கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
மத்தேயு 24ல் இயேசு உலகத்தின் முடிவைப் பற்றியல்ல, யூதர்களின் யுகத்தினுடைய முடிவைப் பற்றித்தான் கூறினார் என்று நாம் சொல்லும்போது, அப்படியானால், முதல் நூற்றாண்டில் யுத்தம், பஞ்சம், பூமியதிர்ச்சி போன்ற விபத்துகள் ஏற்பட்டதுண்டா என்று எதிர்காலவாதிகள் (Futurists) கேட்பார்கள். இந்த கேள்விக்கு உலக வரலாற்றிலிருந்தும் விடை அளிக்கிறதே இப்பதிவின் நோக்கம்.
இந்த பதிவுக்காக ஆராய்ச்சி பண்ணும்போது பைபிள்-ஹப் (Bible Hub) என்னும் இணையதளத்தில் மத் 24:6-7 வசனங்களின் வியாக்கியானங்களை கவனித்தேன். வியாக்கியானங்கள் எழுதின எதிர்காலவாதிகளில் பெரும்பாலும் பேர்கள் இயேசு கூறின
நான் ஒரு வரலாற்று மாணவன் அல்ல, தமிழனுமல்ல; ஆதலால், வரலாற்றில் உள்ள அனைத்து விபரங்களையும் பகிர என்னால் இயலாது.
யூதேயாவில் பஞ்சத்தால் வருத்தப்படுகிற கிறிஸ்துவை பின்பற்றின யூதர்களுக்காக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமிருந்து உணவுபொருட்களை சேர்த்ததை பற்றிய விவரணைகள் பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்கில் பணம் சேர்க்கிற, பங்களா கட்டுகிற, பி.எம்.டபிள்யூ கார் வாங்குகிற பாஸ்டர்களுக்கு, அவ்வசனங்கள் இயேசு உரைத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் என்று எப்படி உணர்ந்துகொள்ளமுடியும்?
வாசியுங்கள்: ரோம 15:25-31; 1கொரி 16:1-16; 2கொரி 9:1-12.

மத் 24:6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
மத் 24:7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
“மத்தியக்கிழக்கு (Middle East) நாடுகளில் எங்கேயோ ஒரு ஒட்டகம் குசு விட்டால் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு வெறிபிடிக்கும்” என்றான் என் நண்பர்களில் ஒருவன். ஒரளவுக்கு அவர் சொன்னது உண்மைதான். கீழ் கொடுத்திருக்கும் வரைபடத்தை பாருங்கள்.
தற்போது உலகத்தில் 4 இடங்களில் உக்கிர யுத்தங்கள் நடக்கிறது, 8 இடங்களில் யுத்தங்கள் நடக்கிறது. ஆகிலும் யாரும் அவைகளை கவனிக்க மாட்டார்கள். ஒருவேளை தொலைக்காட்சியிலோ பத்திரிகையிலோ அமேரிக்கா அல்லது இஸ்ரவேல் ஈடுபடுகிற யுத்தத்தை பற்றிய ஒரு செய்தி வந்தால் உடனே கள்ளத்தீர்க்கதரிசிகள் வேதாகமத்தை திறந்துவைத்து தங்கள் கிளிஜோதிடம் தயாரிக்கத் தொடங்குவார்கள்.
ஏறத்தாழ 12 யுத்தங்கள் நடைபெறுகிற தற்போதிருக்கும் நிலைமையில் யாரோ ஒருவர் யுத்தத்தைப் பற்றி கூறினால் அதில்
அசாதாரணமாக எதுவும் இல்லை. உலக வரலாற்றில் ரோமன் அமைதி (பாக்ஸ் ரொமானா, Pax Romana) என்று அழைக்கப்படுகிற காலத்தில் இயேசு யுத்தத்தைப் பற்றி கூறினார் என்பதே ஆச்சரியம். கி.மு 27க்கும் கி.பி.180க்கும் இடையிலுள்ள காலத்தில் ரோமா பேரரசு, தமக்கு சுற்றிலுமுள்ள சிறு ராஜ்யங்களை கீழ்ப்படுத்தி, அவைகளை தமக்கு திறை செலுத்தும் நாடுகளாக மாற்றினார். இந்த காலத்துக்கு ரோமன் அமைதி என்கிற பெயர் முதன்முறையாக (கி .பி. 55ல்) பயன்படுத்தினவர் லூசியஸ் செனேகா (Lucius Seneca) என்பவர். முற்றிலும் அமைதி நிலைபெற்ற இந்த காலத்தில் தான் இயேசு யுத்தங்களைப் பற்றி முன்னறிவித்தார் என்பதை கவனிக்கவேண்டும்.
மத்தேயு 24ன் இணையான மாற்கு 13ம் அதிகாரத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது:
ஒரு தனிப்பட்ட உரையாடல் (private conversation). இந்த
உரையாடலில் கேள்விப்படுவீர்கள் (you will hear) என்று சொல்லப்பட்டதின் விளக்கம் கி.பி 2016ல் பெங்களூரில் தங்கியிருக்கும் டோம்ஸான் கட்டக்கலோ, சென்னையில் தங்கியிருக்கும் இக்நேஷியஸ் இளங்கோவோ, திருச்சியில் தங்கியிருக்கும் ஜெயசீலனோ கேள்விப்படுவார்கள் என்பதல்ல, யார் இயேசுவிடம் கேள்வி கேட்டார்களோ அவர் கேள்விப்படுவார்கள் என்பதே. வேதாகமத்தை வாசிப்போர்கள் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படும்போது உலகத்தின் முடிவு நடக்கவேண்டுமென்றால் கடந்த 2000± வருடங்ளாக எத்தனையோ கோடி கிறித்தவர்கள் யுத்தத்தின் செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்? அப்பொழுதெல்லாம் உலக முடிவு நடக்கவில்லையே?
தற்போது உலகத்தில் 4 இடங்களில் உக்கிர யுத்தங்கள் நடக்கிறது, 8 இடங்களில் யுத்தங்கள் நடக்கிறது. ஆகிலும் யாரும் அவைகளை கவனிக்க மாட்டார்கள். ஒருவேளை தொலைக்காட்சியிலோ பத்திரிகையிலோ அமேரிக்கா அல்லது இஸ்ரவேல் ஈடுபடுகிற யுத்தத்தை பற்றிய ஒரு செய்தி வந்தால் உடனே கள்ளத்தீர்க்கதரிசிகள் வேதாகமத்தை திறந்துவைத்து தங்கள் கிளிஜோதிடம் தயாரிக்கத் தொடங்குவார்கள்.
ரோமன் அமைதியும் இயேசுவின் எச்சரிப்பும்.
அசாதாரணமாக எதுவும் இல்லை. உலக வரலாற்றில் ரோமன் அமைதி (பாக்ஸ் ரொமானா, Pax Romana) என்று அழைக்கப்படுகிற காலத்தில் இயேசு யுத்தத்தைப் பற்றி கூறினார் என்பதே ஆச்சரியம். கி.மு 27க்கும் கி.பி.180க்கும் இடையிலுள்ள காலத்தில் ரோமா பேரரசு, தமக்கு சுற்றிலுமுள்ள சிறு ராஜ்யங்களை கீழ்ப்படுத்தி, அவைகளை தமக்கு திறை செலுத்தும் நாடுகளாக மாற்றினார். இந்த காலத்துக்கு ரோமன் அமைதி என்கிற பெயர் முதன்முறையாக (கி .பி. 55ல்) பயன்படுத்தினவர் லூசியஸ் செனேகா (Lucius Seneca) என்பவர். முற்றிலும் அமைதி நிலைபெற்ற இந்த காலத்தில் தான் இயேசு யுத்தங்களைப் பற்றி முன்னறிவித்தார் என்பதை கவனிக்கவேண்டும்.
இயேசு யாரிடம் பேசினார்?
மத்தேயு 24ன் இணையான மாற்கு 13ம் அதிகாரத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது:
மாற் 13:3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: (asked him privately - KJV)தனித்துவந்து என்பதின் விளக்கம் என்னவென்றால்: இது இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையில் உண்டான
ஒரு தனிப்பட்ட உரையாடல் (private conversation). இந்த
உரையாடலில் கேள்விப்படுவீர்கள் (you will hear) என்று சொல்லப்பட்டதின் விளக்கம் கி.பி 2016ல் பெங்களூரில் தங்கியிருக்கும் டோம்ஸான் கட்டக்கலோ, சென்னையில் தங்கியிருக்கும் இக்நேஷியஸ் இளங்கோவோ, திருச்சியில் தங்கியிருக்கும் ஜெயசீலனோ கேள்விப்படுவார்கள் என்பதல்ல, யார் இயேசுவிடம் கேள்வி கேட்டார்களோ அவர் கேள்விப்படுவார்கள் என்பதே. வேதாகமத்தை வாசிப்போர்கள் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படும்போது உலகத்தின் முடிவு நடக்கவேண்டுமென்றால் கடந்த 2000± வருடங்ளாக எத்தனையோ கோடி கிறித்தவர்கள் யுத்தத்தின் செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்? அப்பொழுதெல்லாம் உலக முடிவு நடக்கவில்லையே?
அப்போஸ்தலருடைய காலத்தில் நடந்த யுத்தங்கள்.
இந்த பதிவுக்காக ஆராய்ச்சி பண்ணும்போது பைபிள்-ஹப் (Bible Hub) என்னும் இணையதளத்தில் மத் 24:6-7 வசனங்களின் வியாக்கியானங்களை கவனித்தேன். வியாக்கியானங்கள் எழுதின எதிர்காலவாதிகளில் பெரும்பாலும் பேர்கள் இயேசு கூறின
யுத்தங்களும், பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் முதல் நூற்றாண்டிலே நடந்தேறிற்று என்பதாக வலியுறுத்துகிறதை கவனித்தேன்.
நான் ஒரு வரலாற்று மாணவன் அல்ல, தமிழனுமல்ல; ஆதலால், வரலாற்றில் உள்ள அனைத்து விபரங்களையும் பகிர என்னால் இயலாது.
- ஏரோது ராஜாவுக்கும் அவருடைய மாமனாராகிய அரேத்தா ராஜாவுக்கும் (2கொரி 11:32) இடையில் ஏற்பட்ட யுத்தம். ஏரோது ராஜா அரேத்தா ராஜாவின் மகளாகிய தன் மனைவி ஃபசேலிசை அசட்டை செய்து, தன் தம்பியான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்துக்கொண்டிருந்தால் (மத் 14:3) ஃபசேலிச் தன் தகப்பனிடம் ஓடிப்போனாள். கோபம் மூண்ட அரேத்தா தன் படைகளுடன் வந்து ஏரோதுக்கு விரோதமாக யுத்தம்செய்தான். (கி.பி.33-34ல்.)
- காலிகுலா (Caligula) என்னும் ரோமா அரசன் தனது சிலையை எருசலேம் தேவாலயத்தில் வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். யூதர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கோபம் மூண்ட காலிகுலா யூதர்களுக்கு விரோதமாக தன் படைகளை அனுப்புவான் என்கிற செய்தி பரம்பிற்று. விவசாயிகளான யூதர்கள் விவசாயம் பண்ணாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். செய்தி எழும்பினதே அல்லாமல், யுத்தம் உண்டாகவில்லை. (கி.பி.37-41ல்.) (“யுத்தங்களின் செய்திகள்”)
- வென்டிடியஸ் குமானஸ் (Ventidius Cumanus) பண்ணின படுகொலை. குமானஸ் என்ற ரோமன் ஆளனாரின் காலத்தில் பஸ்கா பண்டிகையில் கலந்துகொள்ள தேவாலயத்துக்கு வந்த யூதர்கள் மேல் கெட்ட வார்த்தைகள் சொரிந்த ஒரு போர்ச்சேவகர் மேல்நடவடிக்கை எடுக்க குமானஸ் தயங்கினதால் கோபம் மூண்ட யூதர்கள் ரோமன் காவலர்கள் மேல் கல்லெறிந்தார்கள். அதற்கு குமானஸ் பழிவாங்கினபோது, 20,000-30,000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
- கி.பி.63க்கு முன் செசரியாவில் சீரியர்களும் யூதர்களும் அந்த ஊரின் உடைமையுரிமையை பற்றி வாக்குவாதங்களும் மோதல்களும் ஏற்பட்டது. காலிகுலா, கிலவுதியு, நீரோ என்னும் அரசர்களின் காலங்களில் ஏற்பட்ட மோதல்களில் ஏறத்தாழ 20,000 யூதர்கள் கொலையுண்டார்கள். யூதர்கள் அந்த நாட்டிலிருந்தும் துரத்தப்பட்டார்கள். கோபம் மூண்ட யூதர்கள் சுற்றுபுறத்திலுள்ள சீரியர்களின் ஊர்களை கொள்ளையடித்து, அவர்களை படுகொலை பண்ணினார்கள். செசரியாவிலிருந்தும் ஜனங்கள் (தீரியரும், சீதோனியரும்) முறையிட ஏரோதிடம் வந்ததையும், அவர் ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினதையும் பற்றி அப்பொ 12:20-21ல் வாசிக்கிறோம்.
- சித்தோபாலிஸின் (Scythopolis) ஜனங்கள் தங்களுடைய இனத்தார்களாகிய ஒரு குழுவிடம் போராட யூதர்களை பயன்படுத்தினார்கள். அந்த கழுவை ஒடுக்கின பிறகு, சித்தோபாலிஸின் ஜனங்கள் இரவில் பதிவிருந்து யூதர்கள படுகொலை பண்ணினார்கள். அன்று கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 11,000 பேர். (“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்”!)
- அஷ்கெலோனின் (Ashkelon) கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 2,500 பேர்.
- தாலமாயில் (Ptolemais) கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 2,000 பேர்.
- அலெக்சாண்டிரியாவில் யூதர்களுக்கும் அந்நியஜாதிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஏறப்ட்டது. இரண்டு பக்கத்திலும் ஏராளமான பேர்கள் மாண்டார்கள். கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 50,000.
- பிலதெல்பியா, பாபேல், சீரியா ... யூதர்கள் கொலையுண்ட நாடுகளின் பட்டியலுக்கு முடிவில்லை. , ஃப்லேவியஸ் யோசஃபஸ் (Flavius Josephus) என்கிற யூத வரலாற்றாசிரியர் எழுதின “யூதர்களின் பழங்காலம்” (The Antiquities of the Jews) என்கிற புத்தகத்திலும், டெசிடஸ், ப்லினி, ஃபிலோ போன்ற வரலாற்றாசிரியர்களின் புத்தகங்களிலும் இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பஞ்சங்கள்.
மத் 24:7 ...பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.இந்த வசனம் நிறைவேறினது என்பதற்கு வேதாகமத்திலே அத்தாட்சி கிடைக்கும்.
அப் 11:27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.தொடர்ந்துவரும் வசனங்களில் பஞ்சத்தால் வருத்தப்படுகிறவர்களுக்கு உதவி பண்ணும் படிக்கு சேகரிப்பு நடத்துகிறதை பற்றி வாசிக்கிறோம்.
அப் 11:28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
யூதேயாவில் பஞ்சத்தால் வருத்தப்படுகிற கிறிஸ்துவை பின்பற்றின யூதர்களுக்காக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமிருந்து உணவுபொருட்களை சேர்த்ததை பற்றிய விவரணைகள் பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்கில் பணம் சேர்க்கிற, பங்களா கட்டுகிற, பி.எம்.டபிள்யூ கார் வாங்குகிற பாஸ்டர்களுக்கு, அவ்வசனங்கள் இயேசு உரைத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் என்று எப்படி உணர்ந்துகொள்ளமுடியும்?
வாசியுங்கள்: ரோம 15:25-31; 1கொரி 16:1-16; 2கொரி 9:1-12.
பூமியதிர்ச்சிகள்.
வேதாகமத்துடன் தொடர்புள்ள மிகவும் முக்கியமான பூமியதிர்ச்சி ஏற்பட்டது லவோதிக்கேயாவில் (வெளி 1:11). கி.பி.60ல் உண்டான பூமியதிர்ச்சியில் அந்த பட்டணம் முழுமையாக நாசமடைந்தது.
யூதேயா, கிரேத்தா, ரோம, அப்மீயா, பிரிகியா, கம்பானியா போன்ற இடங்களில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதென்று மேற்சொன்ற வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.
முதல்நூற்றாண்டில் ஏற்பட்ட ஒருசில யுத்தங்களையும், பஞ்சங்களையும், பூமியதிர்ச்சிகளையும் பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். இன்னும் விரிவாக எழுதினால் வாசிப்போர்களுக்கு வாசிப்போர்க்கு சலிப்பாக அமையும் என்று என்று எண்ணுகிறேன்.

கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டக்கல்