வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மத்தேயு 24, உலகத்தின் முடிவு, பகுதி #2. “உலகம்”

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,



மத் 24:3ல் உள்ள ஒரு சொற்றொடரை இந்தப் பதிவில் பார்ப்போம்: ...
உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?”
இயேசுவும் சீடர்களும் திருச்சியிலோ, மதுரையிலோ இருக்கவில்லை என்பதாலும், வேதம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்பதாலும் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க (Greek) வார்த்தைகள் எவைகள் என்று கண்டுபிடிக்க வரிகளுக்கிடையே கிரேக்க வார்த்தைகளின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஆங்கில வேதாகமத்தை (interlinear Bible) பயன்படுத்துகிறேன்:
... the sign of thy coming, and of the end[G4930] of the[G3588] world[G165]? (Mat 24:3, KJV)
இங்கே [G165], [G4930] போன்ற எண்கள் அந்தந்த இடங்களில் பயன்படுத்தியிருக்கும் கிரேக்க வார்த்தைகளின் ஸ்ட்ராங்ஸ் எண். (ஜேம்ஸ் ஸ்ட்ராங் - James Strong - என்கிற வேத அறிஞர் தயாரித்த ஸ்ட்ராங்ஸ் அகராதியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எண்.)

மத் 24:3ல் “உலகத்தின் முடிவு” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகள் அதே வரிசையில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனத்தை பார்ப்போம்:
Heb 9:26 ... but now once in the end[G4930] of the[G3588] world[G165] hath he (Jesus) appeared to put away sin by the sacrifice of himself.
இந்த வசனம் தமிழில் மொழிபெயர்த்தோர் “உலகத்தின் முடிவு” என்பதாக மொழிபெயர்க்காமல் “கடைசிக்காலம்” என்பதாக மொழிபெயர்த்ததை கவனியுங்கள்:
எபி 9:26 ... அவர் (இயேசு) தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
  1. பாவங்களை நீக்கும் பொருட்டாக தம்மைத்தாமே பலியிடுகிறதற்கு இயேசு வெளிப்பட்டது 2016லா அல்லது 21ம் நூற்றாண்டிலா?
  2. அப்படி இயேசு வெளிப்பட்ட காலம் “கடைசிக்காலம்” அல்லது “உலகத்தின் முடிவு” என்று அழைக்கப்பட்டிருக்கும்போது, எத்தனை “கடைசிக்காலங்களும்” “உலகத்தின் முடிவுகளும்” இருக்கும்?
  3. தம்மைத்தாமே பலியிட இயேசு வெளிப்பட்டு 30-33 வருடங்களுக்கு பிறகுதானே அந்த பலி நடந்தது? அந்த பலி நடந்ததற்கு ஒரு வாரம் முன் சீடர்கள் யேசுவிடம் பேசினபோது (மத் 24:3) அவர்கள் அவர்களுக்கு நெருங்கியிருக்கும் உலக முடிவைப் பற்றி கேட்டார்களா, அல்லது, 2000 வருடங்களுக்கு அப்புறம் நடக்கவேண்டிய உலக முடிவைப் பற்றி கேட்டார்களா?
  4. இயேசுவின் பலிக்கு ஒருசில வருடங்களுக்கு பிறகு எபிரேயருக்கான நிருபம் எழுதப்பட்டபோது “கடைசிக்காலம்” இன்னமும் நீடித்திருக்கிறது (“இந்தக் கடைசிக்காலத்தில்”) என்பதை கவனியுங்கள். இந்த நிருபம் எழுதப்பட்ட காலமும் கடைசிக்காலம், நாம் உயிரோடிருக்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டும் கடைசிக்காலம் என்றுச் சொன்னால் கடைசிக்காலம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, வேதத்தின் காலமுறை வரிசையின் படி, ஆதாம் முதல் இப்பொழுது வரைக்கும் ஏறத்தாழ 6000 வருடங்களாயிற்று, இந்த 6000 வருடங்களில், 2000+ வருடங்கள் கடைசிக்காலமாக இருக்க வாய்ப்பில்லை. யேசுவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தது அவர்கள் அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் முடிவைப் பற்றியே அல்லாமல், உலகத்தின் முடிவைப் பற்றி அல்லை! இதை எப்படி உணர்ந்துகொள்ள முடியும்? அவர்கள் வாழ்ந்திருந்த காலம் தேவதூதர்களுக்கு கீழ்ப்படுத்தப்பட்டிருந்தது. மீறுதலுக்கு கடினமான தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. (எபி 2). உதாரணமாக, ஏழைகளான குடிமக்களிடம் அமைதியாகப் பேசாமல், அகங்காரத்துடன் அவர்களிடம் பேசின ஏரோது ராஜாவை கர்த்தருடைய தூதன் அடித்ததைப் பற்றி அப் 12ல் வாசிக்கிறோம்.
அப் 12:23 அவன் (ஏரோது ராஜா) தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். (அப் 12:20லிருந்தும் வாசியுங்கள்).
(ஒருவேளை, அனனியாவையும் அவன் அவனுடைய மனைவியாகிய சப்பீராளையும் தண்டித்ததும் தேவனுடைய தூதனாயிருக்கலாம், ஏனென்றால், தேவனுடைய ஆவி உயிரைக் கொடுக்கிறது, உயிரை எடுக்கிறதில்லை.)

நாம் இப்பொழுது அந்த உலகத்தில் அல்லை. நாம் அந்த உலகத்தில் இருந்தோமாகில், நம் மத்தியில் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் பண்ணுகிற அனைவரையும் தேவனுடைய தூதன் அடிக்கவேண்டும். ஏழைகளான விசுவாசிகளின் பணத்தைப் பிடுங்கி, மாளிக கட்டி, பி.எம்.டபிள்யூ (BMW) காரில் சுற்றித்திரிந்து, மீண்டும், ஞாயிற்றுக்கிழமை அந்த ஏழைகளை அவமதிக்குகிற ஏராளமான பாஸ்டர்களை தேவதூதன் அடிக்கவேண்டும்.

இல்லை, நாம், அந்த உலகத்தில் இல்லை, நாம் உயிரோடிருக்கும் உலகத்துக்கு முடிவில்லை (தமிழ் வேதாகமத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படாததால், ஆங்கில வசனத்தை கவனியுங்கள்.)
Eph 3:21 Unto him (God) be glory in the church by Christ Jesus throughout all ages, world without end[G165] [G165]. Amen.
எபே 3:21 சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் (முடிவில்லாத உலகத்திலும்) மகிமை உண்டாவதாக. ஆமென்.

கவனியுங்கள்: மத் 24:3; எபி 9:26; எபே 3:21 போன்ற வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள [G165] என்கிற கிரேக்க வார்த்தையானது: ஏயியோன் (αἰών). இந்த வார்த்தைக்கு “உலகத்தில் மக்கள் தங்கியிருக்கும் வறண்ட நிலம்” என்கிற என்கிற விளக்கம் இல்ல. இந்த வார்த்தையின் அர்த்தம்: “ஊழி” அல்லது “காலப்பிரிவு” (era, epoch) என்பதே. இந்த விளக்கத்துக்கு அத்தாட்சி என்னவென்றால்: “என்றென்றைக்கும்” அல்லது “சதாகாலங்களிலும்” என்கிற விளக்கங்கள் கிடைக்க இந்த வார்த்தை தொடர்ச்சியாக இரண்டு தடவை பயன்படுத்தியிருக்கிறதை பார்க்கலாம்:
Rom 16:27 To God only wise, be glory through Jesus Christ for ever[G165][G165]. Amen.
ரோம 16:27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Rev 4:9 And when those beasts give glory and honour and thanks to him that sat on the throne, who liveth for ever and ever[G165][G165],
வெளி 4:9 மேலும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,...
தேவனுடைய புஸ்தகத்தை ஆராய்ந்து வாசியுங்கள், படியுங்கள், உலகத்துக்கு முடிவில்லை! வேதம் கூறுகிறது யூதர்களின் யுகத்தின் முடிவைப் பற்றியே.


கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக