கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
மத் 24:3ல் சீடர்கள் “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்” என்று யேசுவிடம் கேட்டதில் “இவைகள்” என்னதை குறிக்கிறது? மத்தேயு 21ம் அதிகாரத்தின் இரண்டாவது பாதியில் தொடங்கி, 22, 23 அதிகாரங்கள் முழுதும் இயேசுவுக்கும் வேதபாரகர், பரிசேயர், சதுசேயர் என்பவர்களுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின் விவரணையை வாசிக்கிறோம்.
மத் 21ன் முடிவில் இயேசு ஆசாரியர், பரிசேயர் என்பவர்களிடம் கூறின முக்கியமான கருத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது:
இயேசுவின் வருகைக்கான அடையாளங்களையும், தேவாலயம் இடிக்கப்பட்டுப்போகும் முன் நிகழவேண்டிய அடையாளங்களையும் அவர் தனித்தனியாக பிரித்து கூறவில்லை, மாறாக, இரண்டையும் ஒருமித்து கூறப்பட்டுள்ளது இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒருமித்து, ஒரே காலத்தில் நடக்கவேண்டியது என்பதற்கு அத்தாட்சியாக அமைகிறது.
[தயவுசெய்து, மைக்ரோசாப்ட் எக்செலில் (Microsoft Excel) அல்லது அகலமுள்ள ஓர் காகிதத்தில் (ruled paper) மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 21 என்கிற அதிகாரங்களிலிருக்கும் ஒரே கருத்து தரும் வசனங்களை இணையாக (parallel) எழுதி, ஆய்ந்து படியுங்கள்.]
தேவாலயம் இடித்தது ரோமன் படை என்பது உலக வரலாற்றில் இருக்கும் மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மை மத்தேயு 24ல் இருக்குமா? இருக்கிறது.
மத் 24:15ல் குறிப்பிட்டுள்ள பாழாக்குகிற அருவருப்பைப் பற்றி என்னென்ன கதைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அது ரோமன் கத்தோலிக்க சபை, அவர்கள் இராபோஜனத்துக்கு பயன்படுத்தும் அப்பம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம்.
இந்த ஒரு வசனம் அவர்களுடைய கோட்பாடுகளுக்கு ஒத்துவராததால் ஒருசில கிறித்தவ மேதாவிகள் லூக்காவின் சுவிசேஷம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டதல்லை என்பார்கள். இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் அப்படிப்பட்ட மேதாவி அல்லை என்று எண்ணுகிறேன்.
யுத்தங்கள், யுத்தங்களின் செய்திகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் இயேசுவின் வருகைக்கு முன் நிகழவேண்டும் என்று கூறுகிறார்களே, “இவைகள் (தேவாலயம் கல்லின் மேல் கல்லிராதபடிக்கு இடிக்கப்படுகிறது) சம்பவிக்கும்” முன்னும் அவைகளெல்லாம் நடக்கவேண்டியிருந்தது. இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவாலயம் இடிக்கப்பட்ட காலமும், இயேசுவின் வருகையின் காலமும் வேறுவேறு காலங்கள் அல்லை!

மத் 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். (அவரிடமிருந்து ராஜ்யத்தை நீக்கி, யார்க்கு கொடுக்கப்பட்டது? உங்களுக்கும் எனக்கும். யூதர்களிடம் இன்னும் ராஜ்யம் இருக்கிறதா, அல்லது, அவர்களிடமிருந்து நீக்கப்படவில்லையா, அல்லது அவர்களிடமிருந்து நீக்கப்பட்ட ராஜ்யத்துக்கு என்னாயிற்று?)மத் 22ல் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவைப் பற்றிய உவமையில், கலியாணத்துக்கு வர மறுத்தவர்களின் பட்டணத்துக்கு அந்த ராஜா என்ன பண்ணினார் என்பதை கவனியுங்கள்.
மத் 22:7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். (இந்த வசனம் கி.பி.70ல் நடந்த எருசலேமின் அழிவைப் பற்றி கூறுகிறது என்று ஏறத்தாழ எல்லா வேத அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.)மத்தேயு 23ன் முடிவு மேற்ச்சொன்ன வாக்குவாதத்தின் உச்சகட்டமாக இருக்கிறது. அங்கே இயேசு அவர்களிடம்: ஆபேலின் இரத்தம் முதல் பூமியின் மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள் மேல் வரும் என்று அடித்துச்சொன்ன பிறகு சொன்ன வார்த்தைகளை கவனியும்:
மத் 23:36 இவைகளெல்லாம் (நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம்) இந்தச் சந்ததியின் (சந்ததி என்று மொழிபெயர்த்திருக்கும் கிரேக்க வார்த்தையின் உண்மையான மொழிபெயர்ப்பு: தலைமுறை) மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.இவ்வளவு நீடித்த ஒரு வாக்குவாதத்தை முடித்தபிறகுதான் அவர் தேவாலயத்தை விட்டு புறப்பெட்டு, ஒலிவமலையின் மேல் போய் அமர்ந்துக்கொண்டான். போகும் வழியில்:
மத் 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
மத் 23:38 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். (வீடு = தேவாலயம். மத் 12:4, மாற் 2:26; லூக் 6:4)
மத் 24:1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.இதைப் பற்றித்தான் சீடர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டது கி.பி.70ல், ரோமன் படை அதை இடித்தது. பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ள யுத்தங்கள், யுத்தங்களின் செய்திகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் தேவாலயம் இடிக்கப்படும் முன் நிகழவேண்டியதாக இருந்தது. (இவைகளெல்லாம் நிகழ்ந்ததா, இல்லையா என்பதை ஒவ்வொரு வசனத்தைப் பற்றி படிக்கும்போது பார்க்கலாம்.)
மத் 24:2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசுவின் வருகைக்கான அடையாளங்களையும், தேவாலயம் இடிக்கப்பட்டுப்போகும் முன் நிகழவேண்டிய அடையாளங்களையும் அவர் தனித்தனியாக பிரித்து கூறவில்லை, மாறாக, இரண்டையும் ஒருமித்து கூறப்பட்டுள்ளது இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒருமித்து, ஒரே காலத்தில் நடக்கவேண்டியது என்பதற்கு அத்தாட்சியாக அமைகிறது.
[தயவுசெய்து, மைக்ரோசாப்ட் எக்செலில் (Microsoft Excel) அல்லது அகலமுள்ள ஓர் காகிதத்தில் (ruled paper) மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 21 என்கிற அதிகாரங்களிலிருக்கும் ஒரே கருத்து தரும் வசனங்களை இணையாக (parallel) எழுதி, ஆய்ந்து படியுங்கள்.]
தேவாலயம் இடித்தது ரோமன் படை என்பது உலக வரலாற்றில் இருக்கும் மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மை மத்தேயு 24ல் இருக்குமா? இருக்கிறது.
மத் 24:15ல் குறிப்பிட்டுள்ள பாழாக்குகிற அருவருப்பைப் பற்றி என்னென்ன கதைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அது ரோமன் கத்தோலிக்க சபை, அவர்கள் இராபோஜனத்துக்கு பயன்படுத்தும் அப்பம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம்.
மத் 24:15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,இந்த வசனத்துக்கு இணையான (parallel) வசனத்தை லூக்காவின் சுவிசேஷத்தில் பார்க்கும்போது இப்படி எழுதப்பட்டிருக்கிறதை பார்க்கிறோம்:
மத் 24:16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
லூக் 21:20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.இந்த வசனங்களுக்கு இணைவில்லை என்கிறீர்களா? இந்த வசனங்களுக்கும் பின்வரும் வசனங்களை கவனித்தீர்களா? “அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போ..”.
லூக் 21:21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
இந்த ஒரு வசனம் அவர்களுடைய கோட்பாடுகளுக்கு ஒத்துவராததால் ஒருசில கிறித்தவ மேதாவிகள் லூக்காவின் சுவிசேஷம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டதல்லை என்பார்கள். இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் அப்படிப்பட்ட மேதாவி அல்லை என்று எண்ணுகிறேன்.
யுத்தங்கள், யுத்தங்களின் செய்திகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் இயேசுவின் வருகைக்கு முன் நிகழவேண்டும் என்று கூறுகிறார்களே, “இவைகள் (தேவாலயம் கல்லின் மேல் கல்லிராதபடிக்கு இடிக்கப்படுகிறது) சம்பவிக்கும்” முன்னும் அவைகளெல்லாம் நடக்கவேண்டியிருந்தது. இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவாலயம் இடிக்கப்பட்ட காலமும், இயேசுவின் வருகையின் காலமும் வேறுவேறு காலங்கள் அல்லை!
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டக்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக