நண்பர்களே,
[Tamil is not my native tongue, if you find any spelling or grammar mistake, please let me know.]
[Tamil is not my native tongue, if you find any spelling or grammar mistake, please let me know.]
தேவனுடைய இராஜ்யம் எங்கே? இந்த கேள்விக்கு வேறுவேறு கிறித்தவ வகுப்பினர்களுக்கு வேறுவேறு விடைகள் இருக்கும். ஆனால், இயேசு அளித்த விடையை விட அவர்களுடைய விடைகளுக்கு விலை உண்டா? இயேசு சொன்ன விடையை கவனிப்போம்:
- லூக் 17:20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
- லூக் 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
இயேசுவின் வார்த்தைகளின்படி தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது. இங்கே 'உங்களுக்குள்' என்பதில் 'உள்' என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G1787 (ἐντός, entos). இந்த வார்த்தை இன்னொரு தடவை மற்றும் தான் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது:
இங்கே பிரத்தியட்சமாய் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (G3907 παρατήρησις paratērēsis) வேறு எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. அதின் மூல வார்த்தையாகிய G3906 (παρατηρέω, paratēreō) மார்கு 3:2; லூக் 6:7; 14:1-2; 20:20; அப் 9:24; கலா 4:10 போன்ற வசனங்களில் 'நோக்கமாயிரு', 'பார்த்து', 'காத்துக்கொண்டிரு' என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை பார்க்கிறோம். அதாவது 'பிரத்தியட்சமாய்' என்பதற்கு 'காணக்கூடிய' அல்லது 'கண்ணுக்கெட்டுகிற' என்று விளக்கம்.
- மத் 23:26 குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.
'தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது', என்றார் இயேசு.
இங்கே பிரத்தியட்சமாய் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (G3907 παρατήρησις paratērēsis) வேறு எங்கேயும் பயன்படுத்தப்படவில்லை. அதின் மூல வார்த்தையாகிய G3906 (παρατηρέω, paratēreō) மார்கு 3:2; லூக் 6:7; 14:1-2; 20:20; அப் 9:24; கலா 4:10 போன்ற வசனங்களில் 'நோக்கமாயிரு', 'பார்த்து', 'காத்துக்கொண்டிரு' என்றெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை பார்க்கிறோம். அதாவது 'பிரத்தியட்சமாய்' என்பதற்கு 'காணக்கூடிய' அல்லது 'கண்ணுக்கெட்டுகிற' என்று விளக்கம்.
தேவனுடைய இராஜ்யம் 'பிரத்தியட்சமாய் வராது' என்றால் அது கண்ணுக்கு எட்டுகிறபடிக்கு வராது. அது இடமாயிருந்தால் அது பார்க்கக்கூடிய நிலைமையில் இருக்கவேண்டும்.
"பிரத்தியட்சமாய் வராது" என்று கூறின பிறகு "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" என்று சொன்னதின் விளக்கம் அது கண்ணுக்கெட்டாத, ஆவிக்குரிய ஒரு இராஜ்யம் என்பதல்லவா?
தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி மீண்டும் இயேசு பிலாத்திடம்:
- யோவா 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
ஆம், இயேசு ராஜா தான், ஆனால் அவருடைய இராஜ்யம் இந்த உலகத்திற்கு உரியதல்ல. நீங்கள் பரலோக ஜபம் பண்ணிக்கொண்டே இருந்தாலும்கூட அவருடைய இராஜ்யம் பூமியில் ஒரு இராஜ்யமாக நிலைநாட்டப்படுவதே இல்லை.
தேவனுடைய இராஜ்யம் கட்டம் #1, கட்டம் #2 ...?!
தேவனுடைய இராஜ்யம் மற்றும் பரலோக இராஜ்யம் என்கிற சொற்றொடர்களுக்கு மாறுபாடு எதுவும் இல்லை என்பதை பார்த்தோம்.
ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்கு இரண்டு கட்டம் (phase) இருக்கிறது என்பதாக போதிக்கிறதுண்டு, எங்கள் பெங்களூருவில் ஒருசில காலனிகளுக்கு ஜயநகர் ஒன்றாம் கட்டம், ஜயநகர் இரண்டாம் கட்டம் போன்ற பெயர்கள் இருக்கின்றன. அதே போல தேவனுடைய இராஜ்யம் ஒன்றாம் கட்டம் பூமியிலும் பலலோக இராஜ்யம் என்னும் இரண்டாம் கட்டம் பரலோகத்திலும் இருக்கும் என்று போதிக்கிறார்கள்.. அனால் இது வேதத்தை மீறுகிற போதனை. ஏனெனில் இயேசு சொன்னதை கவனியுங்கள்:
- ...தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்...(மத் 12:25)
தேவனுடைய இராஜ்யம் ஏன் பரலோகத்தில் இருக்ககூடாது?
- மத் 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
- மத் 13:48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
நண்பர்களே, இயேசு கிறிஸ்துவை நம்புகிற நீங்களே தேவனுடைய இராஜ்யம்; தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது. ஆகிலும், ஆகாதவர்கள் நமது மத்தியில் இருக்கிறார்கள். அறுவடையின் காலத்தில் ஆகாதவைகள் எறிந்துபோடப்படுவார்களே அல்லாமல் அவைகள் பரலோகத்துக்கு எடுக்கப்படுவதில்லை. தொடர்ந்துவரும் வசனங்களை வாசியுங்கள்:
- மத் 13:49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
- மத் 13:50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
பரலோகத்தில் அக்கினிச்சூளை இருக்கிறதற்கு வாய்ப்பில்லை.
யூதர்களிடமிருந்தும் நீக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யம் தான் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது, இயேசு ஆசாரியர்கள் இடம்:
- மத் 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து (யூதர்கள்) நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
தேவனுடைய இராஜ்யத்தில் 'பிரவேசிப்பது'
- எபி 3:11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லை என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.
- எபி 3:18 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?
- (எபி 3:11, 18, 19; 4:3, 5, 6, 11 காணவும்)
தேவனுடைய இராஜ்யத்தை 'சுதந்தரித்துக்கொள்வது'
நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்கும் முன் அது யாரிடம் இருந்தது என்று தெரியுமா? இயேசு பிரதான ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் சொன்னதை கவனியுங்கள்:
- மத் 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
சுதந்தரித்துக்கொள்வது (inherit என்று ஆங்கிலம்) என்பது எப்பொழுதும் இடத்தை அல்லது ஒரு பொருளை ஆகவேண்டும் என்று தேவையில்லை, உதாரணமாக:
- மத் 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
- எபி 12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.
- 1பெத் 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
- லூக் 17:20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
- லூக் 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
பாவிகள் தேவனுடைய இராஜ்யத்த்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்பதற்கு மிகவும் எளிதான விளக்கம் என்னவென்றால்: அவர்களுக்கு நிம்மதி அல்லது இளைப்பு இராது.
முடிவுரை:
தேவனுடைய இராஜ்யம் ஒரு இடம் கிடையாது, அது பூமிக்குரிய ஒரு இராஜ்யமாக நிலைநாட்டப்படமாட்டது. அது கண்ணுக்கெட்டுகிறபடிக்கு வரமாட்டது. தேவனுடைய இராஜ்யத்துக்கு இஸ்ரவேலில் அல்லது எருசலேமில் அல்லது அமெரிக்காவில் தொடக்கமாயிடும் போன்ற போதனைகளுக்கு வேதத்தில் ஆதாரமில்லை. தேவனுடைய இராஜ்யம் பலன் கொடாத யூதர்களில் நின்றும் எடுத்து, பலன் கொடுக்கும் இன்னொரு ஜாதிக்கு கொடுக்கப்படும் என்பதே அல்லாமல் அது திரும்பவும் யூதர்களுக்கு கொடுக்கப்படும் என்று வேதம் கூருகிறதில்லை.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
டோம்சான் கட்டக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக