ஞாயிறு, 3 மே, 2015

யோபும் சாத்தானும் - பகுதி #003 - பரீட்சைகளைப் பற்றிய யோபின் கருத்து மற்றும் தீமையின் தோற்றுவாய்.

நண்பர்களே,

[என் தாய்மொழி தமிழ் கிடையாது. இந்த பதிவு ஆங்கிலத்தில் எழுதி, தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்குள் எதாவது தவறுகள் இருந்தால் தயவுசெய்து கருத்துக்கள் பிரிவின் (Comments Section) வழியாக எனக்கு தெரிவிக்க வேண்டும்]




ஏறத்தாழ யோபின் புத்தகம் முழுவதும் அந்த புத்தகத்தின் கதாநாயகனாகிய யோபினால் எழுதப்பட்டுள்ளது என்று பொதுவாக எண்ணப்படுகிறது. எல்லா பரீட்சைகளும் ஏற்பட்டது யோபுக்குதான், அவரே புத்தகம் எழுதினார், ஆதலால், அவருக்கு ஏற்பட்ட தீமை எங்கே நின்றும் உண்டானது என்பதைப்பற்றி நம்மை விட, அறிஞர்களை விட, இறையியலாளார்களை விட அவருக்குதான் தெரிஞ்சிருக்க வேண்டும். பரீட்சைகளை பற்றிய அவருடைய கருத்துகள் தான் மற்றெல்லா கருத்துகளை விட விலையேறப்பெற்றது. அவருக்கு ஏற்பட்ட விபத்துகளைப் பற்றிய அவருடைய கருத்துகளை கவனிப்போம்.

யோபுக்கு முதல்முறை ஏற்பட்ட விபத்துகளுக்கு அப்புறம் யோபு சொன்னது:

யோபு 1:21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
யோபு 1:22 இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

கர்த்தர் கொடுத்தார், சாத்தான் எடுத்தார் என்பதாகி யோபு சொல்லவில்லை: மாறாக, அவர் சொன்னது: கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் என்றே. அப்படிச் சொன்னதில் அவர் பாவஞ்செய்யவில்லை. இன்னொரு முறைமையாகச் சொன்னால்: கர்த்தர் கொடுத்தார், சாத்தான் எடுத்தார் என்று சொல்வது பாவம்.


யோபுக்கு இரண்டாம் முறை ஏற்பட்ட விபத்துக்கு அப்புறம் யோபு சொன்னது:

யோப் 2:10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறது போலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை. 

தேவன் கையிலே நன்மையைப் பெற்றுக்கொண்டது போல்  தேவன் கையிலே தீமையையும் பெற்றுக்கொள்வதைப் பற்றியே யோபு பேசுகிறது என்பதற்கு சந்தேகம் இல்லை. தேவன் கையிலே தீமையை பெற்றுக்கொண்டான் என்று சொன்னதில் அவர் பாவம் செய்யவில்லை என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும். இன்னொரு முறைமையாகச் சொன்னால், இன்னொருவரிடத்திலிருந்தும் தீமையை பெற்றுக்கொண்டார் என்று சொல்வது பாவம்.

யோபின் புத்தகத்தின் முடிவில் யோபுக்கு ஏற்பட்ட விபத்துகள் கர்த்தரிடத்திலிருந்தும் உண்டானவை என்பதற்கு அத்தாட்சி கிடைக்கிறது.

யோப் 42:11 ... கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கின் நிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, ....

யோபின் வார்த்தைகளின் படி அல்லது யோபின் கருத்தின் படி அவருக்கு ஏற்ப்பட்ட விபத்துகள் அனைத்தும் கர்த்தரிடத்திலிருந்துமே அல்லாமல் வேறொருவரிடத்திலிருந்தும் உண்டாகவில்லை.

கர்த்தருக்கு சாத்தானுடைய உதவி தேவைப்படுமா?


யோபின் உடம்புக்கு ஏற்ப்பட்ட அதே நோய்தான் இன்னும் சாவுக்குரியதாக எசேக்கியாவுக்கு ஏற்ப்பட்டது.

யோபு 2:7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால்[H7822] அவனை வாதித்தான்.
2ராஜா 20:7 பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்[H7822, பிளவை என்பது பொருந்தாத மொழிபெயர்ப்பு] மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். (ஏசா 38:21 காணவும்)

எசேக்கியாவுக்கு ஏற்ப்பட்ட நோய்யைப் பற்றி வேதத்தில் இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது, ஆனால், அந்த நோய் சாத்தானால் உண்டானது என்பதாக எழுதப்படவில்லை.

எண்ணாகமம் 12ம் அதிகாரத்தில் மிரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாக பேசினப்போது மிரியாம் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டாள். அந்த நிகழ்சி சாத்தானால் ஆனது என்று கூறப்படவில்லை. (ஒருவேளை உடன்பிறப்புகளுள் மூத்தவளாக இருந்ததால் மிரியாம் மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கலாம்)

எலிசா நாகமானின் குஷ்டரோகத்தை கேயாசிக்கு என்றைக்குமாக கொடுத்தபோதும் (2ராஜா 5:27) சாத்தானுடைய தலையிடைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

கர்த்தர் அசரியாவை குஷ்டரோகத்தால் வாதித்ததைப்பற்றி 2ராஜா 15:5ல் வாசிக்கிறோம். அங்கேயும் சாத்தானுடைய தலையிடைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

வலிப்பு நோய் பிடித்த வாலிபனுடைய விஷயத்திலும் 18 வருஷம் கூனியாக இருந்த ஸ்திரீயின் விஷயத்திலும் அவைகள் சாத்தானுடைய அல்லது பிசாசினுடைய வேலையல்லை என்பதை பார்த்தோம். அந்த பதிவுவகளை வாசிக்கவில்லையென்றால் இப்பொழுதே வாசிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். வேறு யாருக்கும் நோய் ஏற்ப்பட்டதற்கு சாத்தான் பொறுப்பாளி என்று எழுதப்படவில்லை.

காரண காரியத் தொடர்புடைய விடைக்காக கெஞ்சுகிற கேள்வி என்னவென்றால்: மேற்சொன்ன அத்தனை பேர்களையும் பாதிக்கிறதற்கு கர்த்தரால் அல்லது தேவனுடைய மனிதர்களால் முடிந்தது; அப்படியிருக்க, யோப் ஒருவரை மட்டும் பாதிக்க சர்வவல்லமையுள்ள தேவனுக்கு சாத்தானுடைய உதவி ஏன் தேவைப்பட்டது?


ஒருவேளை யோபுக்கு ஏற்ப்பட்ட விபத்துகள் மனிதர்களால் உண்டானதாகக் கூடாதா?


இயற்கை சக்திகள் அனைத்தும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது என்றும் அவைகளை  அடக்குகிறது தேவனுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் அடுத்தது என்றும் இந்த தொடரின் முதல் பதிவில் பார்த்தோம். தேவன் நேரடியாகவோ அல்லது தனது உண்மையுள்ள ஊழியக்காரர் வழியாகவோ மனிதர்களை பாதிப்பார் என்பதையும் பார்த்தோம்.

யோபுக்கான விபத்துகளில் ஒன்றில் யோபின் நண்பர்களுள் ஒருவருடைய தலையிடைப் பகுத்தறியக் கூடும்.

யோப் 1:14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்து கொண்டிருக்கையில், 
யோப் 1:15 சபேயர்[H7614] அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 

6ம் அதிகாரத்தில் யோப் சபேயரைப் பற்றி குறிப்பிடுகிறார். 6ம் அதிகாரத்திலிருந்தும் ஒருசில வசனங்களை கவனிப்போம்.

யோப் 6:15 என் சகோதரர் காட்டாறு போல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப் போலக் கடந்துபோகிறார்கள்.
யோப் 6:19 தேமாவின்[H8485] பயணக்காரர் தேடி, சேபாவின்[H7614] பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 

உற்ற நண்பர்கள் (சகோதரர்) மோசம்பண்ணுகிறதைப் பற்றி பிதற்றுகிறார் யோபு. இடையில் அவர் தேமாவையும் சேபாவையும் இணைக்கிறார். ஒருவேளை, யோபு யாரையும் பெயர் சொல்லி பழிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது.

யோபின் நண்பர்களில் ஒருவருடைய பெயர் தேமானியனான[H8489] எலிப்பாச் என்பதை கவனித்தீர்களா? (ஸ்ட்ராங்ஸ் அகராதி இந்த வார்த்தையின் விஷயத்தில் உதவுவதில்லை). யோபின் புத்தகத்தின் முடிவில், யோபுக்கு மறுமொழி அளித்த பிறகு கர்த்தர் தேமானியனான எலிப்பாசை பெயர் சொல்லி அழைத்து தமது மனக்குறைவை அவனிடம் பகிர்ந்துகொண்டது தற்செயலாக உண்டானதல்லை.

யோப் 42:7 ... கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினது போல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

32ம் அதிகாரத்தில் மட்டும் பேசத்தொடங்கின பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூ பூசின் குலத்துக்கு உட்பட்டவன். தேமாவும், பூசும் கர்த்தருடைய கோபத்துக்கு இலக்குகளாக இருக்கிறார் என்கிறார் எரேமியா (எரே 25:23).

பூசியனாகிய எலிகூ ஒரு “தேவனுடைய மனிதனாக” இருந்தாரா?



நாம் வேத மாநாடுகளில் கலந்துக்கொள்ளும்போது அங்கே போதிக்கிறவர்களின் ஒருசில தந்திரங்களை கவனித்திருக்கலாம். பொதுவாக, பெயர்பெற்ற, உயர் கல்வி கற்ற போதகர்கள் முதல்முதலாக போதிப்பார்கள். அதுக்கப்புறம் அவ்வளவு பெயரோ, கல்வியோ இல்லாத ஒருவர் பிரசங்க மேடைக்கு வருவார். முதலிலே போதகம் பண்ணின போதகர்களின் ஒருசில கருத்துகள் இவருக்கு பிடிக்கவில்லை. ஆகிலும் தான் பெயர்பெறாதவனும், உயர் கல்வி இல்லாதவனுமாக இருக்கிறதால் சிறுமையடைந்துகொண்டான். தன் சிறுமையை ஒப்புக்கொண்டும், தனக்கு முன் போதகம் பண்ணினவர்களை விட தான் எதற்கும் உதவாதவன் என்று தெரிவித்தும் போதகம் பண்ணத்தொடங்குவான். இதே தந்திரம் எலிகூ பயன்படுத்தியிருக்கிறதை பார்க்கலாம்:

யோப் 32:6 ... நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன். 
யோப் 32:7 முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். 

இப்படிப்பட்ட போதகர்களுடை அடுத்த தந்திரம் என்னவென்றால்: மெய்யான அறிவும், விவேகமும் கல்லூரிகளிலிருந்தும், விருதுகளிலிருந்தும் வரமாட்டாது, அது தேவனிடத்திலிருந்தும் பரிசுத்த ஆவியினால் வருகிறது என்று சொல்வது. இதைப்போன்ற தந்திரம் எலிகூ பயன்படுத்துகிறதை கவனியுங்கள்.

யோப் 32:8 ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். 
யோப் 32:9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.

எலிகூ இன்னும் ஒரு படி முன்சென்று, யோபுடன் வாதாடுவதில் அவர் தேவனுடைய பேச்சாளராக இருக்கிறார் என்று உரிமை பாராட்டுகிறார்.

Job 33:6 Behold, I am according to thy wish in God's stead: ... [யோப் 33:6 தமிழில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை: சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பு இப்படி: “உன் விருப்பத்தின் (வாயின், வார்த்தையின்) படிக்கு நான் தேவனுக்காக நிற்கிறேன்...”]

இந்த பதிவு இன்னும் பெரியதாகாமல் இருக்கும்படிக்கு, எலீகுவின் வீம்புகள் அனைத்தையும் இங்கே விபரிக்க மாட்டேன். ஆகிலும், ஒரு சராசரி “தேவனுடைய மனிதனுடைய” தந்திரங்கள் அனைத்தும் அவரிடமிருந்தது என்பதே என் கருத்து.

யோபும் அவருடைய வேறு மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கயில் கர்த்தர் பதிலளிக்கவும் இல்லை, எதுவும் பேசவும் இல்லை என்பதை கவனியுங்கள். ஆனால், எலிகூ பேசிமுடிக்கும் முன்னமே கர்த்தர் பெருங்காற்றிலிருந்து மறுமொழி கூறினார்.

யோப் 38:1 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: 
யோப் 38:2 அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? 

தன்னுடைய அறிவும் விவேகமும் தேவனிடத்திலிருந்தும் பரிசுத்த ஆவியினிடத்திலிருந்தும் உண்டானது என்கிற கூற்றை கர்த்தர் தவறு என்று நிரூபித்தார்.

[பழைய ஏற்பாடு இப்போதும் கூட  நடைமுறையில் இருந்தால், நமது போதகர்கள் பேசி முடித்த உடனே கர்த்தர் பெருங்காற்றிலிருந்து இதைப்போன்ற மறுமொழிகள் கூறுவார்.]

என் கருத்து: எலிகூ ஒரு “தேவனுடைய மனிதன்”; ஒருவேளை அவரைப்போல் வேறு எத்தனையோ “தேவனுடைய மனிதர்கள்” யோபின் காலத்தில் இருந்திருக்கலாம்? யோபுக்கான விபத்துகளும் நோய்களும் அவர்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதே.

முடிவுரை:



  • தனக்கு ஏற்பட்ட விபத்துகள் தேவனிடத்திலிருந்தும் உண்டானது என்று பரீட்சைகளால் பாதிக்கப்பட்ட, யோபின் புத்தகத்தை எழுதின யோபுக்கு உறுதி இருந்தது. அறிஞர்களுக்காவது இறையியலாளார்களுக்காவது யோபுக்கு என்ன எற்பட்டது என்று யோபை விட கூடுதலாக  தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.


  • இயற்கை சக்திகள் அனைத்தும் தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது. அவைகளை  அடக்குகிறது தேவனுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் அடுத்தது.


  • யோபுக்கு ஏற்பட்ட விபத்துகளில் அவருடைய நண்பர்களுக்கு தலையீடு இருந்தது என்பதற்கு யோபின் புத்தகத்தில் அத்தாட்சி இருக்கிறது.
  • ஒருவரை நோய்களால் அல்லது விபத்துகளால் பாதிக்கிறதற்கு ஒரு தேவனுடைய மனிதன் தேவையாக இருந்தால் யோபின் காலத்தில் தேவனுடைய மனிதர்கள் இருந்தார்கள் என்பதை பார்த்தோம்.


தொடரும்...

கர்த்தருக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக