கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
கடந்த 2, 3 நூற்றாண்டுகளாய் உலகத்தின் பல மூலைகளிலும் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பினார்கள் என்பது உண்மைதான். போன சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் 5 முதல் 10 வரை கள்ளத்தீர்க்கதரிசனங்கள் முற்றும் தவறானதைப் பார்த்தோம்.
தங்களை தாங்களே கிறிஸ்து என்று உரிமைகோருகிற ஏறத்தாழ 12 பேர்கள் இப்பொழுதும் கூட இருக்கிறார்கள். இப்படியிருக்க, இதுதான் கடைசிக்காலம் என்று யாராகிலும் நினைத்தால் அவர்களை குற்றப்படுத்த முடியாது.
மத்தேயு 24ல் பலமுறை (மத் 24:24:5, 11, 23-24) கள்ளக் கிறிஸ்துக்களையும் கள்ளத்தீர்க்கதரிசிகளையும் பற்றி கூறப்படுள்ளது. பொதுவாக, உலகமுடிவு என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும், நாம் யூதர்களுடைய யுகத்தின் முடிவு என்று வலியுறுத்துகிறதுமாகிய கி. பி. 70க்கு முன் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருந்தார்களா என்கிற கேள்வி மிகவும் தொடர்புடையது.
இயேசுவும் சீடர்களும் வாழ்ந்த தலைமுறையில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருந்தார்களா என்பதைப் பற்றி வேதாகமத்தினுடையும் வரலாற்றினுடையும் அடிப்படையில் நடத்துகிற ஒரு ஆராய்ச்சி தான் இந்த பதிவு.
வேதத்தை படிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்: வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதன் விவரங்கள் வேதாகமத்திலே இருக்கும், அவை நிறைவேறுதல்கள் என்று நமக்கு தெரியாமலிருந்தாலும், நமது சபைகள் (திட்டமிட்டு) நமக்கு கற்றுக்கொடுக்காமல் இருந்தாலும்.
இயேசுவும், புதிய ஏற்பாடின் எழுத்தாளர்களும் எந்த காலத்தைப் பற்றி கடைசிக் காலம் என்று குறிப்பிட்டார்களோ அந்த காலத்தில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருப்பார்கள் என்று சொன்னதைத் தவிர, நீங்கள் அப்படிப்பட்டவர்களை பார்க்கும்போதெல்லாம் கடைசிக் காலமாக அமையும் என்று சொல்லவில்லை. கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பும்போதெல்லாம் கடைசிக் காலம் நடைபெறுமென்றால், இயேசுவின் காலத்துக்கு முன்னும் அப்படிப்பட்டவர்கள் இருந்தார்களே? ஒரு விவசாயி “மழை விழும்போது விதைபோட வேணடும்” என்று சொன்னால், மழை விழும்போதெல்லாம் விதைபோட வேணடும் என்கிற விளக்கம் இருக்குமா?
[எபிரெய மொழியிலுள்ள “மேசியா” என்கிற வார்த்தைக்கு துல்லியமான கிரேக்க வார்த்தைதான் “கிறிஸ்து”. இவ்விரண்டு வார்த்தகளுக்கும் விளக்கம் “அபிஷேகம் பெற்றவர்” என்பதே.]
இயேசுவைப் போல, தம்மைதான் மேசியா என்று உரிமை கோரினவர்களைப் பற்றி யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தில் கமாலியேல் என்கிற பரிசேயன்:
இயேசு பரலோகத்துக்கு எடுக்கப்பட்டு, ஒராண்டுக்குப் பிறகு, தோஸித்தியோஸ் என்னும் சமாரியன் எழும்பி, உபா 18:15ல் கூறப்பட்டிருக்கிற தீர்க்கதரிசி (மேசியா) அவரே என்று உரிமை பாராட்டினான். அவருடைய சீடனாகிய சீமோன் மாக்னஸ் (அப் 8:9ல் மாயவித்தைக்காரனாயிருந்த சீமோன்) தான் “தேவனுடைய வல்லமை” என்று உரிமை பாராட்டினான்.
பேலிக்ஸ் தேசாதிபதியாக இருந்த நாட்களில் யூதேயா நாட்டில் ஏராளமான கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள், நாள்தோறும் அவர்களை பிடித்து, கொலை பண்ணினார்கள். இந்த படுகொலையின் பலனாக பேலிக்ஸுக்கு அவர் பதவி பறிபோனது.
இதே காலத்தில் பேலிக்ஸ் என்னும் பெயரில் இன்னொரு எகிப்தியன் எழும்பி, ஒலிவமலைக்கு வாருங்கள், அங்கேயிருந்தும் நான் எருசலேமின் மேல் என் கையை தூக்குவேன், அப்பொழுது அப் பட்டணத்தின் சுவர்கள் எல்லாம் உடைந்து விழும், நாம் உட்புகுந்து, ரோமர்களின் பாளயத்தை பிடிப்போம் என்று சொல்லி, ஏறத்தாழ 30,000 பேரை ஏமாற்றினான்.
பொர்க்கியு பெஸ்து (அப் 24) தேசாதிபதியாக இருந்த நாட்களில் ஒரு ஏமாற்றுக்காரன் எழும்பி, யூதர்களை ரோம நுகத்தின் கீழிருந்தும் விடுவிப்பேன் என்று வாக்குறுதி அளித்து, அவர்களை வனாந்தருக்கு கூட்டிச்செல்ல முயன்றான். ஆனால், பெஸ்துவின் எச்சரிக்கையினால் ஒரு விபத்து தடைப்பட்டது.
தோஸித்தியோஸ் ஒருவரே தவிர வேறு யாரும் தம்மைத்தாமே கிறிஸ்து அல்லது மேசியா என்று நேரடியாக உரிமை பாராட்டவில்லை என்பதை கவனிக்கவும். மேசியா வரும் எருசலேமில் தனது ராஜ்யத்தை நிலைநாட்டுவார் என்று தவறான எண்ணம் கொண்ட யூதர்கள் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களை நம்பி பின்பற்றினார்கள்.
அப் 13:6ல் பர்யேசு என்னும் தீர்க்கதரிசியயைப் பற்றி வாசிக்கிறோம்.
யோவான் தம்முடைய முதல் நிருபம் எழுதின நாட்களில் கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள் என்று சான்றளிக்கிறார்:
தமிழில் இதைப்போன்ற பதிவுகள் இல்லையென்பதால் மலையாளியான நான் எழுத முயன்றேன், இலக்கண, வழக்க தவறுகள் இருக்கலாம். தயவுசெய்து மன்னிக்கவேண்டும்.

கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும்.
[எபிரெய மொழியிலுள்ள “மேசியா” என்கிற வார்த்தைக்கு துல்லியமான கிரேக்க வார்த்தைதான் “கிறிஸ்து”. இவ்விரண்டு வார்த்தகளுக்கும் விளக்கம் “அபிஷேகம் பெற்றவர்” என்பதே.]
இயேசுவைப் போல, தம்மைதான் மேசியா என்று உரிமை கோரினவர்களைப் பற்றி யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தில் கமாலியேல் என்கிற பரிசேயன்:
அப் 5:36 ... இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.நமது நாட்டில் பொன்னுச்சாமி, முருகன், கமலா போன்ற பெயர்களைப் போல, இஸ்ரவேல் நாட்டில் தெயுதாஸ் என்பது வழக்கமான ஒரு பெயர் என்று தோன்றுகிறது, ஏனென்றால், ஃப்லேவியஸ் யோசஃபஸ் (Flavius Josephus) என்கிற யூத வரலாற்றாசிரியர் எழுதின “யூதர்களின் பழங்காலம்” (The Antiquities of the Jews) என்கிற புத்தகத்தில் இன்னொரு தெயுதாஸைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த தெயுதாஸ் ஈடுபட்ட நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்துக்கு 10-12 ஆண்டுகள்க்கு பிறகு நடந்தது. அந்த தெயுதாஸ் ஏறத்தாழ 30,000 பேரை ஏமாற்றி, யோர்தான் ஆற்றைப் பிரித்து, மறுகரைச் செல்ல வழி உண்டாக்குவார் என்று நம்பவைத்தார். கஸ்பியஸ் ஃபாடுஸ் (Cuspius Fadus) என்ற ரோமன் ஆளுனர் தன் படையை அனுப்பி அவர்களுடைய முயற்சியை தடுத்தார், தெயுதாஸைக் கொலைசெய்தார்.
அப் 5:37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.மேசியா வரும்போது அவர் தங்களை ரோமர்களுடைய ஆட்சியில் நின்றும் விடுவிப்பார் என்பதாக தவறான எண்ணம் கொண்டு இருந்த யூதர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி தன்னைத்தானே மேசியா என்று உரிமை கோரினவர்களாகிய இவர்கள் சுரண்டினார்கள்.
இயேசு பரலோகத்துக்கு எடுக்கப்பட்டு, ஒராண்டுக்குப் பிறகு, தோஸித்தியோஸ் என்னும் சமாரியன் எழும்பி, உபா 18:15ல் கூறப்பட்டிருக்கிற தீர்க்கதரிசி (மேசியா) அவரே என்று உரிமை பாராட்டினான். அவருடைய சீடனாகிய சீமோன் மாக்னஸ் (அப் 8:9ல் மாயவித்தைக்காரனாயிருந்த சீமோன்) தான் “தேவனுடைய வல்லமை” என்று உரிமை பாராட்டினான்.
அப் 8:9 சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.இன்னும் 2, 3 வருடங்களுக்குப் பிறகு மற்றொரு சீமோன் எழும்பி, மோசேயின் காலத்தில் உண்டாக்கின தேவாலயத்துப் பாத்திரங்களை காண்பிப்பேன் என்று கூறி, ஏராளமான பேரை ஏமாற்றினார். ஜனங்களோ மேசியா வந்திருக்கிறார் என்று எண்ணி அவரை பின்பற்றி நாசமடையும் முன் பிலாத்து தலையிட்டு ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தார்.
அப் 8:10 தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். (பிற்பாடு இவன் இயேசுவை ஏற்றுக்கொண்டான்.)
பேலிக்ஸ் தேசாதிபதியாக இருந்த நாட்களில் யூதேயா நாட்டில் ஏராளமான கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள், நாள்தோறும் அவர்களை பிடித்து, கொலை பண்ணினார்கள். இந்த படுகொலையின் பலனாக பேலிக்ஸுக்கு அவர் பதவி பறிபோனது.
இதே காலத்தில் பேலிக்ஸ் என்னும் பெயரில் இன்னொரு எகிப்தியன் எழும்பி, ஒலிவமலைக்கு வாருங்கள், அங்கேயிருந்தும் நான் எருசலேமின் மேல் என் கையை தூக்குவேன், அப்பொழுது அப் பட்டணத்தின் சுவர்கள் எல்லாம் உடைந்து விழும், நாம் உட்புகுந்து, ரோமர்களின் பாளயத்தை பிடிப்போம் என்று சொல்லி, ஏறத்தாழ 30,000 பேரை ஏமாற்றினான்.
பொர்க்கியு பெஸ்து (அப் 24) தேசாதிபதியாக இருந்த நாட்களில் ஒரு ஏமாற்றுக்காரன் எழும்பி, யூதர்களை ரோம நுகத்தின் கீழிருந்தும் விடுவிப்பேன் என்று வாக்குறுதி அளித்து, அவர்களை வனாந்தருக்கு கூட்டிச்செல்ல முயன்றான். ஆனால், பெஸ்துவின் எச்சரிக்கையினால் ஒரு விபத்து தடைப்பட்டது.
தோஸித்தியோஸ் ஒருவரே தவிர வேறு யாரும் தம்மைத்தாமே கிறிஸ்து அல்லது மேசியா என்று நேரடியாக உரிமை பாராட்டவில்லை என்பதை கவனிக்கவும். மேசியா வரும் எருசலேமில் தனது ராஜ்யத்தை நிலைநாட்டுவார் என்று தவறான எண்ணம் கொண்ட யூதர்கள் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களை நம்பி பின்பற்றினார்கள்.
அப் 13:6ல் பர்யேசு என்னும் தீர்க்கதரிசியயைப் பற்றி வாசிக்கிறோம்.
அப் 13:6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.இந்த பர்யேசு செர்கியுபவுல் என்கிற அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடினார் என்பதையும் தொடர்ந்துவரும் வசனங்களில் வாசிக்கிறோம்.
யோவான் தம்முடைய முதல் நிருபம் எழுதின நாட்களில் கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள் என்று சான்றளிக்கிறார்:
1யோவா 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் (இறந்த காலம்), நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.கள்ளக்கிறிஸ்துக்கள் என்கிற வார்த்தையினால் இயேசு அந்திக்கிறிஸ்துக்களை (எதிர்க்கிறிஸ்து என்பதே பொருத்தமுடைய மொழிபெயர்ப்பு) குறிப்பிட்டாரா என்பது தெரியாது. எப்படியாகிலும், யோவான் தம்முடைய நிருபங்களை எழுதின காலத்தில் ஏராளமான அந்திக்கிறிஸ்துக்கள் இருந்தார்கள் என்று சான்றளிக்கிறார்:
1யோவா 2:18 பிள்ளைகளே, இது (யோவான் இதை எழுதின காலம்) கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் (யோவான் இதை எழுதின காலத்தில்) அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.நான் வரலாற்று மாணவரும் அல்ல ஆராய்ச்சியாளரும் அல்ல. வேதாகமத்திலும், பொது தளத்தில் கிடைக்கும் ஃப்லேவியஸ் யோசஃபஸ் எழுதின புத்தகங்களிலுமிருந்து கிடைக்கும் அறிவு தான் எனக்கு இருக்கிறது. இன்னும் பரவலாக வரலாற்றில் ஆராய்ச்சி செய்தவர்கள் இன்னும் விரிவான விவரங்கள் அளிக்கக்கூடும்.
1யோவா 4:3 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் (யோவான் இதை எழுதின காலத்தில்) உலகத்தில் இருக்கிறது.
2யோவா 1:7 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் (யோவான் இதை எழுதின காலத்திலே) உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
தமிழில் இதைப்போன்ற பதிவுகள் இல்லையென்பதால் மலையாளியான நான் எழுத முயன்றேன், இலக்கண, வழக்க தவறுகள் இருக்கலாம். தயவுசெய்து மன்னிக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டக்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக