சனி, 24 ஜனவரி, 2015

தேவனுடைய இராஜ்யம் - அது என்ன? அதின் வரையறை.

நண்பர்களே,

தேவனுடைய இராஜ்யத்தின் வருகை என்பதற்கு இயேசு அளித்த வரையறை கிறித்தவ சபைகளின் சிற்றின்ப நாட்டத்துக்கு ஒத்துவராது. மத் 12:28 வாசிப்போம்:
மத் 12:28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால்தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
Mat 12:28 But if I cast out devils by the Spirit of God, then the kingdom of God is come unto you
இயேசு தேவனுடைய இராஜ்யத்தின் வருகை என்பதற்கு அளிக்கும் விளக்கமானது: தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறது. இயேசு அளித்த வரையறையின் மிகவும் முக்கிய விஷயம் தேவனுடைய ஆவி. பவுல் தேவனுடைய இராஜ்யம் என்ன என்று விளக்கியதிலிருந்தும் அது என்ன அல்ல என்பதை ஒரு நிமிடம் கவனியாமல் வாசியுங்கள்:
ரோம 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
இன்னும்:
1கொரி 4:20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.
1Co 4:20 For the kingdom of God is not in word, but in power.

தேவனுடைய இராஜ்யம் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் நீதி, சமாதானம், சந்தோஷம், பெலம் என்பவைகளே அல்லாமல் அது ஒரு இடம் என்று எழுதப்பட்டதுண்டா?

தேவனுடைய இராஜ்யம் என்பதும் அழியாமையும் (immortality) ஒன்றுதானா?


தேவனுடைய இராஜ்யமும் அழியாமையும் ஒன்றுதான் என்று கூறுகிற வசனங்கள் எதுவும் இல்லை. அதுவும் அல்லாமல்:
மத் 13:47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
மத் 13:48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
தேவனுடைய இராஜ்யம் அழியாமை ஆயிருந்தால் ஆகாதவைகளும் அழியமைக்கு சேர்க்கப்பட்ட பிறகு எறிந்துபோடுவார்களா? எறிந்துபோடப்படுகிற மீன்கள் அழியவேண்டும் அல்லவா? அழியாமைக்கு சேர்ந்தவைகள் அழியுமா?

தொடரும்...
உங்கள் சகோதரன் டோம்சான் கட்டக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக