நண்பர்களே,
இது யோபும் சாத்தானும் என்னும் தொகுதியின் 2ம் பகுதி. 1ம் பகுதியை இங்கே வாசிக்கலாம்.
இந்த பதிவில் ஏன் சாத்தான் பரலோகத்தில் கர்த்தருடைய சந்நிதிக்கு சேரக்கூடாது என்பதை விவரிப்பேன்.
இந்த வசனத்தில் “கர்த்தருடைய சந்நிதி” என்கிற சொற்றொடர் கேட்கும்போதே இந்த நிகழ்சி பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் இருக்கும் அறையில் நடந்தது என்கிற எண்ணம் பெரும்பாலும் கிறித்தவர்களுக்கு உண்டாகிறது. அந்த புரிந்துகொள்ளுதல் சரியானதா என்பதை கவனிப்போம்.
சவுலை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக நியமிக்கும் முன் சாமுவேல் அவர்களிடம்:
மேற்சொன்ன புரிந்துகொள்ளுதல் சரியானதாக இருந்தால் சாமுவேலின் காலத்தில் இருந்த ஏறத்தாழ 13 லக்ஷத்துக்கு மேற்பட்ட (2சாமு 24:9) மனிதர்கள் பரலோகத்தில் கர்த்தருடைய சிங்காசனம் இருக்கும் அறைக்கு போகவேண்டயதாக இருக்கும். அப்படி நடந்ததுண்டா? முன்னும் பின்னும் உள்ள வசனங்களை கவனித்தால் இந்த நிகழ்சி நடந்தேறினது மிஸ்பாவில் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
மிஸ்பா பரலோகத்தில் அல்லை, அது இஸ்ரவேலிலுள்ள ஒரு இடம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.
பிள்ளைப்பேறுக்கு பிறகு பெண்களின் சுத்திகரிப்பைப் பற்றி லேவியாகமம் 12ம் அதிகாரத்திலிருந்தும்:
சுத்திகரிக்கப்படவேண்டிய பெண் கொண்டுவருகிற ஆட்டுக்குட்டியையும் காட்டுப்புறாவையும் ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட வேண்டும். ஒரு வருடம் 1000 பேருக்கு ஏறத்தாழ 30 குழந்தைகள் பிறக்கும் என்று புள்ளியியல். மோசை இந்த கட்டளையை எழுதினபோது இஸ்ரவேலில் யுத்தத்துக்கு புறப்படத்தக்க வயதுள்ள 6 லக்ஷம் ஆண்கள் இருந்தார்கள். ஏறத்தாழ அவ்வளவு பெண்களும் இருக்கவேண்டும்; அதாவது 12 லக்ஷம் பேர்கள். மேற்சொன்ன கணக்கின் படிக்கு இந்த 12 லக்ஷம் பேர்களுக்கு ஒரு வருடம் 3,600 குழந்தைகள் பிறக்கும். இவர்களுக்காக பலிசெலுத்தும்படிக்கு ஆசாரியர் 3,600 ஆட்டுக்குட்டிகளையும், 3,600 காட்டுப்புறாக்களையும் எடுத்துக்கொண்டு பரலோகத்துக்கு போகுவாரா?
மாதவிடாய் முடிந்து சுத்திகரிக்கப்படவேண்டிய பெண் கொண்டுவருகிற இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை ஆசாரியர் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடவேண்டும் (லேவி 15:30). அதாவது, இஸ்ரவேலில் அப்பொழுதிருந்த 6 லக்ஷம் பெண்களுக்காக ஒவ்வொரு மாதவும் 12 லக்ஷம் காட்டுப்புறாக்களுடன் பலிசெலுத்த ஆசாரியர் பரலோகத்துக்கு போகுவாரா? (இதைப்போன்ற ஏராளமான உதாரணங்களை இன்னும் எடுத்துரைக்கலாம்.)
மேற்சொன்ன சூழமைவுகளில் “கர்த்தருடைய சந்நிதி” என்கிற சொற்றொடருக்கு ஆசரிப்புக்கூடாரம் அல்லது தேவாலயம் (லேவி 12:6; 15:29) என்று உணர்ந்துகொள்ள உங்களுக்கு பகுத்தறிவிருக்குமே? யோப் 1, 2 அதிகாரங்களை வாசிக்கும்போது அங்கேயும் “கர்த்தருடைய சந்நிதி” என்பதற்கு ஆசரிப்புக்கூடாரம் அல்லது தேவாலயம் என்றுதான் விளக்கம் என்று உணர்ந்துகொள்ள முடியாதபடிக்கு உங்களுடைய பகுத்தறிவுக்கு என்னவாயிற்று?
யோபின் காலத்துக்கு முன் எப்பொழுதோ சாத்தான் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தார் என்றும் தேவன் அவனை பூமிக்கு கொட்டினார் என்றும்தானே கிறித்தவர்களின் போதனை? அப்படி பூமிக்கு கொட்டப்பட்ட சாத்தான் எப்படி திரும்பவும் பரலோகத்துக்குச் சேருவான்?
பாவம் பண்ணின ஆதாமையும் ஏவாளையும் ஏதேனில் நின்றும் துரத்தினபோது அவர்கள் திரும்பவும் ஏதேன் தோட்டத்துக்குச் சேராதபடிக்கு கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்த (ஆதி 3:24) தேவனுக்கு, பரலோகத்திலிருந்தும் துரத்தப்பட்ட சாத்தான் திரும்பவும் அங்கே செராதபடிக்கு பாதுகாப்பு ஏற்படுத்த முடியவில்லையா? உங்கள் தேவனுடைய பாதுகாப்பு அமைப்பைப் (security system) பற்றி கொஞ்சம் விபரிக்கக்கூடுமா?
கீழ்வரும் வசனங்களை 2-3 தடவை வாசியுங்கள்:
இந்த வசனங்களுக்கு அடிக்குறிப்பாக “சாத்தானைத் தவிர” என்று எழுதப்பட்டுள்ளதா?
ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிற சாத்தானுக்கும் தேவனுக்கும் தொடர்பு என்ன?

கர்த்தருடைய சந்நிதி
யோபு 1:6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
இந்த வசனத்தில் “கர்த்தருடைய சந்நிதி” என்கிற சொற்றொடர் கேட்கும்போதே இந்த நிகழ்சி பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் இருக்கும் அறையில் நடந்தது என்கிற எண்ணம் பெரும்பாலும் கிறித்தவர்களுக்கு உண்டாகிறது. அந்த புரிந்துகொள்ளுதல் சரியானதா என்பதை கவனிப்போம்.
சவுலை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக நியமிக்கும் முன் சாமுவேல் அவர்களிடம்:
1சாமு 10:19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான்.
மேற்சொன்ன புரிந்துகொள்ளுதல் சரியானதாக இருந்தால் சாமுவேலின் காலத்தில் இருந்த ஏறத்தாழ 13 லக்ஷத்துக்கு மேற்பட்ட (2சாமு 24:9) மனிதர்கள் பரலோகத்தில் கர்த்தருடைய சிங்காசனம் இருக்கும் அறைக்கு போகவேண்டயதாக இருக்கும். அப்படி நடந்ததுண்டா? முன்னும் பின்னும் உள்ள வசனங்களை கவனித்தால் இந்த நிகழ்சி நடந்தேறினது மிஸ்பாவில் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
1சாமு 10:17 சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,...
மிஸ்பா பரலோகத்தில் அல்லை, அது இஸ்ரவேலிலுள்ள ஒரு இடம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.
ஆட்டுக்குட்டிகளுக்கும் காட்டுப்புறாக்களுக்கும் ஓசியில் ஒரு பரலோக பயணம்?!
பிள்ளைப்பேறுக்கு பிறகு பெண்களின் சுத்திகரிப்பைப் பற்றி லேவியாகமம் 12ம் அதிகாரத்திலிருந்தும்:
லேவி 12:6 அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
லேவி 12:7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள்...
சுத்திகரிக்கப்படவேண்டிய பெண் கொண்டுவருகிற ஆட்டுக்குட்டியையும் காட்டுப்புறாவையும் ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட வேண்டும். ஒரு வருடம் 1000 பேருக்கு ஏறத்தாழ 30 குழந்தைகள் பிறக்கும் என்று புள்ளியியல். மோசை இந்த கட்டளையை எழுதினபோது இஸ்ரவேலில் யுத்தத்துக்கு புறப்படத்தக்க வயதுள்ள 6 லக்ஷம் ஆண்கள் இருந்தார்கள். ஏறத்தாழ அவ்வளவு பெண்களும் இருக்கவேண்டும்; அதாவது 12 லக்ஷம் பேர்கள். மேற்சொன்ன கணக்கின் படிக்கு இந்த 12 லக்ஷம் பேர்களுக்கு ஒரு வருடம் 3,600 குழந்தைகள் பிறக்கும். இவர்களுக்காக பலிசெலுத்தும்படிக்கு ஆசாரியர் 3,600 ஆட்டுக்குட்டிகளையும், 3,600 காட்டுப்புறாக்களையும் எடுத்துக்கொண்டு பரலோகத்துக்கு போகுவாரா?
மாதவிடாய் முடிந்து சுத்திகரிக்கப்படவேண்டிய பெண் கொண்டுவருகிற இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை ஆசாரியர் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடவேண்டும் (லேவி 15:30). அதாவது, இஸ்ரவேலில் அப்பொழுதிருந்த 6 லக்ஷம் பெண்களுக்காக ஒவ்வொரு மாதவும் 12 லக்ஷம் காட்டுப்புறாக்களுடன் பலிசெலுத்த ஆசாரியர் பரலோகத்துக்கு போகுவாரா? (இதைப்போன்ற ஏராளமான உதாரணங்களை இன்னும் எடுத்துரைக்கலாம்.)
மேற்சொன்ன சூழமைவுகளில் “கர்த்தருடைய சந்நிதி” என்கிற சொற்றொடருக்கு ஆசரிப்புக்கூடாரம் அல்லது தேவாலயம் (லேவி 12:6; 15:29) என்று உணர்ந்துகொள்ள உங்களுக்கு பகுத்தறிவிருக்குமே? யோப் 1, 2 அதிகாரங்களை வாசிக்கும்போது அங்கேயும் “கர்த்தருடைய சந்நிதி” என்பதற்கு ஆசரிப்புக்கூடாரம் அல்லது தேவாலயம் என்றுதான் விளக்கம் என்று உணர்ந்துகொள்ள முடியாதபடிக்கு உங்களுடைய பகுத்தறிவுக்கு என்னவாயிற்று?
ஏன் சாத்தான் பரலோகத்தில் கர்த்தருடைய சந்நிதிக்கு சேரக்கூடாது?
யோபின் காலத்துக்கு முன் எப்பொழுதோ சாத்தான் தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தார் என்றும் தேவன் அவனை பூமிக்கு கொட்டினார் என்றும்தானே கிறித்தவர்களின் போதனை? அப்படி பூமிக்கு கொட்டப்பட்ட சாத்தான் எப்படி திரும்பவும் பரலோகத்துக்குச் சேருவான்?
பாவம் பண்ணின ஆதாமையும் ஏவாளையும் ஏதேனில் நின்றும் துரத்தினபோது அவர்கள் திரும்பவும் ஏதேன் தோட்டத்துக்குச் சேராதபடிக்கு கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்த (ஆதி 3:24) தேவனுக்கு, பரலோகத்திலிருந்தும் துரத்தப்பட்ட சாத்தான் திரும்பவும் அங்கே செராதபடிக்கு பாதுகாப்பு ஏற்படுத்த முடியவில்லையா? உங்கள் தேவனுடைய பாதுகாப்பு அமைப்பைப் (security system) பற்றி கொஞ்சம் விபரிக்கக்கூடுமா?
கீழ்வரும் வசனங்களை 2-3 தடவை வாசியுங்கள்:
சங் 5:4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
சங் 5:5 வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
சங் 11:5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
இந்த வசனங்களுக்கு அடிக்குறிப்பாக “சாத்தானைத் தவிர” என்று எழுதப்பட்டுள்ளதா?
யோவா 8:44 ... அவன் [பிசாசு] ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான் ...பொய்க்குப் பிதாவானவனுக்கும் சத்தியத்துக்கு (இயேசுவுக்கு) பிதாவானவருக்கும் தொடர்பு என்ன?
ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிற சாத்தானுக்கும் தேவனுக்கும் தொடர்பு என்ன?
1யோவா 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;...
2கொரி 6:14 ... நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
தொடரும்...
கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக