நண்பர்களே,
தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றி வேதத்தில் முதல்முறையாக எழுதப்பட்டிருக்கிறது மத்தேயுவின் சுவிஷேசத்தில் அல்லை, தானியேலின் தீர்க்கதரிசனத்தில்.
- தானி 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
இந்த வசனத்தில் அந்த ராஜாக்களின் என்று கூறப்பட்டுள்ளது நான்காவது இராஜ்யத்தைப் பற்றியே - தானி 2:40-43. நேபுகாத்நேச்சாருக்கான கனவின் விளக்கத்தைச் சொன்ன தானியேல், நான்கு இராஜ்யங்களைப் பற்றி கூறுகிறார். இந்த 4 இராஜ்யங்களில்:
- முதலாவது பாபேல் (பாபிலோன்) - பொன் - என்று தானியேல் கூறினார் (தானி 2:38).
- பாபேலுக்கு அப்புறம் வந்த இராஜ்யம் - வெள்ளி - மேதோ-பெர்சிய.
- மூன்றாம் இராஜ்யம் - வெண்கலம் - இது கிரேக்க இராஜ்யம் என்பது உறுதி, ஏனென்றால், வசனம் கூறுகிறது போல அப்பொழுதிருந்த மக்களுக்கு தெரிந்திருந்த உலகத்தை எல்லாம் அது ஆண்டுக்கொண்டது.
- நான்காவது இராஜ்யம் - இரும்பு - ரோமா இராஜ்யம். இதுவும் ரோமா தான் என்பதும் உறுதி. ஏனெனில், புகழ்பெற்ற 'Pax Romana' (பாக்ஸ் ரோமானா - ரோமன் அமைதி) என்பது அடைந்ததே வேதம் கூறுகிறது போல மற்று இராஜ்யங்கள் மீது படையெடுத்தும் குடிமக்களை ஒடுக்கியுமே. (இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பை போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும். தானி 2:40)
நான்காம் இராஜ்யமாகிய ரோமா இராஜ்யத்தின் துவக்கம் கி. மு. 29ல். அதினுடைய முதல் அரசனாக எண்ணப்படுகிறது அகஸ்து ராயன். (ஜூலியஸ் இராயனுடைய காலத்திலிருந்து எண்ணினால் கி. மு. 49ல்). ரோமா இராஜ்யம் பிரிந்து கிழக்கும் மேற்கும் ரோமா இராஜ்யங்களாயிற்று. திரும்பவும் பிரிந்து, பிரிந்து கி. பி 1453ல் அந்த இராஜ்யம் இல்லாமல் போயிற்று.
- (ரோமா இராஜ்யம் தற்பொழுதும் கூட இருக்கிறது, அது ரோமன் கத்தோலிக்க சப்பை வழியாக ஆட்சி பண்ணுகிறது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனுடைய இராஜ்யம் என்ன என்று தெரியாததினால் அவர்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றி தெரிவிக்கிறதை விட, அவர்களிடம் வாதாடுவது என் வேலை கிடையாது. ஷேர்ஷா சூரி அல்லது பாபர் இப்பொழுதும் கூட நமது பிரதமர் வழியாக அரசாளுகிறார் என்று சொல்வது போல தான் அவர்கள் எண்ணமும்.)
தானி 2:44ன் படி, தேவனுடைய இராஜ்யம் கி. மு 29க்கும் கி. பி 1453க்கும் இடையில் தொடங்க வேண்டியிருந்தது.
தேவனுடைய இராஜ்யம் வந்தாச்சு என்றார் இயேசு, வரவில்லை என்கிறார்கள் கிறித்தவர்கள்!
பெரும்பாலும் கிறித்தவர்கள் தேவனுடைய இராஜ்யம் வரவேண்டும் என்று ஆதுரத்துடன் பரலோக ஜெபம் பண்ணுகிறார்கள். ஒரு சிலர் தேவனுடைய இராஜ்யம் எருசலேமிலிருந்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு வேத நிபுணர் இயேசு இரண்டாம் வருகையில் அமெரிக்காவுக்கு வருவார் , தேவனுடைய இராஜ்யம் அங்கே தொடங்கிடும் என்றெண்ணி அமெரிக்காவில் ஒரு கட்டிடம் நிறைய மது குவித்து வைத்தான். இதைப்போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் இன்னும் இருக்கிறது.
எதிர்காலத்தில் எப்பொழுதோ தேவனுடைய இராஜ்யம் பரலோகத்திலிருந்தும் இறங்கி வரும் என்று எதிர்ப்பர்த்துகொண்டிருபவர்களுக்கு இயேசு அளிக்கும் பதில்:
- மத் 12:28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
- Mat 12:28 But if I cast out devils by the Spirit of God, then the kingdom of God is come unto you. (KJV)
- Mat 12:28 But if it is by the Spirit of God that I cast out demons, then the kingdom of God has come upon you. (ESV)
இருக்காத மல்லனிடம் மற்போரிடகூடுமா?
தேவனுடைய இராஜ்யம் எதிர்காலத்தில் எப்பொழுதோ வரவேண்டும் என்கிறார்கள் இயேசுவை பின்பற்றுகிறோம் என்று உரிமை பாராட்டுகிற கிறித்தவர்கள். ஆனால், முதல் நூற்றண்டிலேயே, இயேசுவின் காலத்திலேயே தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது என்றார் இயேசு.
- மத் 11:12 யோவான் ஸ்நானன் காலம் முதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
என்னாப்பா, இயேசு இப்படியெல்லாம் சொன்னிட்டாரே? சபையின் போதனைக்கு விரோதமாக பேசினரே இயேசு?
இது தற்செயலாக நடந்தேறினதா?
- தானி 2:44ன் படி, தேவனுடைய இராஜ்யம் கி. மு 29க்கும் கி. பி 1453க்கும் இடையில் தொடங்க வேண்டியிருந்தது.
- இயேசு "தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே" என்று கூறினது ஏறத்தாழ கி.பி. 30ல்.
கி. மு. 29க்கும் கி. பி 1453க்கும் இடையில் வருகிற கி.பி. 30ஐ விட தேவனுடைய இராஜ்யத்தின் துவக்கத்துக்கு வேதத்தின் படி ஒத்துவருகிற ஒரு தேதியை காண்பிக்க முடியுமா?
தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவு இருக்குமா?
நான்காவது இராஜ்யத்தின் நாட்களில் தேவனுடைய இராஜ்யத்துக்கு துவக்கம் ஆகவேண்டும் என்பதை தானி 2:44ல் பார்த்தோம். ஏறத்தாழ கி. பி. 30ல் தேவனுடைய இராஜ்யத்துக்கு துவக்கமாயிற்று என்றார் இயேசு. இன்னும் பார்க்கவேண்டிய விஷயம் தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவு இருக்குமா என்பதே.
திரும்பவும் தானி 2:44 வாசிப்போம்:
- தானி 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
- லுக் 1:33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
இயேசுவின் பிறப்பைப் பற்றியான இன்னொரு தீர்க்கதரிசனம்:
- ஏசா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் (government) அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்.
- ஏசா 9:7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் (government) பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
இது இயேசுவின் பிறப்பைப் பற்றியான இன்னொரு தீர்க்கதரிசனம், இரண்டாம் வருகையைப் பற்றி அல்லை.
தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவில்லை என்று வேதம் திரும்பவும், திரும்பவும் சொன்னாலும் கூட, அது அப்படியல்லை, முடிவு இருக்கும் என்று கூறுபவர்களும் வேதத்தை சொல்லுக்கு சொல் பின்பற்றுகிறோம் என்று உரிமை பாராட்டுகிறார்கள்.
தேவனுடைய இராஜ்யத்துக்கு முடிவில்லை என்று வேதம் திரும்பவும், திரும்பவும் சொன்னாலும் கூட, அது அப்படியல்லை, முடிவு இருக்கும் என்று கூறுபவர்களும் வேதத்தை சொல்லுக்கு சொல் பின்பற்றுகிறோம் என்று உரிமை பாராட்டுகிறார்கள்.
தொடரும்...
உங்கள் சகோதரன்
உங்கள் சகோதரன்
டோம்சான் கட்டக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக