நண்பர்களே,
இந்த பதிவை வாசிக்கும் முன் பூமி, உலகம் என்கிற பதிவை வாசிக்கிறது உத்தமம். இந்த பதிவை வாசிக்க அவசரப்பட வேண்டாம், உலக முடிவு வரமாட்டாது.☺
நான் இந்த கேள்வி வேடிக்கையாக கேட்கவில்லை, வேதத்தின்படி பார்த்தால் உங்களுக்கு 1900க்கு மேல் வயதிருக்கவேண்டும். ஏனென்றால் பாவங்களை நீக்கும் பொருட்டாக தம்மைத்தாமே பலியிடுகிறதற்காக இயேசு கடைசிக்காலத்தில் வெளிப்பட்டார் என்று வேதம் கூறுகிறதே?
- எபி 9:26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக் காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
- 1பேத் 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.
இயேசு வெளிப்பட்ட காலமும் கடைசிக்காலம், நீங்கள் உயிரயொடிருக்கும் காலமும் கடைசிக்காலம் என்று சொல்லுகிறீர்கள். ஒருவேளை வேதத்தில் பவுலும் பேதுருவும் சொன்னது தவறாயிற்றா? அல்லாவிட்டால் நீங்கள் முதல் நூற்றாண்டு முதற்கொண்டு உயிரோடிருக்கிறீங்களா? வணக்கம், அய்யா, இதுவரைக்கும் நூற்றுக்கு மேல் வயதுள்ளவர்களை நான் பார்க்கவில்லை.
ஒருவேளை இந்த மனிதனுக்கு தேவனுடைய ஆவி இல்லை, வேதத்தை இந்த மனிதனாலே உணர்ந்துகொள்ள முடியாது என்பாயாகில், நீங்களே எபி 9:26ஐ விளக்கி, அந்த வசனம் இயேசுவின் பலி கடைசிக் காலத்தில் ஆயிற்று என்று கூறுவதில்லை என்று நிரூபியுங்கள்.
பெரும்பாலும் கிறித்தவர்கள் பூமி உண்டானது முதல் இதுவரைக்கும் ஏறத்தாழ 6000 வருடங்களாயிற்று என்று நம்புகிறார்கள், அல்லவா? இந்த 6000 வருடங்களில் கடைசிக்காலம் மட்டும் 2000 வருடங்களா? கடைசிக்காலம் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்? இன்னும் 2000 அல்லது 10,000 வருடங்கள் கடந்துவிட்டாலும் அப்பொழுதும் கூட கிறித்தவர்கள் இதுவே இதுவே கடைசிக்காலம் என்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்களா?
ஒருவேளை இந்த மனிதனுக்கு தேவனுடைய ஆவி இல்லை, வேதத்தை இந்த மனிதனாலே உணர்ந்துகொள்ள முடியாது என்பாயாகில், நீங்களே எபி 9:26ஐ விளக்கி, அந்த வசனம் இயேசுவின் பலி கடைசிக் காலத்தில் ஆயிற்று என்று கூறுவதில்லை என்று நிரூபியுங்கள்.
கடைசிக்காலம் எவ்வளவு காலம்?
பெரும்பாலும் கிறித்தவர்கள் பூமி உண்டானது முதல் இதுவரைக்கும் ஏறத்தாழ 6000 வருடங்களாயிற்று என்று நம்புகிறார்கள், அல்லவா? இந்த 6000 வருடங்களில் கடைசிக்காலம் மட்டும் 2000 வருடங்களா? கடைசிக்காலம் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்? இன்னும் 2000 அல்லது 10,000 வருடங்கள் கடந்துவிட்டாலும் அப்பொழுதும் கூட கிறித்தவர்கள் இதுவே இதுவே கடைசிக்காலம் என்பதாக சொல்லிக்கொண்டே இருப்பார்களா?
கடைசிக் காலம், உலக முடிவு - வேதத்தில்.
உலக முடிவைப்பற்றி பேசும்போதெல்லாம் முதல்முதலாக நம் நினைப்பில் வருகிற வசனங்களில் ஒன்று மத் 24:3.
- மத் 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
தமிழில் "உலகத்தின் முடிவு" என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் ஆங்கிலத்தில் "end of the world"என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். (ஆங்கில வேதத்திலிருந்தும் எடுத்தெழுதும்போது அதனுடனே எழுதப்பட்டுள்ள எண்கள் ஸ்ட்ராங்ஸ் அகராதியிலிருந்தும் அந்தந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கு / எபிரேய வார்த்தையின் குறியீட்டெண்)
- Mat 24:3 And as he sat upon the mount of Olives, the disciples came unto him privately, saying, Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the endG4930 of theG3588 world?G165
இதே கிரேக்கு வார்த்தைகள் இதே முறைமையில் வருகிற இன்னொரு வசனம் நாம் இதற்க்கு முன்பு பார்த்த எபி 9:26. மத் 24:3ல் கூறப்பட்டுள்ள உலக முடிவு எதிர்காலத்தில் எப்பொழுதோ நடந்தேறவேண்டும் என்றால், அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளும் கூட எதிர்காலத்தில் எப்பொழுதோ நடந்தேறவேண்டும்:
- எபி 9:26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
- Heb 9:26 For then must he often have suffered since the foundation of the world: but now once in the endG4930 of theG3588 worldG165 hath he appeared to put away sin by the sacrifice of himself.
- எபி 9:26 ... அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
இயேசு மனிதர்களிடம் பேசினது கடைசி காலத்தில்?! அப்படா!!
- எபி 1:1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
எபி 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
Heb 1:1 God, who at sundry times and in divers manners spake in time past unto the fathers by the prophets,
Heb 1:2 Hath in these last days spoken unto us by his Son, whom he hath appointed heir of all things, by whom also he made the worlds;
வேதத்தை வாசிக்கும்போது இலக்கணம் மறந்துபோவோமா?
"திருவுளம்பற்றினார்" (spake, spoke) என்பது இறந்த கால வினைச்சொல்லா? அல்லது, எதிர் கால வினைச்சொல்லா? இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவனுடைய குமாரன் மனிதர்களிடம் பேசின காலம் கடைசிக்காலம் அல்லது கடைசி நாட்கள் என்பதே வேதம் கூறுகிறது.
பெந்தெகொஸ்தே நாளில் கடைசிநாட்களை கலைப் பற்றி பேதுரு:
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சீடர்கள் வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினபோது அவர்களைப் பார்த்து மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று பரியாசம் பண்ணினபோது பேதுரு அவர்கள் மத்தியில் எழுந்து நின்றுகொண்டு சொன்னதை நினைவுகூருங்கள்:
- அப் 2:15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
- அப் 2:16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
- அப் 2:17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
- அப் 2:18 என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
கடைசிநாட்களைப் பற்றி ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது அந்த தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் பெந்தெகொஸ்தே நாளில் நடந்தேறிற்று என்று பேதுரு சொன்னதைத் தள்ளிப்போடக் கூடுமா? இயேசுவும் சீடர்களும் சொன்னதைத் தள்ளிப்போட்டு, நமது முற்கோள்களின்படி உணர்ந்துகொள்வதும் போதிக்கிறதும் கிறித்தவமா?
நண்பர்களே, இயேசு, அல்லது சீடர்கள் சொன்னதினுடைய விளக்கம் கண்டுபிடிக்கிறது நமது கடமை, அவர்கள் உயிரோடிருந் காலத்தைப் பற்றி கடைசிக்காலம் என்று கூறப்பட்டிருக்கும்போது, நமது முற்கோள்களுக்கு அது ஒத்துவராததால், நமது முற்கோள்களை வேதத்தின் மேல் சுமத்துகிறதே (eisegesis) தற்பொழுது நடந்துகொண்டிருக்கிற கிறித்தவம்.
உலகமா? காலமா?
மத்: 24:3, எபி 9:26 என்கிற வசனங்களில் உலகம் (world) என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G165. இந்த வார்த்தைக்கு எப்பொழுதும் உலகம் (பூமியின்மேல் மக்கள் குடியிருக்கும் இடம்) என்கிற விளக்கம் இல்லை. [உலகம் என்பதற்கு பயன்படுத்தும் வார்த்தை G2889 (κόσμος, kos'-mos) என்பதே.]
- G165 αἰών (aiōn ahee-ohn' எஹீயோன் அல்லது எயீயோன்) From the same as G104; properly an age (சரியாகஒரு காலம் -காலகட்டம் அல்லது ஒரு யுகம்] by extension perpetuity [நீடித்த விளக்கம் நித்தியம் என்றுமுள்ளது] (also past); by implication the world; specifically (Jewish) a Messianic period (present or future): - age, course, eternal, (for) ever (-more), [n-]ever, (beginning of the, while the) world (began, without end). Compare G5550.
புதிய ஏற்பாடில் எங்கேயெல்லாம் என்றென்றைக்கும் அல்லது சதாகாலங்களிலும் என்கிற வார்த்தைகள் கண்டுவருகிறதோ அங்கேயெல்லாம் இந்த G165 என்கிற வார்த்தை தொடர்ச்சியாக 2 முறை எழுதியிருக்கிறதை பார்க்கலாம்:
- கலா 1:5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
- Gal 1:5 To whom be glory for ever and ever. G165 G165 Amen.;
- பிலி 4:20 நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
- Php 4:20 Now unto God and our Father be glory for ever and ever. G165 G165 Amen.
- (இதைப் போன்ற இன்னும் 20க்கு மேற்பட்ட வசனங்கள் இருக்கின்றன.)
என்றென்றைக்கும் என்பதை விட உத்தமமான சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு காலாகாலம் என்பதே. தொடர்ச்சியாக 2 முறை எழுதாமல் ஒருமுறை மட்டும் எழுதப்பட்டாலும் அதற்கு காலம் என்கிற விளக்கம் வருகிறது.இதற்கான ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது (மத் 6:13; 21:19; மார்கு 11:14...)
இங்கே கொடுக்கப்படுள்ள வசங்களிலிருந்தும் இந்த வார்த்தைக்கு காலம் என்கிற விளக்கம் இருக்கிறது என்பது வெளியரங்கமாயிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் ஏன் சகோதரா ஒரு வார்த்தைக்கு ஒப்பொலிகள் (ஒரே வார்த்தைக்கு வேறுவேறு விளக்கங்கள் - homophones) இருக்கக்கூடாதா? என்று கேட்கலாம். ஒப்பொலிகள் இருக்கிறது என்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தோன்றினதினால் அல்லவா உங்களுக்கு இப்பொழுது 1900க்கு மேல் வயதாயிற்று?
இங்கே கொடுக்கப்படுள்ள வசங்களிலிருந்தும் இந்த வார்த்தைக்கு காலம் என்கிற விளக்கம் இருக்கிறது என்பது வெளியரங்கமாயிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் ஏன் சகோதரா ஒரு வார்த்தைக்கு ஒப்பொலிகள் (ஒரே வார்த்தைக்கு வேறுவேறு விளக்கங்கள் - homophones) இருக்கக்கூடாதா? என்று கேட்கலாம். ஒப்பொலிகள் இருக்கிறது என்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தோன்றினதினால் அல்லவா உங்களுக்கு இப்பொழுது 1900க்கு மேல் வயதாயிற்று?
எஹீயோன் என்கிற வார்த்தைக்கு உலகம் என்கிற விளக்கம் என்று உணர்ந்துகொண்ட புது மொழிபெயர்ப்பாளர்கள் அந்த வார்த்தை வருகிற இடங்களிலெல்லாம் 'யுகம்' அல்லது 'காலம்' என்கிற விளக்கம் வருகிற 'age' என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
- (ESV) Mat 24:3 As he sat on the Mount of Olives, the disciples came to him privately, saying, "Tell us, when will these things be, and what will be the sign of your coming and of the close of the age?"
- (YLT) Mat 24:3 And when he is sitting on the mount of the Olives, the disciples came near to him by himself, saying, `Tell us, when shall these be? and what is the sign of thy presence, and of the full end of the age?'
- (ESV) Heb 9:26 for then he would have had to suffer repeatedly since the foundation of the world. But as it is, he has appeared once for all at the end of the ages to put away sin by the sacrifice of himself.
- (YLT) Heb 9:26 since it had behoved him many times to suffer from the foundation of the world, but now once, at the full end of the ages, for putting away of sin through his sacrifice, he hath been manifested;
யாருடைய யுகத்தின் அல்லது காலத்தின் முடிவு?
சுவிசேஷ யுகம் அல்லது கிறித்தவர்களின் காலம் என்பது பெந்தெகொஸ்தே நாளில் தொடக்கமாயிற்று என்பதற்கு இரு வேறு கருத்துகள் எதுவும் இல்லை. அதாவது, மத் 24:3ல் சீடர்கள் இயேசுவிடம் 'காலத்தின் முடிவைப் பற்றி கேள்வி கேட்டபோது சுவிசேஷ யுகம் இன்னும் பிறக்கவில்லை. அதேபோல, இயேசுவும் சீடர்களும் யூதர்களின் காலத்தின் முடிவில் இருந்தார்கள் என்பதற்கும் பூசல் எதுவும் இல்லை. யூதர்களின் காலத்தின் முடிவில் இருந்த இயேசுவும் சீடர்களும் அந்த காலத்தின் முடிவைப்பற்றி சர்ச்சை பண்ணுவாரா அல்லது இன்னும் பிறக்காத காலத்தின் முடிவைப்பற்றி சர்ச்சை பண்ணுவாரா? உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?
உங்களுடைய ஊரில் எப்படி என்று எனக்கு தெரியாது, அனால், எங்கள் ஊரில் பிள்ளைபிறப்பு எதிர்பார்த்துகொண்டிருக்கும் தாய்தகப்பன்மார் பிறக்கப்போகிற பிள்ளை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா, அதற்கு என்ன பெயர் வைக்கவேண்டும், அதின் நிறம் கறுப்பாக இருக்குமா, வெளுப்பாக இருக்குமா என்பதே அல்லாமல் அது சாவும்போது அதின் பிணம் புதைக்க வேண்டுமா அல்லது எரிக்க வேண்டுமா என்று யோசிக்கிறதில்லை.
ஒரு கேள்விக்குள் 2-3 கேள்விகளாம், ஹ்ம்ம், உண்மைதானா?
மத் 24:3ஐ பற்றி ஒருசிலர் கூறுவது என்னவென்றால் அந்த ஒரே ஒரு வசனத்திலே சீடர்கள் 2, 3 காலங்களுக்கான வேறுவேறு கேள்விகளை கேட்டாராம். மத் 24ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருபாலும் நிகழ்வுகள் முதல் நூற்றாண்டிலே நடந்தேறியது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்; அகிலும் தெரிந்ததை வெளிப்படையாக ஒத்துக்கொண்டால் அவருடைய வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படும்; அவர்களுடைய கோட்பாடுகள் தவறு என்று வெளிப்பட்டுவிடும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சாதாரணமாக யாராகிலும் இன்னொருத்தரிடம்: உங்கள் திருமண்ம் எப்போது; உங்கள் பேரனுக்கு என்றைக்கு பெயர் வைக்கப்போகிறீங்கள் என்று கேட்கிறதற்கு வாய்பிருக்கிறதா?
முடிவுரை
ஒரே ஒரு பதிவில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது. ஒருவேளை, சரி சகோதரா, நீங்கள் கொடுத்த வசனங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்துவரிகிறது, அனால், இந்த உலகத்துக்கு முடிவில்லையா என்று விசாரிக்கலாம், அதற்கு விளக்கம் அளிக்கும் முன் தேவனுடைய இராஜ்யம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
கிறிஸ்துவுக்குள்,
டோம்சான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக