிருந்தும் அது என்ன அல்ல என்பதை ஒரு நிமிடம் கவனியாமல் வாசியுங்கள்:
ரோம 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
இன்னும்:
1கொரி 4:20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
1Co 4:20 For the kingdom of God is not in word, but in power.

தேவனுடைய இராஜ்யம் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் நீதி, சமாதானம், சந்தோஷம், பெலம் என்பவைகளே அல்லாமல் அது ஒரு இடம் என்று எழுதப்பட்டதுண்டா?

தேவனுடைய இராஜ்யம் என்பதும் அழியாமையும் (immortality) ஒன்றுதானா?


தேவனுடைய இராஜ்யமும் அழியாமையும் ஒன்றுதான் என்று கூறுகிற வசனங்கள் எதுவும் இல்லை. அதுவும் அல்லாமல்:
மத் 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
மத் 13:48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
தேவனுடைய இராஜ்யம் அழியாமை ஆயிருந்தால் ஆகாதவைகளும் அழியமைக்கு சேர்க்கப்பட்ட பிறகு எறிந்துபோடுவார்களா? எறிந்துபோடப்படுகிற மீன்கள் அழியவேண்டும் அல்லவா? அழியாமைக்கு சேர்ந்தவைகள் அழியுமா?

தொடரும்...
உங்கள் சகோதரன் டோம்சான் கட்டக்கல்

வியாழன், 22 ஜனவரி, 2015

நீங்கள் கடைசிக்காலத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கு 1900க்கு மேல் வயதிருக்குமா?

நண்பர்களே,


இந்த பதிவை வாசிக்கும் முன் பூமி, உலகம் என்கிற பதிவை வாசிக்கிறது உத்தமம். இந்த பதிவை வாசிக்க அவசரப்பட வேண்டாம், உலக முடிவு வரமாட்டாது.



நான் இந்த கேள்வி வேடிக்கையாக கேட்கவில்லை, வேதத்தின்படி பார்த்தால் உங்களுக்கு 1900க்கு மேல் வயதிருக்கவேண்டும். ஏனென்றால் பாவங்களை நீக்கும் பொருட்டாக தம்மைத்தாமே பலியிடுகிறதற்காக இயேசு கடைசிக்காலத்தில் வெளிப்பட்டார் என்று வேதம் கூறுகிறதே?

எபி 9:26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக் காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்

1பேத் 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.
இயேசு வெளிப்பட்ட காலமும் கடைசிக்காலம், நீங்கள் உயிரயொடிருக்கும் காலமும் கடைசிக்காலம் என்று சொல்லுகிறீர்கள். ஒருவேளை வேதத்தில் பவுலும் பேதுருவும் சொன்னது தவறாயிற்றா? அல்லாவிட்டால் நீங்கள் முதல் நூற்றாண்டு முதற்கொண்டு உயிரோடிருக்கிறீங்களா? வணக்கம், அய்யா, இதுவரைக்கும் நூற்றுக்கு மேல் வயதுள்ளவர்களை நான் பார்க்கவில்லை.

ஒருவேளை இந்த மனிதனுக்கு தேவனுடைய ஆவி இல்லை, வேதத்தை இந்த மனிதனாலே உணர்ந்துகொள்ள முடியாது என்பாயாகில், நீங்களே எபி 9:26ஐ விளக்கி, அந்த வசனம் இயேசுவின் பலி கடைசிக் காலத்தில் ஆயிற்று என்று கூறுவதில்லை என்று நிரூபியுங்கள்.

 

கடைசிக்காலம் எவ்வளவு காலம்?



பெரும்பாலும் கிறித்தவர்கள் பூமி உண்டானது முதல் இதுவரைக்கும் ஏறத்தாழ 6000 வருடங்களாயிற்று என்று நம்புகிறார்கள், அல்லவா? இந்த 6000 வருடங்களில் கடைசிக்காலம் மட்டும் 2000 வருடங்களா? கடைசிக்காலம் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்? இன்னும் 2000 அல்லது 10,000 வருடங்கள் கடந்துவிட்டாலும் அப்பொழுதும் கூட கிறித்தவர்கள் இதுவே இதுவே கடைசிக்காலம் என்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்களா?

 

கடைசிக் காலம், உலக முடிவு - வேதத்தில்.


உலக முடிவைப்பற்றி பேசும்போதெல்லாம் முதல்முதலாக நம் நினைப்பில் வருகிற வசனங்களில் ஒன்று மத் 24:3.
மத் 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

தமிழில் "உலகத்தின் முடிவு" என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் ஆங்கிலத்தில் "end of the world"என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். (ஆங்கில வேதத்திலிருந்தும் எடுத்தெழுதும்போது அதனுடனே எழுதப்பட்டுள்ள எண்கள் ஸ்ட்ராங்ஸ் அகராதியிலிருந்தும் அந்தந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கு / எபிரேய வார்த்தையின் குறியீட்டெண்)
Mat 24:3  And as he sat upon the mount of Olives, the disciples came unto him privately, saying, Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the endG4930 of theG3588 world?G165

இதே கிரேக்கு வார்த்தைகள் இதே முறைமையில் வருகிற இன்னொரு வசனம் நாம் இதற்க்கு முன்பு பார்த்த எபி 9:26. மத் 24:3ல் கூறப்பட்டுள்ள உலக முடிவு எதிர்காலத்தில் எப்பொழுதோ நடந்தேறவேண்டும் என்றால், அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளும் கூட எதிர்காலத்தில் எப்பொழுதோ நடந்தேறவேண்டும்:
எபி 9:26  அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
Heb 9:26  For then must he often have suffered since the foundation of the world: but now once in the endG4930 of theG3588 worldG165 hath he appeared to put away sin by the sacrifice of himself.
இந்த இரண்டு வசனங்களும் ஒரே கிரேக்கு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறது; இவைகளில் ஒன்று எதிர்காலத்தில் நடந்தேறவேண்டும் என்றால் மற்றதும் எதிர்காலத்தில் நடந்தேறவேண்டும் அல்லவா? எபி 9:26  திரும்பவும் கவனமாக வாசியுங்கள்:
எபி 9:26  ... அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
அதாவது பாவங்களை நீக்கும்போருட்டாக இயேசு தம்மைத்தாமே பலியிட்டது கடைசிக்காலத்தில் அல்லது உலக முடிவில் (end of the world). இயேசுவின் பலி நடந்தேறி ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு பின்பு, அவருடைய பலி நடந்தேறியது கடைசிக்காலத்தில் அல்லது உலக முடிவில் என்றால் எத்தனை கடைசிக்காலங்கள் அல்லது உலக முடிவுகள் இருக்கிறது? அல்லது எத்தனை உலகங்கள் இருக்கிறது?

இயேசு மனிதர்களிடம் பேசினது கடைசி காலத்தில்?! அப்படா!!


நமது கர்த்தராகிய இயேசு மனிதர்களிடம் பேசினது முதல் நூற்றாண்டிலா, அல்லது 21ம் நூற்றாண்டிலா? நாம் 21ம் நூற்றாண்டைப் பற்றி கடைசி நாட்கள் என்று கூறுவதில்லையா? எப்படியாயினும் இயேசு மனிதர்களிடம் பேசின காலம் கடைசி நாட்கள் என்று வேதம் கூறுகிறது:
எபி 1:1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
எபி 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
Heb 1:1 God, who at sundry times and in divers manners spake in time past unto the fathers by the prophets,
Heb 1:2 Hath in these last days spoken unto us by his Son, whom he hath appointed heir of all things, by whom also he made the worlds;
ஒருவேளை, அப்படியல்ல, தேவனுடைய குமாரன் எல்லா காலத்திலும் பரிசுத்த ஆவியின் மூலம் மனிதர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் என்று வாதிக்க முடியும். அப்படியானால், எப்பொழுதெல்லாம் தேவனுடைய குமாரன் மனிதர்களிடம் பரிசுத்த ஆவியின் மூலம் பேசினாரோ அப்பொழுதெல்லாம் கடைசிநாட்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதா? கடந்த 20 நூற்றாண்டுகளாக தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் மனிதர்களிடம் பேசிக்கொண்டிருந்தாரே? அப்பொழுதெல்லாம் கடைசி நாட்களாக இருந்ததா? இன்னும் வருங்காலத்திலும் கூட தேவன் பரிசுத்தவான்களிடம் திருவுளம்பற்றுவார், அப்பொழுதெல்லாம் கடைசிநாட்கள் ஆகிவிடும் என்று எழுதப்பட்டுள்ளதா?

வேதத்தை வாசிக்கும்போது இலக்கணம் மறந்துபோவோமா?


"திருவுளம்பற்றினார்" (spake, spoke) என்பது இறந்த கால வினைச்சொல்லா? அல்லது, எதிர் கால வினைச்சொல்லா? இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவனுடைய குமாரன் மனிதர்களிடம் பேசின காலம் கடைசிக்காலம் அல்லது கடைசி நாட்கள் என்பதே வேதம் கூறுகிறது.

பெந்தெகொஸ்தே நாளில் கடைசிநாட்களை கலைப் பற்றி பேதுரு:

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சீடர்கள் வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினபோது அவர்களைப் பார்த்து மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று பரியாசம் பண்ணினபோது பேதுரு அவர்கள் மத்தியில் எழுந்து நின்றுகொண்டு சொன்னதை நினைவுகூருங்கள்:
அப் 2:15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 
அப்  2:16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது
பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தேறுகிறது என்று பேதுரு: அந்த நிகழ்ச்சிகளாவது:
அப்  2:17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 
அப்  2:18 என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 

கடைசிநாட்களைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது அந்த தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் பெந்தெகொஸ்தே நாளில் நடந்தேறிற்று என்று பேதுரு சொன்னதைத் தள்ளிப்போடக் கூடுமா? இயேசுவும் சீடர்களும் சொன்னதைத் தள்ளிப்போட்டு, நமது முற்கோள்களின்படி உணர்ந்துகொள்வதும் போதிக்கிறதும் கிறித்தவமா?

நண்பர்களே, இயேசு, அல்லது சீடர்கள் சொன்னதினுடைய விளக்கம் கண்டுபிடிக்கிறது  நமது கடமை, அவர்கள் உயிரோடிருந் காலத்தைப் பற்றி கடைசிக்காலம் என்று கூறப்பட்டிருக்கும்போது, நமது முற்கோள்களுக்கு அது ஒத்துவராததால், நமது முற்கோள்களை வேதத்தின் மேல் சுமத்துகிறதே (eisegesis) தற்பொழுது நடந்துகொண்டிருக்கிற கிறித்தவம்.

உலகமா? காலமா?


மத்: 24:3, எபி 9:26 என்கிற வசனங்களில் உலகம் (world) என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G165. இந்த வார்த்தைக்கு எப்பொழுதும் உலகம் (பூமியின்மேல் மக்கள் குடியிருக்கும் இடம்) என்கிற விளக்கம் இல்லை. [உலகம் என்பதற்கு பயன்படுத்தும் வார்த்தை G2889 (κόσμος, kos'-mos) என்பதே.]
G165 αἰών (aiōn ahee-ohn' எஹீயோன் அல்லது எயீயோன்) From the same as G104; properly an age (சரியாகஒரு காலம் -காலகட்டம் அல்லது ஒரு யுகம்by extension perpetuity [நீடித்த விளக்கம் நித்தியம் என்றுமுள்ளது] (also past); by implication the world; specifically (Jewish) a Messianic period (present or future): - age, course, eternal, (for) ever (-more), [n-]ever, (beginning of the, while the) world (began, without end). Compare G5550.

புதிய ஏற்பாடில் எங்கேயெல்லாம் என்றென்றைக்கும் அல்லது சதாகாலங்களிலும் என்கிற வார்த்தைகள் கண்டுவருகிறதோ அங்கேயெல்லாம் இந்த G165 என்கிற வார்த்தை தொடர்ச்சியாக 2 முறை எழுதியிருக்கிறதை பார்க்கலாம்:
கலா 1:5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 
Gal 1:5 To whom be glory for ever and everG165 G165 Amen.;
பிலி 4:20 நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 
Php 4:20 Now unto God and our Father be glory for ever and everG165 G165 Amen.

(இதைப் போன்ற இன்னும் 20க்கு மேற்பட்ட வசனங்கள் இருக்கின்றன.)
என்றென்றைக்கும் என்பதை விட உத்தமமான சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு காலாகாலம் என்பதே. தொடர்ச்சியாக 2 முறை எழுதாமல் ஒருமுறை மட்டும் எழுதப்பட்டாலும் அதற்கு காலம் என்கிற விளக்கம் வருகிறது.இதற்கான ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது (மத் 6:13; 21:19; மார்கு 11:14...)


இங்கே  கொடுக்கப்படுள்ள வசங்களிலிருந்தும் இந்த வார்த்தைக்கு காலம் என்கிற விளக்கம் இருக்கிறது என்பது வெளியரங்கமாயிருக்கிறது.

ஒருவேளை நீங்கள் ஏன் சகோதரா ஒரு வார்த்தைக்கு ஒப்பொலிகள் (ஒரே வார்த்தைக்கு வேறுவேறு விளக்கங்கள் - homophones) இருக்கக்கூடாதா? என்று கேட்கலாம். ஒப்பொலிகள் இருக்கிறது என்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தோன்றினதினால் அல்லவா உங்களுக்கு இப்பொழுது 1900க்கு மேல் வயதாயிற்று?

எஹீயோன் என்கிற வார்த்தைக்கு உலகம் என்கிற விளக்கம் என்று உணர்ந்துகொண்ட புது மொழிபெயர்ப்பாளர்கள் அந்த வார்த்தை வருகிற இடங்களிலெல்லாம் 'யுகம்' அல்லது 'காலம்' என்கிற விளக்கம் வருகிற 'age' என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
(ESV) Mat 24:3 As he sat on the Mount of Olives, the disciples came to him privately, saying, "Tell us, when will these things be, and what will be the sign of your coming and of the close of the age?"
(YLT) Mat 24:3 And when he is sitting on the mount of the Olives, the disciples came near to him by himself, saying, `Tell us, when shall these be? and what is the sign of thy presence, and of the full end of the age?'
(ESV) Heb 9:26  for then he would have had to suffer repeatedly since the foundation of the world. But as it is, he has appeared once for all at the end of the ages to put away sin by the sacrifice of himself.
(YLT) Heb 9:26 since it had behoved him many times to suffer from the foundation of the world, but now once, at the full end of the ages, for putting away of sin through his sacrifice, he hath been manifested;

யாருடைய யுகத்தின் அல்லது காலத்தின் முடிவு?

 

சுவிசேஷ யுகம் அல்லது கிறித்தவர்களின் காலம் என்பது பெந்தெகொஸ்தே நாளில் தொடக்கமாயிற்று என்பதற்கு  இரு வேறு கருத்துகள் எதுவும் இல்லை. அதாவது, மத் 24:3ல் சீடர்கள் இயேசுவிடம் 'காலத்தின் முடிவைப் பற்றி கேள்வி கேட்டபோது சுவிசேஷ யுகம் இன்னும் பிறக்கவில்லை. அதேபோல, இயேசுவும் சீடர்களும் யூதர்களின் காலத்தின் முடிவில் இருந்தார்கள் என்பதற்கும் பூசல் எதுவும் இல்லை. யூதர்களின் காலத்தின் முடிவில் இருந்த இயேசுவும் சீடர்களும் அந்த காலத்தின் முடிவைப்பற்றி சர்ச்சை பண்ணுவாரா அல்லது இன்னும் பிறக்காத காலத்தின் முடிவைப்பற்றி சர்ச்சை பண்ணுவாரா? உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?

உங்களுடைய ஊரில் எப்படி என்று எனக்கு தெரியாது, அனால், எங்கள் ஊரில் பிள்ளைபிறப்பு எதிர்பார்த்துகொண்டிருக்கும் தாய்தகப்பன்மார் பிறக்கப்போகிற பிள்ளை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா, அதற்கு என்ன பெயர் வைக்கவேண்டும், அதின் நிறம் கறுப்பாக இருக்குமா, வெளுப்பாக இருக்குமா என்பதே அல்லாமல் அது சாவும்போது அதின் பிணம் புதைக்க வேண்டுமா அல்லது எரிக்க வேண்டுமா என்று யோசிக்கிறதில்லை.

ஒரு கேள்விக்குள் 2-3 கேள்விகளாம், ஹ்ம்ம், உண்மைதானா?


மத் 24:3ஐ பற்றி ஒருசிலர் கூறுவது என்னவென்றால் அந்த ஒரே ஒரு வசனத்திலே சீடர்கள் 2, 3 காலங்களுக்கான வேறுவேறு  கேள்விகளை கேட்டாராம். மத் 24ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருபாலும் நிகழ்வுகள் முதல் நூற்றாண்டிலே நடந்தேறியது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்; அகிலும் தெரிந்ததை வெளிப்படையாக ஒத்துக்கொண்டால் அவருடைய வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படும்; அவர்களுடைய கோட்பாடுகள் தவறு என்று வெளிப்பட்டுவிடும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சாதாரணமாக யாராகிலும் இன்னொருத்தரிடம்: உங்கள் திருமண்ம் எப்போது; உங்கள் பேரனுக்கு என்றைக்கு பெயர் வைக்கப்போகிறீங்கள் என்று கேட்கிறதற்கு வாய்பிருக்கிறதா?

முடிவுரை


ஒரே ஒரு பதிவில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது. ஒருவேளை, சரி சகோதரா, நீங்கள் கொடுத்த வசனங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்துவரிகிறது, அனால், இந்த உலகத்துக்கு முடிவில்லையா என்று விசாரிக்கலாம், அதற்கு விளக்கம் அளிக்கும் முன் தேவனுடைய இராஜ்யம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

கிறிஸ்துவுக்குள்,
டோம்சான் கட்டய்க்கல்