நண்பர்களே,
ஏராளமான இறையியலாளர்களும் போதகர்களும் 2கொரி 12:7ல் பவுல் கூறுகிற “மாம்சத்திலே முள்” என்ன என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் வேறுவேறு முடிவுகளை அடைந்துள்ளனர். அவர்களுடைய முடிவுகளைப்பற்றி உணர்ந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் என் கவனத்துக்கும் அவர்களுடைய கவனத்துக்கும் மாறுபாடுகள் இருக்கிறது. நாம் இப்பொழுது இந்த வசனத்தை வேறொரு முறையாக பார்க்கப்போகிறோம்.
ஏராளமான இறையியலாளர்களும் போதகர்களும் 2கொரி 12:7ல் பவுல் கூறுகிற “மாம்சத்திலே முள்” என்ன என்பதைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் வேறுவேறு முடிவுகளை அடைந்துள்ளனர். அவர்களுடைய முடிவுகளைப்பற்றி உணர்ந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் என் கவனத்துக்கும் அவர்களுடைய கவனத்துக்கும் மாறுபாடுகள் இருக்கிறது. நாம் இப்பொழுது இந்த வசனத்தை வேறொரு முறையாக பார்க்கப்போகிறோம்.
2கொரி 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையின் நிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
எளிதாகச் சொன்னால், பவுல் கூறுகிற கருத்து என்னவென்றால்.
- அவருக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாடுகளைப்பற்றி அவர் மிதமிஞ்சி பெருமைபாராட்டாதபடிக்கு அவருக்கு ஒரு உடல் கோளாறு அளிக்கப்பட்டது என்கிறார் பவுல்.
(தேவனிடத்திலிருந்தும் ஏதோ கொஞ்சம் வெளிப்பாடுகள் பெற்றுக்கொண்டார்கள் என்று எண்ணி, பெருமைபாராட்டுகிற போதகர்களை நமது சுற்றிலும் பார்க்கிறதில்லையா?) - தனக்கு ஏற்பட்ட உடல் கோளாறை பவுல் "சாத்தானுடைய தூதன்" என்று அழைத்து, அந்த உடல் கோளாற் அவர் பெருமைபாரட்டாதபடிக்கு அவரை தடுக்கிறது என்கிறார்.
இந்த வசனத்தின் கருத்தை விளக்கும்படிக்கு நான் என்னையே ஒரு உதாரணமாக காண்பிக்கிறேன். எனக்கு தேவனிடத்திலிருந்தும் ஏராளமான வெளிப்பாடுகள் கிடைத்திருக்கிறது என்று ஒரு நிமிடம் நினையுங்கள். ஆனால், எனக்கு ஒரு பேச்சு கோளாறு இருக்கிறது (திக்குவாய்). அந்த பேச்சு கோளாறு பெருமைபாராட்டுகிறதில் நின்றும் என்னை தடுக்கிறது. என்னை தடுக்கிற அந்த பேச்சு கோளாறை நான் என் கலாச்சாரத்தின்படிக்கு நான் சாத்தானுடைய தூதன் என்று அழைக்கிறேன். நான் என்ன பெயரிட்டு அழைத்தாலும், அது என்னை பெருமைபாராட்டுகிறதிலிருந்தும் தடுக்கிறது என்பது நல்லதும் நேரானதும் அல்லவா?
சாத்தானுடைய தூதன் என்று என்னதைப் பற்றி கூறினதோ அது கூறினவருக்கு நேரான, நல்ல பயன் அளிக்கிறது. கிறித்தவர்கள் போதிக்கிற சாத்தான் குற்றஞ்சாட்டுகிறவனும், தேவனுக்கும் மனிதர்களுக்கும் எதிரியும் அல்லவா? அப்படிப்பட்ட சாத்தானிலிருந்தும் நல்லதும் நேரானதுமான பயன் உண்டாகிறதற்கு வாய்ப்பிலையே! அதேவேளையில், நல்லது அனைத்தும் தேவனிடத்திலிருந்தும் வருகிறது, அல்லவா?
தேவனுடைய மனிதன் நல்லது பண்ணும்படிக்கு சாத்தான் அவனுடைய மாம்சத்துக்குள் முட்களை நுழைக்கமாட்டார். இந்த வசனம் சாத்தான் என்கிற ஒரு நபர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறதில்லை; மாறாக, எழுத்தாளருடைய கலாச்சாரம், அவர் பயன்படுத்துகிற வழிமொழிகள் என்பவைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது.
தொடரும்...
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக